முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

அமைதி என்பதை புரிந்து கொள்வோம்.

அமைதி என்பதை புரிந்து கொள்வோம்.

அனைத்தும் அமையப் பெற்று எந்தவித தொந்தரவு இல்லாத ஒரு சூழலில் வாழ்வது ஒன்றும் அமைதி அல்ல. அது ஒரு வாழ்க்கையும் அல்ல.
ஓசையில்லாத ஓர் இடத்தில் உட்கார்ந்து யோசிப்பதல்ல. “புறச் சூழல்களால் பாதிக்கப்படாமல் இருப்பதுதான் உண்மையான அமைதி” 
ஆயிரம் துன்பத்திற்கு நடுவே,“நிச்சயம் ஒரு நாள் விடியும்” என்று விடா முயற்சியுடன் தினசரி உழைத்துக் கொண்டு வருகிறார்களே, அவர்களிடம் இருப்பதுதான் அமைதி.
எத்தனையோ தொல்லைகள் யார் தந்தாலும், “எனக்கு நேரும் மான, அவமானத்தை  விட,' நான் எட்ட வேண்டிய இலக்கே எனக்கு பெரிது” என்று எதையும் பொருட்படுத்தாது கடந்து போய்க் கொண்டு இருக்கிறார்களே, அவர்கள் உள்ளத்தில் உள்ளதுதான் உண்மையான அமைதி.

சீனாவில், *அமைதி* என்ற தலைப்பில் ஓவியப்போட்டி நடத்தப்பட்டது. அமைதியான நதி, ஆளரவம் இல்லாத பூங்கா, சலனமில்லாத குளம், சந்தடியில்லாத சாலை என்று பல்வேறு ஓவியங்கள் போட்டிக்கு வந்து இருந்தன.


 ஆனால் போட்டியை அறிவித்த அரசன், இடி மின்னல், புயல், கடுமையான மழை, மரங்களின் பேயாட்டம், கடலின் சீற்றம், காட்டு விலங்குகளின் கூக்குரல், தலை தெறிக்க ஓடும் மக்கள் காணப்படும் ஓவியத்தைப் பரிசுக்குத் தேர்ந்து எடுக்கிறார். 
“அரசே இதுவா அமைதி?” என்று அமைச்சர் கேட்க,
 “அமைச்சரே! ஓவியத்தைச் சற்று உற்றுப் பாருங்கள். பதட்டமான இந்தச் சூழலிலும் அமைதியாக ஒரு பறவை தன் குஞ்சுகளுக்கு இரை ஊட்டிக் கொண்டு இருக்கிறது.
வெளிச்சூழல் எப்படி இருந்தாலும் அமைதியாக அப்பறவை நமக்கு உணர்த்துவது ,
*அமைதி புறத்தில் இல்லை அகத்தில் உள்ளது* என்று உணர்த்துவது உங்களுக்கு தெரிய வில்லையா?" என்ற அரசரிடம் "ஆம்" என்று ஒப்புக் கொள்கிறார் அமைச்சர்.
புத்தபிரான் அருளியிருக்கிற அற்புதமான வாசகங்கள் நமக்குப் பெரிதும் உதவும். 
*கண்களை மூடுவதற்குப் பதிலாக, மனதை மூட வேண்டும்* என்பார் அவர். நம்மில் பலர் தியானத்திலும் தவத்திலும் கண்களை மூடிக் கொண்டிருப்போம். ஆனால் மனம் திறந்து கிடக்கும். அது ஊர் சுற்றும். அசிங்கங்களை பார்க்கும். மனதை மூடுவதுதான் மன அமைதிக்கான வழி.
ஆம்..
நண்பர்களே...
 சாத்தியமில்லாத இடத்தில் சாத்தியப்படுவதுதான் அமைதி.
 ஆகவே, தொந்தரவுகளை புறந்தள்ளி விட்டு நமக்கான இலட்சியத்தில் உறுதி கொண்டு அமைதியாக சாதனை செய்வோம்.
 ஆம் .. அமைதி வெளியே இல்லை ; நம் அகத்தில்தான் இருக்கிறது என்பதை புரிந்து கொள்வோம்.

#DailyNews  #sunamisudarmonthlymagazine

#subeditor #umjwa #palani #umjwa #subeditorsuriya

#dcbworldrecords  #adjudicatorteam  #adjudicator  #dcbnews

#Newtalents #dcbCreativity  #dcbindia  #dcbtalents

 #dcbadjudicator  #dcbnews  #dcbrecords  #Creator  #explore

#dcbinternationalrecordswrrf  #editorsuriya  #adjudicatorsuriya

#dcbworldrecords #dcbwrrf  

சுனாமி சுடர் மாத இதழ்  இணை ஆசிரியர்   
மதிப்புறு முனைவர் .சூரியா TTC.,RJ.,CC.,JMC.,

 



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

“The Largest Fingerprint Portrait of Dr. B.R. Ambedkar A Symbol of Unity”

சேலம் பொறியியல் கல்லூரி மாணவ- மாணவிகளின் அம்பேத்கர் கலைப்படைப்பு அதிகாரப்பூர்வமாக DCB WORLD RECORDS நிறுவனம் உலக சாதனையாக பதிவு. சேலம் 29: சேலம் அரசு பொறியியல் கல்லூரி மாணவ- மாணவிகள் 8,21,547 பெருவிரல் கை ரேகைகளைப் பயன்படுத்தி 48.5 அடி நீளமும் 68 அடி அகலமுமான டாக்டர் பி. ஆர். அம்பேத்கரின் ஒரு பிரமாண்டமான போர்ட்ரேட் (ஓவியம்), வெற்றிகரமாக உருவாக்கி உள்ளனர் . டிசிபி வேர்ல்ட் ரெகார்ட்ஸ்’ நிறுவனம் “The Largest Fingerprint Portrait of Dr. B.R. Ambedkar A Symbol of Unity” என்ற தலைப்பில் உலக சாதனையாக அதிகாரப்பூர்வமாக பதிவு செய்து சான்றிதழ் வழங்கப்பட்டது. டிசிபி வேர்ல்ட் ரெகார்ட்ஸ் நிறுவனத்தின் சார்பில் டாக்டர் ஆ. சூரியா மற்றும் விருந்தினராக டாக்டர்.நட்சத்திரா,அப்துல் ரஹீம், மற்றும் ரகுமான் ஆகியோர் நிகழ்வில் கலந்து கொண்டு சாதனையை நேரடியாக ஆய்வு செய்து, உலக சாதனையின் அனைத்து விதிமுறைகளும் நிறைவேற்றப்பட்டதை உறுதி செய்தனர். இதன் பின்னர், ஒரு சிறப்பு நிகழ்வில் உலக சாதனை சான்றிதழை டாக்டர் ஆ. சூரியா மற்றும் டாக்டர் நட்சத்திரா ஆகியோர் கல்லூரி முதல்வர் டாக்டர் கீதா, பேராசிரியர்.தீபக் குமார் VIB...

பழனி மாணவியின் அசத்தல் ஓவியம்!

பழனி மாணவியின் அசத்தல் ஓவியம்! 🎨✨ திண்டுக்கல் மாவட்டம் பழனியைச் சேர்ந்த ஐந்தாம் வகுப்பு மாணவி அ.உதய நந்தினி, மக்களின் மனம் கவர்ந்த திட்டங்களைத் தொகுத்து, திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும் முன்னாள் முதல் வருமான முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களுக்கு பணிவான மரியாதையாக அக்கருவை வரைந்து வழிகாட்டியுள்ளார். அவர் இதுபோன்ற உழைப்பால் தழுவிய உணர்வை முறைமையாக வெளிப்படுத்தி, "மீண்டும் வெல்வோம், வெற்றி கொள்வோம்" என்று உற்சாகம் ஊட்டியுள்ளார். மேலும் இச்செயல் மக்களுக்கு தலைவர் வழிகாட்டும் முக்கியத்துவத்தையும், படைப்புத் திறமைக்கும் ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும். #பழனி #கலைபோட்டி #பயிற்சி #மாணவர்கள் #பழனி #மாணவிஓவியம் #அசத்தல்கலை #தமிழ்இலக்கு #ArteTamil #ArtistOnInstagram #CreativeTamil #ArtLovers #TamilArtistry #InstaArt #DCBAUDHAYANATHINI #UDHAYANANTHINIPALANI #UDHAYANANTHINIART

7,027 உறுப்பினர்கள் கல்லூரி மைதானத்தில் ஒன்று கூடி பாரம்பரிய குழு நடனம்

  7,027 உறுப்பினர்கள் கல்லூரி மைதானத்தில் ஒன்று  கூடி  பாரம்பரிய குழு நடன வடிவத்தை நிகழ்த்தி சாதனை  புத்தகத்தில் இடம் பிடித்தது. கேரள மாநிலம் , குடும்பஸ்ரீ , குட்டநல்லுார்  அரசு கல்லூரியில் , மெகா திருவாதிரை நடன நிகழ்ச்சியை நடத்தி , உலக சாதனை படைத்துள்ளது . குடும்பஸ்ரீயின் 7,027 உறுப்பினர்கள் கல்லூரி மைதானத்தில் கூடி பாரம்பரிய குழு நடன வடிவத்தை நிகழ்த்தினர் . இந்த நடன வடிவம் பொதுவாக மலையாள மாதமான சிங்கம் மாதத்தில் ஓணம் பண்டிகையின் போதும் , எப்போதாவது தனு மாதத்திலும்   இது நிகழ்த்தப்படுகிறது . இந்நிகழ்ச்சியை வருவாய்த் துறை அமைச்சர் கே . ராஜன் தொடங்கி வைத்து , குடும்பஸ்ரீ மகளிர் மேம்பாட்டிற்கான முன்மாதிரி என்று பாராட்டினார் , உலகின் மிகப்பெரிய மகளிர் நெட்வொர்க் என்ற அந்தஸ்தை எடுத்துரைத்தார் . சுற்றுலாத் துறை , மாவட்ட நிர்வாகம் , மாநகராட்சி ஆகியவை இணைந்து மாவட்ட ஓணம் கொண்டாட்டத்தை நடத்தின .   தற்போது கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெறுவது குறித்து ஏற்பாட்டாளர்கள் ஆலோசித்து வருகின்றனர் ...