பிற விளையாட்டு
400 மீட்டர் தடை ஓட்டப்பந்தயத்தில் தலிலா முஹம்மது உலக சாதனை
அமெரிக்க சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதி நாளில் 400 மீ. தடை ஓட்டபந்தயத்தில் தலிலா முஹம்மது உலக சாதனையை முறியடித்தார்.
வாஷிங்டன்,
அமெரிக்காவின் லோவாவில் உள்ள டெஸ் மொயினில் நடந்த இறுதி போட்டியில் தலிலா முஹம்மது பந்தய தூரத்தை 52.20 வினாடிகளில் கடந்து உலக சாதனை நிகழ்த்தினார்.
2003 ஆம் ஆண்டில் ரஷ்யாவின் யூலியா பெக்கோன்கினா செய்த முந்தைய சாதனையை 0.14 வினாடிகள் குறைவாக கடந்து சாதனையை முறியடித்தார்.
கருத்துகள்