முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மக்கள் சேவையில் சித்தமருத்துவர்

மக்கள் சேவையில் சித்தமருத்துவர்

திண்டுக்கல் மாவட்டம் பழனி வட்டத்தில் நோய் நாடி நோய் முதல் நாடி ஆராயும் பாங்கு கொண்ட அரசு மருத்துவமனையில் சித்தா பிரிவில் தமிழக அரசின் சிறந்த சித்தமருத்துவ விருதுபெற்ற  மாமனிதன் டாக்டர் மகேந்திரன் அவர்கள்   பழனி மற்றும் அதைச்சுற்றியுள்ள பகுதிகளுக்கு   சித்த மருத்துவத்தை பிரபலமாக்கியவர்.

மருத்துவ பணியில்

மருத்துவ பணியில்     மகத்தான பணியை இடைவிடாது மக்களுக்கு கொண்டு செல்ல முனைப்புடன் செயல்படும்  இவர். நோயாளிகளை கவனிக்கும் கனிவு.  எல்லாமே ஆச்சரியம். எல்லா நோய்க்கும் பாரம்பரிய வைத்தியம் உண்டு என்பதை இவர் விவரிப்பது வித்தியாசமாக இருக்கும். டெங்கு வைரல் காய்சல் வந்த போது நிலவேம்பு கசாயத்தை இலவசமாக அரசு மருத்துவமனையில் வைத்தார். இன்றும் எல்லா வார்டுகளிலும் நிலவேம்பு கசாயம் கேன்கள்  இருக்கும். பழனி பகுதியில் டெங்கு பரவாமல் இருந்ததுக்கு இது ஒரு முக்கிய காரணம் எனலாம்.  இப்போது கொரோனாவிற்கு கபசுர பொடி வியாபாரமான போது பழனி அரசு மருத்துவமனையில் கபசுர குடிநீரை இலவசமாகவும், அவசியமாகவும் கட்டாயம் பருக வேண்டும் மக்களிடம் தினமும் எடுத்துரைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தியவர்.. பழனி பகுதியில் இது பரவி விட கூடாது என்று இந்த ஐம்பது  நாட்களில் நூற்றிற்கும் மேற்பட்ட கிராமங்களில் பணிக்கு முன்னும் பின்னும் மக்களுக்கு கபசுர குடிநீர் கொடுத்து பழனியில் கொரோனா பரவாமல் தடுத்திருக்கிறார். பாரம்பரிய வைத்தியம் மீண்டும் அந்த நோய் வராமல் தடுப்பதோடு நமக்கு நோய் எதிர்ப்புச் சக்தி கொடுக்கிறது என்பது இவர் கூற்று. ஆனால் நாம் நோய் அவசரம் காரணமாக ஆங்கில வைத்தியத்தில் நோயை மட்டும் குணப்படுத்தி எதிர்ப்பு சக்தியை இழக்கிறோம். நமது பண்டைய உணவில் மஞ்சள் இஞ்சி பூண்டு சுக்கு எலுமிச்சை மிளகு சீரகம் ஏலக்காய் கிராம்பு இவை இருப்பதால் தான் நோய் எதிர்ப்பு சக்தியோடு  கொரோனாவின் வீரியத்தை கட்டுபடுத்தி இருக்கிறோம். என மக்களுக்கு எளிமையாக புரியவைத்திருக்கிறார் என்பதில் ஐயமில்லை.          

மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் சில வரிகள்

பழநிபொதுமக்களுக்கும்.
தன்னார்வலர்களுக்கும், தொண்டுநிறுவனங்களுக்கும். சமூக ஆர்வலர்களுக்கும் மருத்துவரின் ஒர்  அன்பான வேண்டு கோள் கபசுரக்குடிநீர்.நிலவேம்பு கசாயம் உடம்பில் தடுக்கும் எதிர்ப்புசக்திவாய்ந்தாகும்.பொதுமக்கள் பின் பற்ற கூடிய வழி முறைகள். 1)நீங்கள் வீட்டில் உள்ளவர்களிடம்.வெளியில் உள்ளவர்களிடமும் அனுகும்போது கண்டிப்பாக முககவசங்களை அணிந்து கொண்டுதான் பேச வேண்டும்.

2)பொதுவாக மக்கள் கூடும் இடங்களில்  மளிகைகடையோ.காய்கறிகள் வாங்கும்கடையோ.
மருந்துக்கடையோ.இறைச்சிகடைகளிலோ நீங்கள் தனிநபர் இடைவெளிவிட்டு  நிற்க  வேண்டும்.
3)பொது இடங்களில் கபரசுரக்குடிநீர் .நிலவேம்பு கசாயம் தரும்போது நாங்களே உங்கள் இடம் தேடி கசாயத்தை தருகிறோம்.
நீங்கள் அடிக்கடி ஞாபகம் வைத்துக்கொள்ள வேண்டிய அன்பான மருத்துவரின் வேண்டுகோள்.
நண்பர்கள்,உற்றார்,உறவினர்கள்,குடுபத்தினர்,சந்திக்கும் பொன்னான வாய்ப்புகள் கிடைக்கும் பொழுது கொரனோவைரஸ் கிருமிகள் ஒழிப்பு ஞாபகத்தையும் கை கழுவும்முறையும் எடுத்துக் கூற வேண்டும் .வெளியில் செல்லும் பொழுது முககவசம் அணிந்து கொள்ள வேண்டும்.சமூக தனிநபர் இடை வெளியை பின் பற்றுங்கள்.உயிர் எவ்வளவு விலை கொடுத்தாலும் வாங்கமுடியாது.மனிதர்களின் உயிர்களின் முக்கியம் கருதி இதில் நாம் அனைவரும் பயணம்செய்து உங்கள் பெரும்ஆதரவுடன் கொரனோ என்ற அரக்கனை வெல்வோம்.
என அழகாக மக்களிடையே எடுத்துக் கூறி கபசுர குடிநீர் வழங்கி விட்டு அடுத்த கிராமத்தை நோக்கி பயணிக்கும் இவரது விடா முயற்சி கண்டு வியந்தனர் என சமூக ஆர்வலர்கள் கூறுவது பாரம்பரியத்தை பழகுவோம் என நினைவு படுத்துகிறது.



                       சிறப்பு செய்தியாளர் 
                                  ஆ.சூரியா 
                    சுனாமிசுடர் மாத இதழ்.
             அகில உலக பன்முனை                      பத்திரிகையாளர் நலச்சங்க                  திண்டுக்கல் மாவட்ட தலைவர். 
                    www.dcbworldrecords.com 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

“The Largest Fingerprint Portrait of Dr. B.R. Ambedkar A Symbol of Unity”

சேலம் பொறியியல் கல்லூரி மாணவ- மாணவிகளின் அம்பேத்கர் கலைப்படைப்பு அதிகாரப்பூர்வமாக DCB WORLD RECORDS நிறுவனம் உலக சாதனையாக பதிவு. சேலம் 29: சேலம் அரசு பொறியியல் கல்லூரி மாணவ- மாணவிகள் 8,21,547 பெருவிரல் கை ரேகைகளைப் பயன்படுத்தி 48.5 அடி நீளமும் 68 அடி அகலமுமான டாக்டர் பி. ஆர். அம்பேத்கரின் ஒரு பிரமாண்டமான போர்ட்ரேட் (ஓவியம்), வெற்றிகரமாக உருவாக்கி உள்ளனர் . டிசிபி வேர்ல்ட் ரெகார்ட்ஸ்’ நிறுவனம் “The Largest Fingerprint Portrait of Dr. B.R. Ambedkar A Symbol of Unity” என்ற தலைப்பில் உலக சாதனையாக அதிகாரப்பூர்வமாக பதிவு செய்து சான்றிதழ் வழங்கப்பட்டது. டிசிபி வேர்ல்ட் ரெகார்ட்ஸ் நிறுவனத்தின் சார்பில் டாக்டர் ஆ. சூரியா மற்றும் விருந்தினராக டாக்டர்.நட்சத்திரா,அப்துல் ரஹீம், மற்றும் ரகுமான் ஆகியோர் நிகழ்வில் கலந்து கொண்டு சாதனையை நேரடியாக ஆய்வு செய்து, உலக சாதனையின் அனைத்து விதிமுறைகளும் நிறைவேற்றப்பட்டதை உறுதி செய்தனர். இதன் பின்னர், ஒரு சிறப்பு நிகழ்வில் உலக சாதனை சான்றிதழை டாக்டர் ஆ. சூரியா மற்றும் டாக்டர் நட்சத்திரா ஆகியோர் கல்லூரி முதல்வர் டாக்டர் கீதா, பேராசிரியர்.தீபக் குமார் VIB...

பழனி மாணவியின் அசத்தல் ஓவியம்!

பழனி மாணவியின் அசத்தல் ஓவியம்! 🎨✨ திண்டுக்கல் மாவட்டம் பழனியைச் சேர்ந்த ஐந்தாம் வகுப்பு மாணவி அ.உதய நந்தினி, மக்களின் மனம் கவர்ந்த திட்டங்களைத் தொகுத்து, திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும் முன்னாள் முதல் வருமான முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களுக்கு பணிவான மரியாதையாக அக்கருவை வரைந்து வழிகாட்டியுள்ளார். அவர் இதுபோன்ற உழைப்பால் தழுவிய உணர்வை முறைமையாக வெளிப்படுத்தி, "மீண்டும் வெல்வோம், வெற்றி கொள்வோம்" என்று உற்சாகம் ஊட்டியுள்ளார். மேலும் இச்செயல் மக்களுக்கு தலைவர் வழிகாட்டும் முக்கியத்துவத்தையும், படைப்புத் திறமைக்கும் ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும். #பழனி #கலைபோட்டி #பயிற்சி #மாணவர்கள் #பழனி #மாணவிஓவியம் #அசத்தல்கலை #தமிழ்இலக்கு #ArteTamil #ArtistOnInstagram #CreativeTamil #ArtLovers #TamilArtistry #InstaArt #DCBAUDHAYANATHINI #UDHAYANANTHINIPALANI #UDHAYANANTHINIART

7,027 உறுப்பினர்கள் கல்லூரி மைதானத்தில் ஒன்று கூடி பாரம்பரிய குழு நடனம்

  7,027 உறுப்பினர்கள் கல்லூரி மைதானத்தில் ஒன்று  கூடி  பாரம்பரிய குழு நடன வடிவத்தை நிகழ்த்தி சாதனை  புத்தகத்தில் இடம் பிடித்தது. கேரள மாநிலம் , குடும்பஸ்ரீ , குட்டநல்லுார்  அரசு கல்லூரியில் , மெகா திருவாதிரை நடன நிகழ்ச்சியை நடத்தி , உலக சாதனை படைத்துள்ளது . குடும்பஸ்ரீயின் 7,027 உறுப்பினர்கள் கல்லூரி மைதானத்தில் கூடி பாரம்பரிய குழு நடன வடிவத்தை நிகழ்த்தினர் . இந்த நடன வடிவம் பொதுவாக மலையாள மாதமான சிங்கம் மாதத்தில் ஓணம் பண்டிகையின் போதும் , எப்போதாவது தனு மாதத்திலும்   இது நிகழ்த்தப்படுகிறது . இந்நிகழ்ச்சியை வருவாய்த் துறை அமைச்சர் கே . ராஜன் தொடங்கி வைத்து , குடும்பஸ்ரீ மகளிர் மேம்பாட்டிற்கான முன்மாதிரி என்று பாராட்டினார் , உலகின் மிகப்பெரிய மகளிர் நெட்வொர்க் என்ற அந்தஸ்தை எடுத்துரைத்தார் . சுற்றுலாத் துறை , மாவட்ட நிர்வாகம் , மாநகராட்சி ஆகியவை இணைந்து மாவட்ட ஓணம் கொண்டாட்டத்தை நடத்தின .   தற்போது கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெறுவது குறித்து ஏற்பாட்டாளர்கள் ஆலோசித்து வருகின்றனர் ...