முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

146 நிமிடத்தில் ஆயிரம் பலூன்கள் ஊதி கோவை பட்டதாரி இளைஞர் உலக சாதனை படைத்தார்

 146 நிமிடத்தில் ஆயிரம் பலூன்கள் ஊதி  கோவை பட்டதாரி இளைஞர் உலக சாதனை படைத்தார்..



 கடந்த 2016 ல் கோவை அருகே உள்ள போத்தனூரைச் சேர்ந்த நாசர் ருக்ஸான பேகம் தம்பதியின் பூ வியாபாரிகளான இவர்களுக்கு மூன்று மகன்கள் இதில் கடைசி மகன் சதாம் உசேன் வயது 21 இந்த பலூன் சாதனை முயற்சியில் ஈடுபட்டார்.

கோவையில் பிரதான பொழுதுபோக்கு இடமான வ.உ.சி பூங்காவில் காதலர் தினத்தை முன்னிட்டு விடுமுறையை கொண்டாட அனைவரும் வந்து சென்று கொண்டிருந்த சமயத்தில் இளைஞர் ஒருவர் பலூன் ஊதி காற்றில் பறக்க விட்டு கொண்டிருந்தார் ஒன்றல்ல இரண்டல்ல ஒட்டுமொத்தமாக ஆயிரம் பலூன்களை வேக வேகமாக ஊதி முடித்து சாதனை முயற்சித்துள்ளார். 

அந்த இளைஞர் பொறியியல் பட்டப்படிப்பு முடித்து இவர் தற்பொழுது வேலை தேடி வருவதாகவும் அதன் இடையே தொடர்ந்து பல சாதனைகளில் ஈடுபட்டு வருவதாகவும் அவரது குடும்பத்தினர் கூறுகின்றனர்.

தாயார் ருஷனா பேகம் கூறும்போது ஏழ்மையான குடும்பம் என்பதால் சிரமப்பட்டு மூன்று மாதங்களையும் படிக்க வைத்தோம். சதாம் உசேன் குடும்ப சூழ்நிலை புரிந்துகொண்டு படிக்கும்போதே பரிதநேர வேலைக்கு சென்று வருமானம் ஈட்டி வந்தார் அப்பொழுது விழாக்களிலும் நிகழ்ச்சிகளிலும் அலங்கார வேலைகளில் செய்யும் வேலையும் கிடைத்தது.குறிப்பாக பலூன் மூலம் மேடை அலங்காரம் செய்வதில் ஆர்வம் காட்டினார்.


தொழிலையே சாதனையாக மாற்ற

அந்த தொழிலையே சாதனையாக மாற்ற முயற்சித்து பயிற்சி எடுத்தார் இப்போது சாதித்து விட்டார் அதிக பலூன்கள் ஊதுவதால் மூச்சு கோளாறுகள் ஏற்படுமோ என்ற பயம் இருந்தது ஆனால் விடாமுயற்சியுடன் முறையாக பயிற்சி எடுத்து வருவதால் எந்த பிரச்சனையும் இல்லை மருத்துவரை பரிசோதித்து சான்று பெற்றுள்ளோம் என்றார்.

சதாம் உசேன் கூறும்போது

 ஒரு மணி நேரத்தில் 910 பலூன்களை ஊதி கனடாவைச் சேர்ந்த ஈவன் ஹண்ட் என்பவர் நேரத்தை அடிப்படையாக வைத்து சாதனை செய்துள்ளார் அதனால் தான் பலூன்களின் எண்ணிக்கையை அடிப்படையாக வைத்து ஆயிரம் பலூன்களை ஊதி முடித்துள்ளேன் இந்த பிரிவில் இதுவே முதல் சாதனையாக இருக்கும்.

முந்தைய சாதனைகள் 

2014 ஆம் ஆண்டில் ஒரு மணி நேரத்தில் 486 பலூன் களையும் 2015இல் நண்பர்களுடன் இணைந்து ஒரு மணி நேரத்தில் 947 பலூன் களையும் ஊதி சாதனை படைத்தேன் இவை லிங்கா புத்தகத்தில் இடம் பெற்றன

மூன்றாவது கோல்டன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் லிம்கா சாதனைக்காக 146.58 நிமிடத்தில் அதாவது இரண்டு மணி நேரம் 26 நிமிடங்கள் 58 நொடிகளில் ஆயிரம் பலூன்களை ஊதியுள்ளேன் ஒவ்வொரு பலனும் பலூனையும் 30 சென்டிமீட்டர் சுற்றளவு குறையாமல் ஊதி உடனுக்குடனே கட்டி முடிக்க வேண்டும் எண்ணிக்கையும் அளவையும் சரிபார்த்து அதை வீடியோ பதிவு செய்து சாதனைக்கு அனுப்பியுள்ளோம் மூன்று வருட பயிற்சியால் இந்த சாதனை கைகூடியது என்றார்.


                                 மதிப்புறு முனைவர் .சூரியா



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

“The Largest Fingerprint Portrait of Dr. B.R. Ambedkar A Symbol of Unity”

சேலம் பொறியியல் கல்லூரி மாணவ- மாணவிகளின் அம்பேத்கர் கலைப்படைப்பு அதிகாரப்பூர்வமாக DCB WORLD RECORDS நிறுவனம் உலக சாதனையாக பதிவு. சேலம் 29: சேலம் அரசு பொறியியல் கல்லூரி மாணவ- மாணவிகள் 8,21,547 பெருவிரல் கை ரேகைகளைப் பயன்படுத்தி 48.5 அடி நீளமும் 68 அடி அகலமுமான டாக்டர் பி. ஆர். அம்பேத்கரின் ஒரு பிரமாண்டமான போர்ட்ரேட் (ஓவியம்), வெற்றிகரமாக உருவாக்கி உள்ளனர் . டிசிபி வேர்ல்ட் ரெகார்ட்ஸ்’ நிறுவனம் “The Largest Fingerprint Portrait of Dr. B.R. Ambedkar A Symbol of Unity” என்ற தலைப்பில் உலக சாதனையாக அதிகாரப்பூர்வமாக பதிவு செய்து சான்றிதழ் வழங்கப்பட்டது. டிசிபி வேர்ல்ட் ரெகார்ட்ஸ் நிறுவனத்தின் சார்பில் டாக்டர் ஆ. சூரியா மற்றும் விருந்தினராக டாக்டர்.நட்சத்திரா,அப்துல் ரஹீம், மற்றும் ரகுமான் ஆகியோர் நிகழ்வில் கலந்து கொண்டு சாதனையை நேரடியாக ஆய்வு செய்து, உலக சாதனையின் அனைத்து விதிமுறைகளும் நிறைவேற்றப்பட்டதை உறுதி செய்தனர். இதன் பின்னர், ஒரு சிறப்பு நிகழ்வில் உலக சாதனை சான்றிதழை டாக்டர் ஆ. சூரியா மற்றும் டாக்டர் நட்சத்திரா ஆகியோர் கல்லூரி முதல்வர் டாக்டர் கீதா, பேராசிரியர்.தீபக் குமார் VIB...

பழனி மாணவியின் அசத்தல் ஓவியம்!

பழனி மாணவியின் அசத்தல் ஓவியம்! 🎨✨ திண்டுக்கல் மாவட்டம் பழனியைச் சேர்ந்த ஐந்தாம் வகுப்பு மாணவி அ.உதய நந்தினி, மக்களின் மனம் கவர்ந்த திட்டங்களைத் தொகுத்து, திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும் முன்னாள் முதல் வருமான முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களுக்கு பணிவான மரியாதையாக அக்கருவை வரைந்து வழிகாட்டியுள்ளார். அவர் இதுபோன்ற உழைப்பால் தழுவிய உணர்வை முறைமையாக வெளிப்படுத்தி, "மீண்டும் வெல்வோம், வெற்றி கொள்வோம்" என்று உற்சாகம் ஊட்டியுள்ளார். மேலும் இச்செயல் மக்களுக்கு தலைவர் வழிகாட்டும் முக்கியத்துவத்தையும், படைப்புத் திறமைக்கும் ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும். #பழனி #கலைபோட்டி #பயிற்சி #மாணவர்கள் #பழனி #மாணவிஓவியம் #அசத்தல்கலை #தமிழ்இலக்கு #ArteTamil #ArtistOnInstagram #CreativeTamil #ArtLovers #TamilArtistry #InstaArt #DCBAUDHAYANATHINI #UDHAYANANTHINIPALANI #UDHAYANANTHINIART

7,027 உறுப்பினர்கள் கல்லூரி மைதானத்தில் ஒன்று கூடி பாரம்பரிய குழு நடனம்

  7,027 உறுப்பினர்கள் கல்லூரி மைதானத்தில் ஒன்று  கூடி  பாரம்பரிய குழு நடன வடிவத்தை நிகழ்த்தி சாதனை  புத்தகத்தில் இடம் பிடித்தது. கேரள மாநிலம் , குடும்பஸ்ரீ , குட்டநல்லுார்  அரசு கல்லூரியில் , மெகா திருவாதிரை நடன நிகழ்ச்சியை நடத்தி , உலக சாதனை படைத்துள்ளது . குடும்பஸ்ரீயின் 7,027 உறுப்பினர்கள் கல்லூரி மைதானத்தில் கூடி பாரம்பரிய குழு நடன வடிவத்தை நிகழ்த்தினர் . இந்த நடன வடிவம் பொதுவாக மலையாள மாதமான சிங்கம் மாதத்தில் ஓணம் பண்டிகையின் போதும் , எப்போதாவது தனு மாதத்திலும்   இது நிகழ்த்தப்படுகிறது . இந்நிகழ்ச்சியை வருவாய்த் துறை அமைச்சர் கே . ராஜன் தொடங்கி வைத்து , குடும்பஸ்ரீ மகளிர் மேம்பாட்டிற்கான முன்மாதிரி என்று பாராட்டினார் , உலகின் மிகப்பெரிய மகளிர் நெட்வொர்க் என்ற அந்தஸ்தை எடுத்துரைத்தார் . சுற்றுலாத் துறை , மாவட்ட நிர்வாகம் , மாநகராட்சி ஆகியவை இணைந்து மாவட்ட ஓணம் கொண்டாட்டத்தை நடத்தின .   தற்போது கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெறுவது குறித்து ஏற்பாட்டாளர்கள் ஆலோசித்து வருகின்றனர் ...