முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

covid-19 தடுப்பூசிகளை கொண்டு கிறிஸ்துமஸ் விழிப்புணர்வு குடில் அமைத்து சுந்தரராசு உலக சாதனை

 

covid-19 தடுப்பூசிகளை கொண்டு கிறிஸ்துமஸ் விழிப்புணர்வு குடில் அமைத்து சுந்தரராசு உலக சாதனை படைத்தார்


புதுச்சேரி அரியாங்குப்பம் உப்புக்கார வீதியில் வசிக்கும் சுந்தரராசு என்பவர் தனது வீட்டில் கோவிட் தடுப்பூசி மாதிரி ஊசி மற்றும் பாட்டில்களைக் கொண்டு குடில் அமைத்து 100% கோவிட் தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளார்.


இந்து மதத்தைப் பின்பற்றி வரும் புதுச்சேரி நோணாங்குப்பம் மேல்நிலைப் பள்ளியில் பணிபுரியும் நுண்கலை ஆசிரியர் சுந்தரராசு ஒவ்வொரு ஆண்டும் குடில் அமைத்து வருவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். இதற்கு முன்பு 1 கன செ.மீ கிறிஸ்துமஸ் குடில் செய்து அசிஸ்ட் வேர்ல்டு ரெக்கார்டு சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார். அதைத் தொடர்ந்து காய்கறிகளால் குடில், குடிதண்ணீர் பிளாஸ்டிக் பாட்டில்களால் வடிவமைத்து குடில், தேங்காய்களை கொண்டு வடிவமைத்து குடில், தானியங்களை கொண்டு வடிவமைத்து குடில், 700 புத்தகங்களை கொண்டு வடிவமைத்து குடில்,என வித்தியாசமாக ஆண்டுதோறும் செய்து வருவது வழக்கம். கடந்த ஆண்டு 1000 துணிப்பைகளை கொண்டு குடில் மற்றும் பல்வேறு வகையான திண்பண்டங்களை கொண்டு செய்யப்பட்ட கிறிஸ்துமஸ் குடில் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒன்பதாவது ஆண்டாக

இதனைத் தொடர்ந்து ஒன்பதாவது ஆண்டாக இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் பண்டிகையை தனது வீட்டில் வித்தியாசமான முறையில் கோவிட்19 தடுப்பூசி அனைவரும் போட்டுக்கொள்ள வேண்டும் என்ற விழிப்புணர்வை மையமாகக் கொண்டு நான்கு அடி உயரமான அளவில் மருந்து செலுத்தும் ஊசியையும், இரண்டு அடி பெரிய அளவில் மாதிரி கோவிட் மருந்து பாட்டில் உருவாக்கி அந்த கோவிட் 19 மருந்து பாட்டிலில் உட்பகுதியில் மாட்டுத்தொழுவத்தில் குழந்தை இயேசு பிறப்பது போல் மற்றும் நட்சத்திரங்கள் ஒளிப்பது போல அதில் மாதா,சூசையப்பர்,ஆடு மாடு,கழுதை, ஒட்டகம் போன்றவை உள்ளது போல் குடில் வடிவமைத்துள்ளார். மேலும் கிருஸ்துமஸ் மரம் மற்றும் நிலப்பகுதிகளுக்கு மருந்து ஊசியை கொண்டு வழிப்பாதை செல்வதுபோல் அதில் ராஜாக்கள் பரிசுப் பொருள்கள் எடுத்துக் கொண்டு வருவது போல் பல்வேறு வகையான மின் வண்ண விளக்குகளை கொண்டு குடில் அமைக்கப்பட்டுள்ளது.

covid-19 தடுப்பூசி விழிப்புணர்வு 

இதில் கிறிஸ்துமஸ் தாத்தா டாக்டர் (மருத்துவர்)போல் உடை அணிந்து கொண்டு முகக் கவசம் போட்டுக் கொண்டு,
ஒரு கையில் ஊசி மற்றொரு கையில் கொரானா கோவிட்-19 தடுப்பூசி வைத்துக்கொண்டு மக்களுக்கு கோவிட்-19 தடுப்பூசி செலுத்துவது போல் தத்துரூபமாக செய்துள்ளார். மேலும் குடில் பின் பகுதியில் விழிப்புணர்வு வாசகம் புதுச்சேரியில் 100 சதவீதம் கோவிட்-19 தடுப்பூசி செலுத்தி கொரானா இல்லாத உலகம் படைப்போம் என கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். மேலும் எந்தவிதமான தொற்று நோய் வராமல் அனைவரும் கட்டாயம் கோவிட் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்று இந்த கிறிஸ்மஸ் மூலம் பொதுமக்களுக்கு தெரிவித்து வருகிறார்.
இந்த ஊசி மாதிரி கோவிட் மருந்து பாட்டில் செய்யப்பட்ட covid-19 தடுப்பூசி விழிப்புணர்வு கிறிஸ்துமஸ் குடிலை இந்து,முஸ்லிம் கிறிஸ்துவர் என அனைத்து மதத்தை சார்ந்த பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்த்து ரசித்து மகிழ்ந்து சுந்தரராசு குடும்பத்தினரை பாராட்டி வருகின்றனர் நாமும் பாராட்டுவோம் 9843651955...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

“The Largest Fingerprint Portrait of Dr. B.R. Ambedkar A Symbol of Unity”

சேலம் பொறியியல் கல்லூரி மாணவ- மாணவிகளின் அம்பேத்கர் கலைப்படைப்பு அதிகாரப்பூர்வமாக DCB WORLD RECORDS நிறுவனம் உலக சாதனையாக பதிவு. சேலம் 29: சேலம் அரசு பொறியியல் கல்லூரி மாணவ- மாணவிகள் 8,21,547 பெருவிரல் கை ரேகைகளைப் பயன்படுத்தி 48.5 அடி நீளமும் 68 அடி அகலமுமான டாக்டர் பி. ஆர். அம்பேத்கரின் ஒரு பிரமாண்டமான போர்ட்ரேட் (ஓவியம்), வெற்றிகரமாக உருவாக்கி உள்ளனர் . டிசிபி வேர்ல்ட் ரெகார்ட்ஸ்’ நிறுவனம் “The Largest Fingerprint Portrait of Dr. B.R. Ambedkar A Symbol of Unity” என்ற தலைப்பில் உலக சாதனையாக அதிகாரப்பூர்வமாக பதிவு செய்து சான்றிதழ் வழங்கப்பட்டது. டிசிபி வேர்ல்ட் ரெகார்ட்ஸ் நிறுவனத்தின் சார்பில் டாக்டர் ஆ. சூரியா மற்றும் விருந்தினராக டாக்டர்.நட்சத்திரா,அப்துல் ரஹீம், மற்றும் ரகுமான் ஆகியோர் நிகழ்வில் கலந்து கொண்டு சாதனையை நேரடியாக ஆய்வு செய்து, உலக சாதனையின் அனைத்து விதிமுறைகளும் நிறைவேற்றப்பட்டதை உறுதி செய்தனர். இதன் பின்னர், ஒரு சிறப்பு நிகழ்வில் உலக சாதனை சான்றிதழை டாக்டர் ஆ. சூரியா மற்றும் டாக்டர் நட்சத்திரா ஆகியோர் கல்லூரி முதல்வர் டாக்டர் கீதா, பேராசிரியர்.தீபக் குமார் VIB...

பழனி மாணவியின் அசத்தல் ஓவியம்!

பழனி மாணவியின் அசத்தல் ஓவியம்! 🎨✨ திண்டுக்கல் மாவட்டம் பழனியைச் சேர்ந்த ஐந்தாம் வகுப்பு மாணவி அ.உதய நந்தினி, மக்களின் மனம் கவர்ந்த திட்டங்களைத் தொகுத்து, திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும் முன்னாள் முதல் வருமான முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களுக்கு பணிவான மரியாதையாக அக்கருவை வரைந்து வழிகாட்டியுள்ளார். அவர் இதுபோன்ற உழைப்பால் தழுவிய உணர்வை முறைமையாக வெளிப்படுத்தி, "மீண்டும் வெல்வோம், வெற்றி கொள்வோம்" என்று உற்சாகம் ஊட்டியுள்ளார். மேலும் இச்செயல் மக்களுக்கு தலைவர் வழிகாட்டும் முக்கியத்துவத்தையும், படைப்புத் திறமைக்கும் ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும். #பழனி #கலைபோட்டி #பயிற்சி #மாணவர்கள் #பழனி #மாணவிஓவியம் #அசத்தல்கலை #தமிழ்இலக்கு #ArteTamil #ArtistOnInstagram #CreativeTamil #ArtLovers #TamilArtistry #InstaArt #DCBAUDHAYANATHINI #UDHAYANANTHINIPALANI #UDHAYANANTHINIART

7,027 உறுப்பினர்கள் கல்லூரி மைதானத்தில் ஒன்று கூடி பாரம்பரிய குழு நடனம்

  7,027 உறுப்பினர்கள் கல்லூரி மைதானத்தில் ஒன்று  கூடி  பாரம்பரிய குழு நடன வடிவத்தை நிகழ்த்தி சாதனை  புத்தகத்தில் இடம் பிடித்தது. கேரள மாநிலம் , குடும்பஸ்ரீ , குட்டநல்லுார்  அரசு கல்லூரியில் , மெகா திருவாதிரை நடன நிகழ்ச்சியை நடத்தி , உலக சாதனை படைத்துள்ளது . குடும்பஸ்ரீயின் 7,027 உறுப்பினர்கள் கல்லூரி மைதானத்தில் கூடி பாரம்பரிய குழு நடன வடிவத்தை நிகழ்த்தினர் . இந்த நடன வடிவம் பொதுவாக மலையாள மாதமான சிங்கம் மாதத்தில் ஓணம் பண்டிகையின் போதும் , எப்போதாவது தனு மாதத்திலும்   இது நிகழ்த்தப்படுகிறது . இந்நிகழ்ச்சியை வருவாய்த் துறை அமைச்சர் கே . ராஜன் தொடங்கி வைத்து , குடும்பஸ்ரீ மகளிர் மேம்பாட்டிற்கான முன்மாதிரி என்று பாராட்டினார் , உலகின் மிகப்பெரிய மகளிர் நெட்வொர்க் என்ற அந்தஸ்தை எடுத்துரைத்தார் . சுற்றுலாத் துறை , மாவட்ட நிர்வாகம் , மாநகராட்சி ஆகியவை இணைந்து மாவட்ட ஓணம் கொண்டாட்டத்தை நடத்தின .   தற்போது கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெறுவது குறித்து ஏற்பாட்டாளர்கள் ஆலோசித்து வருகின்றனர் ...