முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

விதை பந்து


விதை பந்து


₹ 4 லட்சம் மதிப்புள்ள விதை விதைப்பு இயந்திரம்... ₹ 32 ஆயிரம் விலையில் உருவாக்கி சாதித்த கோவில்பட்டி பொறியியல் பட்டதாரி...
சந்தையில் தற்போது ₹ 4 லட்சம் மதிப்புள்ள விதை விதைப்பு இயந்திரத்தை 32 ஆயிரம் ரூபாய்க்கு உருவாக்கி சாதித்துள்ளார் கோவில்பட்டி பொறியியல் பட்டதாரி..


என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில் ஏன் கையேந்த வேண்டும் வெளிநாட்டில் என்று மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் ஒரு திரைப்படத்தில் பாடுவார். விவசாயிகளை மனதில் வைத்து அவர் அன்று பாடியது பாடலாக இருந்தாலும், அது தான் உண்மை நிலை என்று உணரும் காலம் வெகு தொலைவில் இல்லை.
இன்றைய நவீன உலகத்தில் விவசாயத்தினை நாம் மறந்தாலும், நமக்கு உணவு அளித்து வருவது விவசாயிகள் தான் என்றால் மிகையாகது. 
விவசாயத்தில் போதிய லாபம் இல்லை, போதிய ஆள்கள் இல்லை என்ற குறைகள் ஒரு புறம் இருந்தாலும், நவீன காலத்தில் நவீன இயந்திரங்களுடன் விவசாயத்தினை மேற்கொள்ள புத்தம் புதிய கண்டுபிடிப்புகள் வந்து கொண்டு தான் இருக்கிறது.


 அந்த வகையில் 4 லட்ச ரூபாய்க்கு விற்பனையாகும் விதை விதைப்பு இயந்திரத்தினை வெறும் 32 ஆயிரம் ரூபாய்க்கு விவசாயிகளுக்கு கொடுக்கும் வகையில் இயந்திரத்தினை உருவாக்கி அசத்தியுள்ளார் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்த பொறியியல் பட்டதாரி.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள நேஷனல் பொறியியல் கல்லூரியில் கடந்த 2019ம் ஆண்டு இயந்திரப் பொறியியல் துறையில் பயின்று தேர்ச்சி பெற்ற முன்னாள் மாணவர் ராஜ் குமார், மிக குறைந்த விலையில் விவசாயிகள் பயன்படுத்தும் வகையில் விதை விதைப்பு இயந்திரம் தயாரிப்பு செய்வதற்கான வடிமைப்பினை உருவாக்கினார்.
 இதையெடுத்து கே.ஆர். கண்டுபிடிப்பு மையம் மற்றும் நேஷனல் பொறியியல் கல்லூரி வணிக கருவகம் ஆகியவற்றின் உதவியுடன், முன்னாள் மாணவர் ராஜ்குமார் விதை விதைப்பு இயந்திரத்தினை உருவாக்கியுள்ளார். 
இந்த இயந்திரத்தினை டிராக்டர் கலப்பையுடன் இணைத்து விதை மற்றும் உரத்தினை சேர்ந்து நடவு பணிகள் மேற்கொள்ள முடியும். ஒரு நாளில் சுமார் 20 ஏக்கர் விதை விதைக்கும் வகையில் விதை விதைப்பு இயந்திரம் அமைக்கப்பட்டுள்ளது.


பருத்தி, உளுந்து, சூரியகாந்தி, பாசி என எல்லா விதைகளையும் புதியதாக உருவாக்கப்பட்டுள்ள விதை விதைப்பு இயந்திரம் மூலமாக விதைக்கும் படி வடிவமைப்பு செய்யப்பட்டுள்ளது. 

9 இன்ச் 15 இன்ச் வரை 6 விதமான இடைவெளியில் விதையை விதைக்கும் வகையில் இயந்திரம் அமைக்கப்பட்டுள்ளது.


இயந்திரத்தினை வடிவமைத்த முன்னாள் மாணவர் ராஜ் குமார் கூறுகையில் தன்னுடைய குடும்பம் விவசாய குடும்பம் என்றும், விவசாய பணிகளுக்கு போதிய ஆள்கள் கிடைக்கமால் இருந்தது என்றும், இதனை போக்கும் வகையில் இயந்திரங்கள் கண்டுபிடிக்க வேண்டும் என்ற எண்ணம் எழுந்தது. 
அதில் உருவானது தான் விதை விதைப்பு இயந்திரம் என்றும், இதனை பயன்படுத்தி டிராக்டர் மூலம் ஒருவர் மட்டுமே ஒரு நாளைக்கு 20 ஏக்கர் விதைக்கலாம் என்றும், இதனை பயன்படுத்தி விதைகள் விதைத்தால், தற்பொழுது கிடைக்கும் மகசூலை விட அதிக மகசூல் கிடைக்கும் என்று கூறியுள்ளார்.


விதை விதைக்கும் கருவி

உதரணமாக தான் கண்டுபிடித்துள்ள இயந்திரம் மூலமாக ஒரு ஏக்கருக்கு 34 ஆயிரம் முதல் 37 ஆயிரம் வரையிலான மக்காச்சோள விதைகள் நட முடியும் என்றும், இதன் மூலமாக 25 குவிண்டால் முதல் 30 குவிண்டால் வரை மகசூல் பெற முடியும் என்றும், இதே விதைப்பு இயந்திரங்களை வெளிநாட்டை சேர்ந்த நிறுவனங்கள் ₹ 4 லட்சம் வரை விற்பனை செய்து வருவதாகவும், இதனை சிறு, குறு விவசாயிகள் வாங்கி பயன்படுத்த முடியாத நிலை உள்ளதாகவும், ஆனால் தான் தயாரித்துள்ள இயந்திரத்தினை விலை வெறும் 32 ஆயிரம் ரூபாய் என்பதால் அனைத்து விவசாயிகளும் எளிதில் வாங்கி பயன்படுத்த முடியும் என்றும்,
 விவசாயிகளிடையே நல்ல வரவேற்பு உள்ளதால் நேஷனல் பொறியியல்


கல்லூரி உதவியுடன் தற்பொழுது 25 இயந்திரங்களை தயாரித்துள்ளதாக மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
இந்த இயந்திரத்தினை வாங்கிய விவசாயி ஞானபிரகாசம் என்பவர் கூறுகையில் டிராக்டர் வைத்து விதை விதைக்கும் போது 3 நபர்கள் தேவைப்படுவர்கள் என்றும், ராஜ் குமார் கண்டுபிடித்துள்ள இயந்திரத்தினை பயன்படுத்தினால், டிராக்டர் டிரைவர் மட்டும் போதும் விதையை எளிதில் விதைத்து விடாலம் என்றும், இதனால் ஆள்பற்றாக்குறை என்ற பேச்சுக்கு இடமில்லமால் போய்விடுவது மட்டுமின்றி, பணம் மிச்சமாகிறது என்றும், இந்த இயந்திரம் விவசாயத்திற்கு நல்ல பயனுள்ளதாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

#DailyNews  #sunamisudarmonthlymagazine

#subeditor #umjwa #palani #umjwa #subeditorsuriya

#dcbworldrecords  #adjudicatorteam  #adjudicator  #dcbnews

#Newtalents #dcbCreativity  #dcbindia  #dcbtalents

 #dcbadjudicator  #dcbnews  #dcbrecords  #Creator  #explore

#dcbinternationalrecordswrrf  #editorsuriya  #adjudicatorsuriya

#dcbworldrecords #dcbwrrf  

சுனாமி சுடர் மாத இதழ்  இணை ஆசிரியர்   
மதிப்புறு முனைவர்  .சூரியா TTC.,RJ.,CC.,JMC.,

 




கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

“The Largest Fingerprint Portrait of Dr. B.R. Ambedkar A Symbol of Unity”

சேலம் பொறியியல் கல்லூரி மாணவ- மாணவிகளின் அம்பேத்கர் கலைப்படைப்பு அதிகாரப்பூர்வமாக DCB WORLD RECORDS நிறுவனம் உலக சாதனையாக பதிவு. சேலம் 29: சேலம் அரசு பொறியியல் கல்லூரி மாணவ- மாணவிகள் 8,21,547 பெருவிரல் கை ரேகைகளைப் பயன்படுத்தி 48.5 அடி நீளமும் 68 அடி அகலமுமான டாக்டர் பி. ஆர். அம்பேத்கரின் ஒரு பிரமாண்டமான போர்ட்ரேட் (ஓவியம்), வெற்றிகரமாக உருவாக்கி உள்ளனர் . டிசிபி வேர்ல்ட் ரெகார்ட்ஸ்’ நிறுவனம் “The Largest Fingerprint Portrait of Dr. B.R. Ambedkar A Symbol of Unity” என்ற தலைப்பில் உலக சாதனையாக அதிகாரப்பூர்வமாக பதிவு செய்து சான்றிதழ் வழங்கப்பட்டது. டிசிபி வேர்ல்ட் ரெகார்ட்ஸ் நிறுவனத்தின் சார்பில் டாக்டர் ஆ. சூரியா மற்றும் விருந்தினராக டாக்டர்.நட்சத்திரா,அப்துல் ரஹீம், மற்றும் ரகுமான் ஆகியோர் நிகழ்வில் கலந்து கொண்டு சாதனையை நேரடியாக ஆய்வு செய்து, உலக சாதனையின் அனைத்து விதிமுறைகளும் நிறைவேற்றப்பட்டதை உறுதி செய்தனர். இதன் பின்னர், ஒரு சிறப்பு நிகழ்வில் உலக சாதனை சான்றிதழை டாக்டர் ஆ. சூரியா மற்றும் டாக்டர் நட்சத்திரா ஆகியோர் கல்லூரி முதல்வர் டாக்டர் கீதா, பேராசிரியர்.தீபக் குமார் VIB...

பழனி மாணவியின் அசத்தல் ஓவியம்!

பழனி மாணவியின் அசத்தல் ஓவியம்! 🎨✨ திண்டுக்கல் மாவட்டம் பழனியைச் சேர்ந்த ஐந்தாம் வகுப்பு மாணவி அ.உதய நந்தினி, மக்களின் மனம் கவர்ந்த திட்டங்களைத் தொகுத்து, திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும் முன்னாள் முதல் வருமான முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களுக்கு பணிவான மரியாதையாக அக்கருவை வரைந்து வழிகாட்டியுள்ளார். அவர் இதுபோன்ற உழைப்பால் தழுவிய உணர்வை முறைமையாக வெளிப்படுத்தி, "மீண்டும் வெல்வோம், வெற்றி கொள்வோம்" என்று உற்சாகம் ஊட்டியுள்ளார். மேலும் இச்செயல் மக்களுக்கு தலைவர் வழிகாட்டும் முக்கியத்துவத்தையும், படைப்புத் திறமைக்கும் ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும். #பழனி #கலைபோட்டி #பயிற்சி #மாணவர்கள் #பழனி #மாணவிஓவியம் #அசத்தல்கலை #தமிழ்இலக்கு #ArteTamil #ArtistOnInstagram #CreativeTamil #ArtLovers #TamilArtistry #InstaArt #DCBAUDHAYANATHINI #UDHAYANANTHINIPALANI #UDHAYANANTHINIART

7,027 உறுப்பினர்கள் கல்லூரி மைதானத்தில் ஒன்று கூடி பாரம்பரிய குழு நடனம்

  7,027 உறுப்பினர்கள் கல்லூரி மைதானத்தில் ஒன்று  கூடி  பாரம்பரிய குழு நடன வடிவத்தை நிகழ்த்தி சாதனை  புத்தகத்தில் இடம் பிடித்தது. கேரள மாநிலம் , குடும்பஸ்ரீ , குட்டநல்லுார்  அரசு கல்லூரியில் , மெகா திருவாதிரை நடன நிகழ்ச்சியை நடத்தி , உலக சாதனை படைத்துள்ளது . குடும்பஸ்ரீயின் 7,027 உறுப்பினர்கள் கல்லூரி மைதானத்தில் கூடி பாரம்பரிய குழு நடன வடிவத்தை நிகழ்த்தினர் . இந்த நடன வடிவம் பொதுவாக மலையாள மாதமான சிங்கம் மாதத்தில் ஓணம் பண்டிகையின் போதும் , எப்போதாவது தனு மாதத்திலும்   இது நிகழ்த்தப்படுகிறது . இந்நிகழ்ச்சியை வருவாய்த் துறை அமைச்சர் கே . ராஜன் தொடங்கி வைத்து , குடும்பஸ்ரீ மகளிர் மேம்பாட்டிற்கான முன்மாதிரி என்று பாராட்டினார் , உலகின் மிகப்பெரிய மகளிர் நெட்வொர்க் என்ற அந்தஸ்தை எடுத்துரைத்தார் . சுற்றுலாத் துறை , மாவட்ட நிர்வாகம் , மாநகராட்சி ஆகியவை இணைந்து மாவட்ட ஓணம் கொண்டாட்டத்தை நடத்தின .   தற்போது கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெறுவது குறித்து ஏற்பாட்டாளர்கள் ஆலோசித்து வருகின்றனர் ...