முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஆகஸ்ட், 2020 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

ஒரு மணி நேரத்தில் இரண்டு விபத்துக்கள்

*ஒரு மணி நேரத்தில் இரண்டு விபத்துக்கள்*   திண்டுக்கல் மாவட்டம், பழனி வட்டம், ஆயக்குடி முதல் கள்ளிமந்தயம் வரை தார்சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது. பள்ளிக்கூடத்தின் வலசு பிரிவு அருகே 8 45 pm மணி அளவில் ஒரு விபத்து 9.30 pm மணி அளவில் ஒரு விபத்து. பள்ளிக்கூடத்தின் வலசு பிரிவு அருகே கடந்த வாரம் அவர்கள் போட்ட தார் சாலையில் கூட்டு குடிநீர் குழாய் உடைந்துள்ளது அதை சரி செய்வதற்காக இரண்டு பக்கங்களில் செம்மண் கொட்டி வைக்கப்பட்டுள்ளது.அதற்கு எந்த ஒரு முன்னெச்சரிக்கை பலகை எதுவுமே இருக்காது. இப்படி எதிர்பாராதவிதமாக நடந்ததுதான் இந்த விபத்து எனவே தார்சாலை பணியில் வேலை செய்யும் மேற்பார்வையாளர் மற்றும் ஒப்பந்ததாரர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

ஆன்லைன் மூலம் அமைப்பு சாரா தொழிலாளர்கள் விண்ணப்பிக்கும் வசதியை அமைச்சர் தொடங்கி வைத்தார்

தமிழ்நாடு ஆன்லைன் மூலம் அமைப்பு சாரா தொழிலாளர்கள் விண்ணப்பிக்கும் வசதியை அமைச்சர் தொடங்கி வைத்தார் தமிழகத்தில் அமைப்பு சாரா தொழிலாளர்கள் நலத்திட்ட உதவிகளுக்கு இணையதளம் மூலம் விண்ணப்பிக்கும் வசதியை தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபில் சென்னை தலைமை செயலகத்தில் தொடங்கி வைத்தார்.  தொழிலாளர்கள் தங்களை பதிவு செய்ய மற்றும் புதுப்பிக்க மற்றும் மகப்பேறு, திருமணம், இறப்பு உள்ளிட்டவற்றிற்கு நலத்திட்ட உதவிகள் பெற ஆணையத்திற்கு நேரடியாக சென்று விண்ணப்பிக்க வேண்டிய நிலை இருந்தது. ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் அதனை தடுக்கும் பொருட்டு, ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் வசதியை அமைச்சர் நிலோபர் கபில் அறிமுகம் செய்து வைத்தார். அந்த வகையில் தொழிலாளர்கள் இனிமேல் புதிதாக பதிவு செய்வது, பதிவை புதுப்பிப்பது, நலத்திட்ட உதவிகளுக்கு விண்ணப்பித்தல், மனுக்களில் திருத்தம் மேற்கொள்ளுதல், மாவட்டங்களுக்கு இடையேயான உறுப்பினர் பதிவு ஆகியவற்றை  https://labour.tn.gov.in/  என்ற இணையதளம் மூலம் மேற்கொள்ளலாம்.                              இணை ஆசிரியர்                                  ஆ.சூரியா                      சுனாமிசுடர் ம

கீழடியில்

கீழடியில் கிடைத்தனவும், கிடைக்காதனவும் தென்மாநிலத்தில் தொல்லியல் ஆய்வுகளே நடக்காதிருந்த நிலையில், மதுரைக்குத் தென்கிழக்கே 12 கி.மீ. தொலைவில் கீழடி மணலுார் கண்மாயை அடுத்துள்ள தென்னந்தோப்பில் தொல்லியல் ஆய்வை முதன்முதலாக மத்திய தொல்லியல் அதிகாரி அமர்நாத் ராமகிருஷ்ணன் தொடங்கி வைத்தார். மிகவும் தொன்மையான 2600 வருடங்களுக்கு முற்பட்ட நகர நாகரிகம் ஒன்றைத் தோண்டிக் கண்டறிந்து வெளிக் கொணர்ந்தார்.கீழடியில் பூமிக்குள் புதைந்துள்ள தமிழரின் தொன்மையான நகரைக் கண்டு உலகமே வியந்தது.அமர்நாத் மேற்கொண்ட ஆய்வைத் தொடர்ந்து தமிழக அரசின் தொல்லியல்துறையினர் பள்ளிச்சந்தை கொந்தகை, மணலுார், அகரம் போன்ற கிராமங்களிலும் தொடர்ந்து அகழாய்வு செய்து வருகின்றனர். தமிழரின் தொன்மையான நகரநாகரிகத்தை உலகறியச் செய்த மத்திய, மாநிலத் தொல்லியல் துறையினருக்கு நன்றி தெரிவித்துக் கொள்வோம். கிடைத்தன கீழடி அகழாய்வில் சங்கத்தமிழ் எழுத்துகள் பொறிக்கப்பெற்ற பானை ஓடுகள், முதுமக்கள் தாழிகள், மனிதரின் மண்டையோடுகள், குழந்தைகளின் எலும்புகள், மிகப் பெரிய விலங்கின் எலும்பு, நத்தை ஓடுகள், நாணயங்கள், பன்றிச் சின்னம் பொறிக்கப்பட்ட பவள முத்திரை, சுட