முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஜூலை, 2022 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

covid-19 தடுப்பூசிகளை கொண்டு கிறிஸ்துமஸ் விழிப்புணர்வு குடில் அமைத்து சுந்தரராசு உலக சாதனை

  covid-19 தடுப்பூசிகளை கொண்டு கிறிஸ்துமஸ் விழிப்புணர்வு குடில் அமைத்து சுந்தரராசு உலக சாதனை படைத்தார் புதுச்சேரி அரியாங்குப்பம் உப்புக்கார வீதியில் வசிக்கும் சுந்தரராசு என்பவர் தனது வீட்டில் கோவிட் தடுப்பூசி மாதிரி ஊசி மற்றும் பாட்டில்களைக் கொண்டு குடில் அமைத்து 100% கோவிட் தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளார் . இந்து மதத்தைப் பின்பற்றி வரும் புதுச்சேரி நோணாங்குப்பம் மேல்நிலைப் பள்ளியில் பணிபுரியும் நுண்கலை ஆசிரியர் சுந்தரராசு ஒவ்வொரு ஆண்டும் குடில் அமைத்து வருவதை வழக்கமாகக் கொண்டுள்ளார் . இதற்கு முன்பு 1 கன செ . மீ கிறிஸ்துமஸ் குடில் செய்து அசிஸ்ட் வேர்ல்டு ரெக்கார்டு சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார் . அதைத் தொடர்ந்து காய்கறிகளால் குடில் , குடிதண்ணீர் பிளாஸ்டிக் பாட்டில்களால் வடிவமைத்து குடில் , தேங்காய்களை கொண்டு வடிவமைத்து குடில் , தானியங்களை கொண்டு வடிவமைத்து குடில் , 700 புத்தகங்களை கொண்டு வடிவமைத்து குடில் , என வித்தியாசமாக ஆண்டுதோறும் செய்து வருவது வழக்க