முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நெகிழ்ந்த நிகழ்வு,


 கொரோனா காலகட்டத்தில் சமூக விழிப்புணர்வு

 மக்களுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக நிவாரண பொருட்களை வழங்கி கொண்டிருக்கும்கஞ்சநாயக்கன்பட்டி சேர்ந்த மாநில ஒருங்கிணைப்பாளர் குணசேகரன் இவரின் சமூக சேவை குறித்து சில நிகழ்வுகள்


     இவர் சில நாட்களாகவே கபசுரக் குடிநீர் அத்தியாவசிய பொருட்கள் வழங்குவது டாஸ்மார்க் கடை திறந்த போது மது பிரியர்களுக்கு மாசு மற்றும் விழிப்புணர்வு கொடுத்து விழிப்புணர்வை ஏற்படுத்தி மக்கள் மனதில் இடம் பிடித்தவர் மிகவும் அன்பானவர் உதவும் மனப்பான்மை கொண்டவர் இவர் சமீபத்தில்

கஞ்சநாயக்கன்பட்டி யைச் சேர்ந்த சுப்பிரமணி மகள் கற்பகவள்ளி என்பவருக்கு மாற்று அறுவை சிகிச்சைக்கு பழைய கல்லூரி நண்பர்களின் உதவியோடு ரூபாய் 10,000 நன்கொடையாக அளித்தார் மேலும் மாற்றுத்திறனாளிகளுக்கு இசைக்கலைஞர்களுக்கு கணவரை இழந்த விதவைகளுக்கு என கஷ்டப்படுபவர்களுக்கு நேரடியாகச் சென்று பொருட்களை வழங்கினார் 

                       இதில் நெகிழ்ந்த நிகழ்வு ஒன்றை நம்மோடு பகிர்ந்து கொண்டார் தமிழ்நாடு காங்கிரஸ் மாநில ஒருங்கிணைப்பாளர் குணசேகரன் M.A.,BL., கூறியதாவது

         சுப்பம்மாள்  காங்கிரஸ் ExMC. பழனிநகரம்  , 82 வயதாகிறது 
சுப்பம்மா அம்மாவை இந்த ஊரடங்கு காலங்களில்  பார்க்க போகணும்  என்று  அவ்வப்போது நினைப்பேன் பிறகு எப்படியோ மறந்துவிடுகிறேன் இன்று எப்படியாவது அவர்களைப் பார்க்க வேண்டும் என்ற முடிவில்  அவர் பெயரைச் சொல்லி தெருவில்  இருந்த பெரியவர்களிடம்  முன்னாள் கவுன்சிலர்  சுப்பம்மா எங்கு இருக்கிறார் என்று கேட்டேன் அவர்கள் இப்போது ஏதோ ஒரு முதியோர் இல்லத்தில் சேர்ந்து விட்டதாக சொன்னார்கள் (ஆஹா முன்னமே பார்க்க மறந்துவிட்டது பெரிய தவறாக ஆகிவிட்டது என்று மனதுக்குள்  ஏனென்றால்   அவருக்கு உதவி செய்ய யாரும் இருந்திருக்க மாட்டார்கள் என்று மனதுக்குள் ஓடிக் கொண்டுதான் இருந்தது) அடுத்த தெருவில் அவருடைய வீடு இருக்கிறது என்று  கேட்டு அவருடைய வீட்டை தேடி கண்டுபிடித்து   வந்துவிட்டேன்.என்னுடைய நல்ல காலம் அவரும் வீட்டில் இருந்தார் .அம்மா வணக்கம் உங்களை இந்த குரோனா காலங்களில்  உங்களைப் பார்க்க வராததற்கு மன்னிக்கணும்  அம்மா உங்களை
காங்கிரஸ்காரர்கள்  யாராவது பார்க்க வந்தார்களா அவர் முகத்தில் கவலை அவரைப் பார்ப்பதற்கு பரிதாபமாக இருந்ததுஎனக்கும் கண்களில் கண்ணீர் வந்துவிட்டது அவர் என்னைப் பார்த்து  யார்ரா நீ முகமூடிய  கழட்டு யாருன்னு பாக்கணும் இந்த  குரலை நான் எங்கேயோ கேட்டு இருக்கிறேன்என்று வினவினார்  ஆனால் குரல் கம்பீரமாக இருந்தது   அவரை நான் பார்க்க சென்ற போது அவர் சொன்ன வார்த்தைகள் உங்களுக்காக நான் அரிசி வாங்கிக்கொண்டு வந்தேன்...
 என் தங்கம் சரியான நேரத்தில் வந்து இருக்கு எனக்கு இப்போ  சமைக்க அரிசி இல்ல நான் ரொம்ப கஷ்டப்பட்டு இருக்கேன் கடவுளா பார்த்து  உன்ன  அனுப்பி இருக்கார்அரிசி பையை பார்த்து டேய் எதுக்குடா பொன்னி அரிசி எல்லாம் வாங்கிட்டு வந்த சாதாரண அரிசியை வாங்கி வர வேண்டியதுதானே  என்று சொன்னவரிடம் சிறிது நேரம் பேசிவிட்டு அவருடைய கைச்செலவுக்கு ஒரு சிறிய தொகையை பணமாக கொடுத்துவிட்டு அவரிடம் இன்று ஒரு காங்கிரஸ் கட்சியைச் சார்ந்த ஒரு ஐயா இறந்துவிட்டார் சென்று விட்டு வரும்போது உங்களை பார்க்க வந்தேன் என்று சொன்னேன் அவர் பெயரைக் கேட்டவுடன் இறந்துவிட்டாரா என்று கதறி அழுதார் அவருடைய வீட்டுக்கு கூட்டிப் போ என்று கேட்டார்  சொன்னவுடன் என்னுடைய இரண்டு சக்கர வாகனத்தில் அவரை அமரவைத்து ஒரு பதினைந்து கிலோமீட்டர் பாப்பம்பட்டி கிராமத்திற்கு  அழைத்துச் சென்று காண்பித்து வந்தவுடன் தான் அவருடைய மனதுக்கு சிறிது நிம்மதியை கொடுத்திருக்கிறது என்று சொல்லலாம்  
இப்படி சொன்ன சுப்பம்மாவுக்கு 
சொந்த வீடு கிடையாது 
ஒரே மகன் அவருக்கும் வாதநோய் வந்து நடக்க முடியாது 
6X6 என்ற ஒரு தகரக் குடிசை (வாடகை )
1972  ல் விவசாயிகளுக்கு ஆதரவான போராட்டத்தில் மதுரை மத்திய சிறைச்சாலை சிறைவாசம் 
1990 -2000 களில்  இரண்டு முறை  பழனி  நகர வார்டு கவுன்சிலர் 
ஆனால் அவருக்கு மக்கள் சேவை தவிர  மத்த குடியிருக்க வீடு   கூட  சேர்க்கும் எண்ணம் இல்லாமல் போனது எப்படி என்று எனக்கு தெரியவில்லைஆனால் இப்போது  இந்தக்  காலகட்டங்களில் இவரைப் போன்றவர்களுக்கு  காங்கிரஸ்  கட்சி என்ன செய்கிறது இவர்களை கண்டறிந்து இவர்களுக்குத் தேவையான உதவியை வசதியை செய்து கொடுக்க வேண்டும் (என்னை நானே கேட்டுக் கொள்ள வேண்டிய கேள்வி தான் நானும் காங்கிரஸ் தானே  ) காங்கிரஸ் கட்சிக்காக உழைத்தவர்கள் அல்லவா ?தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி இதுபோன்ற நலிவடைந்த காங்கிரசுக்காக உழைத்த நல்ல உள்ளங்களுக்கு அவர்களுடைய வாழ்வாதாரத்திற்கு தேவையான உதவியை செய்து கொடுக்க வேண்டுமென்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு அழகிரி அவர்களை கேட்டுக்கொள்கிறேன். என அன்போடு கேட்டுக் கொண்டு சமூக பயணத்தை தொடர்கிறார் நாமும் வாழ்த்துவோம்.


              சிறப்பு செய்தியாளர் 
                                  ஆ.சூரியா 
                    சுனாமிசுடர் மாத இதழ்.
             அகில உலக பன்முனை                      பத்திரிகையாளர் நலச்சங்க                  திண்டுக்கல் மாவட்ட தலைவர். 
                    www.dcbworldrecords.com 



#DailyNews  #sunamisudarmonthlymagazine

#subeditor #umjwa #palani #umjwa #subeditorsuriya

#dcbworldrecords  #adjudicatorteam  #adjudicator  #dcbnews

#Newtalents #dcbCreativity  #dcbindia  #dcbtalents

 #dcbadjudicator  #dcbnews  #dcbrecords  #Creator  #explore

#dcbinternationalrecordswrrf  #editorsuriya  #adjudicatorsuriya

#dcbworldrecords #dcbwrrf  

சுனாமி சுடர் மாத இதழ்  இணை ஆசிரியர்   
மதிப்புறு முனைவர்  .சூரியா TTC.,RJ.,CC.,JMC.,

 





கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

5000 வார்த்தைகளால் பிறந்தநாள் வாழ்த்து

5000 வார்த்தைகளால் பிறந்தநாள் வாழ்த்து திண்டுக்கல் மாவட்டம், பழனி வட்டத்தைச் சேர்ந்த ஓவிய ஆசிரியரும், சூப்பர் ஆரட்ஸ் நிறுவனருமான சூப்பர் சின்னப்பா அவர்கள் தர்மம் வெல்லும்  எனும் வார்த்தைகளால் ஓவியம் வரைந்து அசத்தல்.. இன்று  பிறந்தநாள் விழா காணும் தேசிய திராவிட முற்போக்கு கழகத்தின் கட்சியின் தலைவர், நடிகருமான கேப்டன் விஜயகாந்த் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு 10 அடி நீளமும் 10 அடி அகலமும்  கொண்ட பதாகையில் தொடர்ந்து 5 மணி நேரம் தர்மம் வெல்லும் என்ற வார்த்தையை பயன்படுத்தி அவரின் படத்தினை வரைந்து விரைவில் பூரண நலம் பெற ஓவியக் கலைஞராக வாழ்த்து தெரிவித்துள்ளார்.          ஓவியத்தில் இது போன்ற முயற்சி முதன்மையானது. எனவும் இதற்கு முன்பு விழிப்புணர்வு ஓவியங்கள் வரைந்திருந்தாலும் அவற்றில் இது மிகவும் கடினமானதாகவும் இருந்தது எனவும் கூறியுள்ளார் இந்த ஓவியம் நிச்சயம் குணப்படுத்தும் எனவும் நம்பிக்கை தெரிவித்துள்ளார் நாமும் நம்பிக்கையோடு வாழ்த்துவோம்5000 வார்த்தைகளால் பிறந்தநாள் வாழ்த்து திண்டுக்கல் மாவட்டம் பழனி வட்டத்தைச் சேர்ந்த ஓவிய ஆசிரியரும் சூப்பர் ஆரட்ஸ் நிறுவன வருமான சூப்பர் சின்னப்பா அவர்கள்

சதுரங்கத்தில் சாதனை சுபஸ்ரீ

  சதுரங்கத்தில் சாதனை சாதாரண கிராமத்தில் மண் வாசனையோடு களம் காண தெரியாமல் இன்னும் எத்தனையோ திறமையாளர்கள் தங்களுக்குள் ஒளிந்திருக்கும் தனித் திறமைகளை அடையாளம் காட்ட முடியாமல் மறைத்துக் கொண்டு வாழ்ந்து வருகின்றனர் . ஆனால்   அமரபூண்டியை சேர்ந்த மாற்றத்திற்கான மாற்றுத்திறனாளி , தன்னம்பிக்கை நாயகன் முருகானந்தம் அவர்கள் அவரது மூத்த மகளான சுபஸ்ரீயை அவரது பயிற்சியால் சுமார் ஐந்து ஆண்டுகளாக செஸ் ( சதுரங்கம் )   பயிற்சி பெற்று சிறந்த விளையாட்டு வீரராக திகழ்ந்து வருகிறார் . திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் குறுவட்ட அளவிலான போட்டியில் கலந்து கொண்டு மாவட்ட அளவில் இரண்டாம் பரிசினை   பெற செய்துள்ளார் . ஆம் வாசகர்களே ..... விழிப்புணர்வு போட்டி கடந்த ஜூலை மாதம் சென்னை அடுத்து மாமல்லபுரத்தில் நடைபெற்ற செஸ்   ஒலிம்பியாட் குறித்து விழிப்புணர்வுக்காக தமிழக முழுவதும் பல்வேறு செஸ் போட்டிகள் நடைபெற்றது . அதில் குறிப்பாக ஒட்டன்சத்திரம் வட்டார அளவில் செஸ் போட்டி நடைபெற்றது . இதில் அரசு பள்ளி மாணவ , மாணவிகள் அரசு உதவி

7,027 உறுப்பினர்கள் கல்லூரி மைதானத்தில் ஒன்று கூடி பாரம்பரிய குழு நடனம்

  7,027 உறுப்பினர்கள் கல்லூரி மைதானத்தில் ஒன்று  கூடி  பாரம்பரிய குழு நடன வடிவத்தை நிகழ்த்தி சாதனை  புத்தகத்தில் இடம் பிடித்தது. கேரள மாநிலம் , குடும்பஸ்ரீ , குட்டநல்லுார்  அரசு கல்லூரியில் , மெகா திருவாதிரை நடன நிகழ்ச்சியை நடத்தி , உலக சாதனை படைத்துள்ளது . குடும்பஸ்ரீயின் 7,027 உறுப்பினர்கள் கல்லூரி மைதானத்தில் கூடி பாரம்பரிய குழு நடன வடிவத்தை நிகழ்த்தினர் . இந்த நடன வடிவம் பொதுவாக மலையாள மாதமான சிங்கம் மாதத்தில் ஓணம் பண்டிகையின் போதும் , எப்போதாவது தனு மாதத்திலும்   இது நிகழ்த்தப்படுகிறது . இந்நிகழ்ச்சியை வருவாய்த் துறை அமைச்சர் கே . ராஜன் தொடங்கி வைத்து , குடும்பஸ்ரீ மகளிர் மேம்பாட்டிற்கான முன்மாதிரி என்று பாராட்டினார் , உலகின் மிகப்பெரிய மகளிர் நெட்வொர்க் என்ற அந்தஸ்தை எடுத்துரைத்தார் . சுற்றுலாத் துறை , மாவட்ட நிர்வாகம் , மாநகராட்சி ஆகியவை இணைந்து மாவட்ட ஓணம் கொண்டாட்டத்தை நடத்தின .   தற்போது கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெறுவது குறித்து ஏற்பாட்டாளர்கள் ஆலோசித்து வருகின்றனர் . #DcbTn #DcbTamilCulture #DcbTale