முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இசை கலைஞர்களுக்கு செவி சாய்க்குமா????


 இசை கலைஞர்களுக்கு செவி சாய்க்குமா????

இசைக்கலையில் ஒருவித தேக்கம்

ஊரிலே ஊரடங்குச் சட்டம், உள்நாட்டு நிலைமை காரணமாகக் கோயில்கள் எல்லாம் கவனிப்பாரற்றுத் திருவிழாக்கள் நிறுத்தப்பட்டதாலும், மேளதாளத்தோடு பகிரங்கமாக எந்த ஒரு நிகழ்ச்சியும் நடத்த முடியாததாலும், தவில் நாதஸ்வர இசைக்கலையில் ஒருவித தேக்கம் ஏற்பட்டிருக்கின்றது. இதைவிட தொழில் நுட்ப வளர்ச்சி காரணமாக நாதஸ்வர இசை பதிவு செய்யப்பட்டதால் பல நிகழ்ச்சிகளில் பதிவு செய்யப்பட்ட நாதஸ்வர இசைத் தட்டுக்களே மங்கல இசைக்காகப் பாவிக்கப்படுகின்றன. இதனால் தவில், நாதஸ்வரக் கலைஞர்களுக்குப் போதிய வருமானம் கடந்த காலங்களில் கிடைக்கவில்லை.

இசை என்பது மொழிகளைக்கடந்த ஒரு தெய்வீக உணர்வு, தமிழ் காலாச்சாரத்தில் தனித்துவம் மிக்க இசைக்கருவியாக நாதஸ்வரமும், தவிலும் வகிக்கின்ற பங்கு மிகவும் முக்கியமானது. நாதஸ்வர இசையுடன்தான் அனேகமான தமிழர்களின் முக்கியமான மங்கல, மகிழ்சிகரமான நிகழ்வுகள் நிகழ்கின்றன.

 மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் உத்தரவின் பேரில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையின் கீழ் 144 தடைச் சட்டம் 21 நாட்களுக்கு அமுலாகி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது, வரவேற்கத் தக்கது!!!போற்றுதற்குரியது!!!இந்த நிலையில் கிராமியக் இசைக்  கலைஞர்களின் வாழ்வாதாரம் மிகவும் பரிதாபமான   கேள்விக் குறியாக உள்ளது, பங்குனி மாதத்தில் தான் உத்திரம் திருவிழாகளில் கலைநிகழ்ச்சிகள் அதிகமாகவே  நடைபெறும் இதை நம்பித் தான் இசைக்கலைஞர்களின் குடும்பங்களே உள்ளன,இந்நிலையில் நிகழ்ச்சிகள் முழுவதும் தடைசெய்யப்பட்டு விட்டதால் கலையினையே உயிரென மதித்து வாழும்  அமரபூண்டி,பூலாம்பட்டி,
மஞ்சநாயக்கன்பட்டி,காளிபட்டி கிராமங்களைச் சுற்றியுள்ள   கிராமியக் இசைக்  கலைஞர்களுக்கும் ,அவரை சார்ந்து வாழும் குடும்பங்களுக்கும் நிதியுதவி செய்திட  சார் ஆட்சியர், வட்டாட்சியர் அவர்கள் தமிழக முதல்வர் அவர்களுக்கு பரிந்துரை செய்திட பணிவோடு கேட்டு கொள்கிறோம் என கிராமிய இசை கலைஞர்கள் கூறினார்கள் .இவர்களின் வாழ்விலும் ஒளிவீசட்டும்.....

               சிறப்பு செய்தியாளர் ஆ.சூரியா 
                             சுனாமி சுடர் மாத இதழ் ,

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

“The Largest Fingerprint Portrait of Dr. B.R. Ambedkar A Symbol of Unity”

சேலம் பொறியியல் கல்லூரி மாணவ- மாணவிகளின் அம்பேத்கர் கலைப்படைப்பு அதிகாரப்பூர்வமாக DCB WORLD RECORDS நிறுவனம் உலக சாதனையாக பதிவு. சேலம் 29: சேலம் அரசு பொறியியல் கல்லூரி மாணவ- மாணவிகள் 8,21,547 பெருவிரல் கை ரேகைகளைப் பயன்படுத்தி 48.5 அடி நீளமும் 68 அடி அகலமுமான டாக்டர் பி. ஆர். அம்பேத்கரின் ஒரு பிரமாண்டமான போர்ட்ரேட் (ஓவியம்), வெற்றிகரமாக உருவாக்கி உள்ளனர் . டிசிபி வேர்ல்ட் ரெகார்ட்ஸ்’ நிறுவனம் “The Largest Fingerprint Portrait of Dr. B.R. Ambedkar A Symbol of Unity” என்ற தலைப்பில் உலக சாதனையாக அதிகாரப்பூர்வமாக பதிவு செய்து சான்றிதழ் வழங்கப்பட்டது. டிசிபி வேர்ல்ட் ரெகார்ட்ஸ் நிறுவனத்தின் சார்பில் டாக்டர் ஆ. சூரியா மற்றும் விருந்தினராக டாக்டர்.நட்சத்திரா,அப்துல் ரஹீம், மற்றும் ரகுமான் ஆகியோர் நிகழ்வில் கலந்து கொண்டு சாதனையை நேரடியாக ஆய்வு செய்து, உலக சாதனையின் அனைத்து விதிமுறைகளும் நிறைவேற்றப்பட்டதை உறுதி செய்தனர். இதன் பின்னர், ஒரு சிறப்பு நிகழ்வில் உலக சாதனை சான்றிதழை டாக்டர் ஆ. சூரியா மற்றும் டாக்டர் நட்சத்திரா ஆகியோர் கல்லூரி முதல்வர் டாக்டர் கீதா, பேராசிரியர்.தீபக் குமார் VIB...

பழனி மாணவியின் அசத்தல் ஓவியம்!

பழனி மாணவியின் அசத்தல் ஓவியம்! 🎨✨ திண்டுக்கல் மாவட்டம் பழனியைச் சேர்ந்த ஐந்தாம் வகுப்பு மாணவி அ.உதய நந்தினி, மக்களின் மனம் கவர்ந்த திட்டங்களைத் தொகுத்து, திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும் முன்னாள் முதல் வருமான முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களுக்கு பணிவான மரியாதையாக அக்கருவை வரைந்து வழிகாட்டியுள்ளார். அவர் இதுபோன்ற உழைப்பால் தழுவிய உணர்வை முறைமையாக வெளிப்படுத்தி, "மீண்டும் வெல்வோம், வெற்றி கொள்வோம்" என்று உற்சாகம் ஊட்டியுள்ளார். மேலும் இச்செயல் மக்களுக்கு தலைவர் வழிகாட்டும் முக்கியத்துவத்தையும், படைப்புத் திறமைக்கும் ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும். #பழனி #கலைபோட்டி #பயிற்சி #மாணவர்கள் #பழனி #மாணவிஓவியம் #அசத்தல்கலை #தமிழ்இலக்கு #ArteTamil #ArtistOnInstagram #CreativeTamil #ArtLovers #TamilArtistry #InstaArt #DCBAUDHAYANATHINI #UDHAYANANTHINIPALANI #UDHAYANANTHINIART

7,027 உறுப்பினர்கள் கல்லூரி மைதானத்தில் ஒன்று கூடி பாரம்பரிய குழு நடனம்

  7,027 உறுப்பினர்கள் கல்லூரி மைதானத்தில் ஒன்று  கூடி  பாரம்பரிய குழு நடன வடிவத்தை நிகழ்த்தி சாதனை  புத்தகத்தில் இடம் பிடித்தது. கேரள மாநிலம் , குடும்பஸ்ரீ , குட்டநல்லுார்  அரசு கல்லூரியில் , மெகா திருவாதிரை நடன நிகழ்ச்சியை நடத்தி , உலக சாதனை படைத்துள்ளது . குடும்பஸ்ரீயின் 7,027 உறுப்பினர்கள் கல்லூரி மைதானத்தில் கூடி பாரம்பரிய குழு நடன வடிவத்தை நிகழ்த்தினர் . இந்த நடன வடிவம் பொதுவாக மலையாள மாதமான சிங்கம் மாதத்தில் ஓணம் பண்டிகையின் போதும் , எப்போதாவது தனு மாதத்திலும்   இது நிகழ்த்தப்படுகிறது . இந்நிகழ்ச்சியை வருவாய்த் துறை அமைச்சர் கே . ராஜன் தொடங்கி வைத்து , குடும்பஸ்ரீ மகளிர் மேம்பாட்டிற்கான முன்மாதிரி என்று பாராட்டினார் , உலகின் மிகப்பெரிய மகளிர் நெட்வொர்க் என்ற அந்தஸ்தை எடுத்துரைத்தார் . சுற்றுலாத் துறை , மாவட்ட நிர்வாகம் , மாநகராட்சி ஆகியவை இணைந்து மாவட்ட ஓணம் கொண்டாட்டத்தை நடத்தின .   தற்போது கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெறுவது குறித்து ஏற்பாட்டாளர்கள் ஆலோசித்து வருகின்றனர் ...