முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த விவசாயி சாதனை

மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த விவசாயி சாதனை


மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவர், குப்பையில் தூக்கியெறியப்படும் குளூக்கோஸ் பாட்டில்களை விவசாயத்திற்குப் பயன்படுத்திச் சாதித்துள்ளார். நீரின்றி வாடும் பயிர்களை எப்படி காற்றப்போகிறோம் என்ற கவலையில் இருந்த விவசாயி பாரியா, வேளாண் நிபுணர்கள் உதவியுடன் சாதித்துள்ளார்.


வறட்சியால் வாடும் தானியப் பயிர்களைக் காப்பாற்ற சொட்டு நீர்ப்பாசனத்திற்கு குளூக்கோஸ் பாட்டில்களைப் பயன்படுத்தலாம் என்று நேஷனல் அக்ரிகல்ச்சுரல் இன்னோவேஷன் புராஜெக்ட் அமைப்பைச் சேர்ந்த வேளாண் விஞ்ஞானிகள், ஆலோசனை தெரிவித்தனர்.
இந்தப் புதுமையான சொட்டுநீர்ப் பாசனம் மூலம் ஒரு ஹெக்டேருக்கு விவசாயி பாரியா, 15,200 ரூபாய் லாபம் பார்த்திருக்கிறார். பயிர்களைக் காப்பாற்றியதோடு மட்டுமல்ல, நீரையும் வீணடிக்காமல் பயன்படுத்தி நீர் மேலாண்மை செய்திருக்கிறார்.


மத்தியப்பிரதேச மாநிலத்தில் பழங்குடி மக்கள் நிறைந்த ஜாப்பூவா மாவட்டத்தில் தானியங்களையும் காய்கறிகளையும் போதிய நீரில்லாமல் விவசாயம் செய்ய முடியாத சூழல். இதனையடுத்து, ரமேஷ் பாரியா போன்ற விவசாயிகள் புதுமையான நீர்ப்பாசன முறைகளுக்கு மாறியதால் வேளாண் உற்பத்தியில் லாபம் அடைந்துள்ளனர்.
கிராமத்தில் சிறிய அளவில் பழைய முறையில் பாகற்காயும், சுரைக்காயும் விவசாயம் செய்யத்தொடங்கினார். நீரில்லாமல் பயிர்கள் வாடின. இதையறிந்த உடன் வேளாண் நிபுணர்களிடம் ஆலோசனை கேட்டு, குளூக்கோஸ் பாட்டில் சொட்டநீர் முறையைப் பயன்படுத்தத் தொடங்கினார். நீரும் வீணாகவில்லை. பயிரும் வாடவில்லை.


ஒரு கிலோ இருபது ரூபாய்க்கு அந்த பாட்டில்களை வாங்கினார். அதனை அமல்படுத்திய விவசாயி பாரியா, தினமும் அந்த பாட்டில்களில் தண்ணீரை நிரப்பிவிட்டு பள்ளிக்குச் செல்லுமாறு தன் குழந்தைகளிடம் கேட்டுக்கொண்டார். இன்று அந்த கிராமத்தில் மற்ற விவசாயிகளும் சொட்டுநீர்ப் பாசனத்திற்குத் தாவியுள்ளனர். தற்போது மாவட்ட நிர்வாகம், பாரியாவின் புதுமையான விவசாய முயற்சியைப் பாராட்டி சான்றிதழ் அளித்துள்ளது. மனிதர்களின் உயிரைக் காப்பாற்றிய குளூக்கோஸ் பாட்டில், இங்கே பயிர்களின் உயிரைக் காப்பாற்றவும் பயன்படுவது வாழ்க்கையின் விந்தை.

#DailyNews  #sunamisudarmonthlymagazine

#subeditor #umjwa #palani #umjwa #subeditorsuriya

#dcbworldrecords  #adjudicatorteam  #adjudicator  #dcbnews

#Newtalents #dcbCreativity  #dcbindia  #dcbtalents

 #dcbadjudicator  #dcbnews  #dcbrecords  #Creator  #explore

#dcbinternationalrecordswrrf  #editorsuriya  #adjudicatorsuriya

#dcbworldrecords #dcbwrrf  

சுனாமி சுடர் மாத இதழ்  இணை ஆசிரியர்   
மதிப்புறு முனைவர்  .சூரியா TTC.,RJ.,CC.,JMC.,

 


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

“The Largest Fingerprint Portrait of Dr. B.R. Ambedkar A Symbol of Unity”

சேலம் பொறியியல் கல்லூரி மாணவ- மாணவிகளின் அம்பேத்கர் கலைப்படைப்பு அதிகாரப்பூர்வமாக DCB WORLD RECORDS நிறுவனம் உலக சாதனையாக பதிவு. சேலம் 29: சேலம் அரசு பொறியியல் கல்லூரி மாணவ- மாணவிகள் 8,21,547 பெருவிரல் கை ரேகைகளைப் பயன்படுத்தி 48.5 அடி நீளமும் 68 அடி அகலமுமான டாக்டர் பி. ஆர். அம்பேத்கரின் ஒரு பிரமாண்டமான போர்ட்ரேட் (ஓவியம்), வெற்றிகரமாக உருவாக்கி உள்ளனர் . டிசிபி வேர்ல்ட் ரெகார்ட்ஸ்’ நிறுவனம் “The Largest Fingerprint Portrait of Dr. B.R. Ambedkar A Symbol of Unity” என்ற தலைப்பில் உலக சாதனையாக அதிகாரப்பூர்வமாக பதிவு செய்து சான்றிதழ் வழங்கப்பட்டது. டிசிபி வேர்ல்ட் ரெகார்ட்ஸ் நிறுவனத்தின் சார்பில் டாக்டர் ஆ. சூரியா மற்றும் விருந்தினராக டாக்டர்.நட்சத்திரா,அப்துல் ரஹீம், மற்றும் ரகுமான் ஆகியோர் நிகழ்வில் கலந்து கொண்டு சாதனையை நேரடியாக ஆய்வு செய்து, உலக சாதனையின் அனைத்து விதிமுறைகளும் நிறைவேற்றப்பட்டதை உறுதி செய்தனர். இதன் பின்னர், ஒரு சிறப்பு நிகழ்வில் உலக சாதனை சான்றிதழை டாக்டர் ஆ. சூரியா மற்றும் டாக்டர் நட்சத்திரா ஆகியோர் கல்லூரி முதல்வர் டாக்டர் கீதா, பேராசிரியர்.தீபக் குமார் VIB...

பழனி மாணவியின் அசத்தல் ஓவியம்!

பழனி மாணவியின் அசத்தல் ஓவியம்! 🎨✨ திண்டுக்கல் மாவட்டம் பழனியைச் சேர்ந்த ஐந்தாம் வகுப்பு மாணவி அ.உதய நந்தினி, மக்களின் மனம் கவர்ந்த திட்டங்களைத் தொகுத்து, திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும் முன்னாள் முதல் வருமான முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களுக்கு பணிவான மரியாதையாக அக்கருவை வரைந்து வழிகாட்டியுள்ளார். அவர் இதுபோன்ற உழைப்பால் தழுவிய உணர்வை முறைமையாக வெளிப்படுத்தி, "மீண்டும் வெல்வோம், வெற்றி கொள்வோம்" என்று உற்சாகம் ஊட்டியுள்ளார். மேலும் இச்செயல் மக்களுக்கு தலைவர் வழிகாட்டும் முக்கியத்துவத்தையும், படைப்புத் திறமைக்கும் ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும். #பழனி #கலைபோட்டி #பயிற்சி #மாணவர்கள் #பழனி #மாணவிஓவியம் #அசத்தல்கலை #தமிழ்இலக்கு #ArteTamil #ArtistOnInstagram #CreativeTamil #ArtLovers #TamilArtistry #InstaArt #DCBAUDHAYANATHINI #UDHAYANANTHINIPALANI #UDHAYANANTHINIART

7,027 உறுப்பினர்கள் கல்லூரி மைதானத்தில் ஒன்று கூடி பாரம்பரிய குழு நடனம்

  7,027 உறுப்பினர்கள் கல்லூரி மைதானத்தில் ஒன்று  கூடி  பாரம்பரிய குழு நடன வடிவத்தை நிகழ்த்தி சாதனை  புத்தகத்தில் இடம் பிடித்தது. கேரள மாநிலம் , குடும்பஸ்ரீ , குட்டநல்லுார்  அரசு கல்லூரியில் , மெகா திருவாதிரை நடன நிகழ்ச்சியை நடத்தி , உலக சாதனை படைத்துள்ளது . குடும்பஸ்ரீயின் 7,027 உறுப்பினர்கள் கல்லூரி மைதானத்தில் கூடி பாரம்பரிய குழு நடன வடிவத்தை நிகழ்த்தினர் . இந்த நடன வடிவம் பொதுவாக மலையாள மாதமான சிங்கம் மாதத்தில் ஓணம் பண்டிகையின் போதும் , எப்போதாவது தனு மாதத்திலும்   இது நிகழ்த்தப்படுகிறது . இந்நிகழ்ச்சியை வருவாய்த் துறை அமைச்சர் கே . ராஜன் தொடங்கி வைத்து , குடும்பஸ்ரீ மகளிர் மேம்பாட்டிற்கான முன்மாதிரி என்று பாராட்டினார் , உலகின் மிகப்பெரிய மகளிர் நெட்வொர்க் என்ற அந்தஸ்தை எடுத்துரைத்தார் . சுற்றுலாத் துறை , மாவட்ட நிர்வாகம் , மாநகராட்சி ஆகியவை இணைந்து மாவட்ட ஓணம் கொண்டாட்டத்தை நடத்தின .   தற்போது கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெறுவது குறித்து ஏற்பாட்டாளர்கள் ஆலோசித்து வருகின்றனர் ...