முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கொரோனவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் 400 பேருக்கு நிவாரண உதவி


சென்னை

கொரோனவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் 400 பேருக்கு நிவாரண உதவி 

          – துவங்கி வைத்து தன்னார்வலர்களை உற்சாகப்படுத்திய செயின்ட் தாமஸ் மவுண்ட் காவல் துணை ஆணையர் திரு. டாக்டர் கே.பிரபாகர்

சென்னை பெரும்பாக்கத்தில் உள்ள தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரித்தில் கொரோனவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் சுமார் 400 பேருக்கு நிவாரண பொருட்களை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.



தனியார் தன்னார்வ அமைப்பான டர்னிங் பாயிண்ட் எஜுகேஷனல் டிரஸ்ட் முயற்சியில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் சென்னை புனித தோமையர் மலை மாவட்ட (செயின்ட் தாமஸ் மவுண்ட்) காவல் துணை ஆணையர் திரு.டாக்டர் கே.பிரபாகர் அவர்கள் சிறப்பு அழைப்பாளராக வைத்து தலைமை ஏற்று துவங்கி வைத்தார்.


மேலும் அவர், சென்னை காவல் துறை என்றுமே பொதுமக்களுக்கு நண்பனாக இருக்கும் அதே சமயம் பொதுமக்களும் ஒத்துழைப்பு நல்குவது அவசியம். இந்த கொரோனா காலத்தில் அனைவரும் அரசாங்க வழிமுறைகளை பின்பற்றவேண்டும் என்றும் முககவசம் கட்டாயம் அணியவேண்டும் என்றும் அத்தியாவசிய தேவைகளை தவிர வேறு எந்த காரணத்திற்காகவும் வெளியே சுற்றக்கூடாது எனவும் கூறினார்.
இது தவிர இந்த கொரோனா காலத்தில் சேவை செய்யும் தன்னார்வலர்களை பாராட்டி அனைவரையும் ஊக்கப்படுத்தினார்.


இந்த நிகழ்சியை ஏற்பாடு செய்த டர்னிங் பாயிண்ட் எஜுகேஷனல் டிரஸ்ட் நிர்வாக அறங்காவலர் திரு. மொராஜி தேசாய், அறங்காவலர் வித்யாதரன் மற்றும் குடிசைப்பகுதி மாற்று வாரிய நிர்வாக பொறியாளர் திரு.சேகர், மடிப்பாக்கம் சரகம் காவல் உதவி ஆணையர் திரு. சவரிநாதன், எஸ் 10 பள்ளிக்கரணை காவல் நிலைய ஆய்வாளர்கள் திரு. அழகு, திரு. சாம் வின்சென்ட் மற்றும் உதவி ஆய்வாளர் திரு. திருநாவுக்கரசு மற்றும் சமூக ஆர்வலர் கலைமணி ஆகியோர் உடன் இருந்தனர்.

                        இணை ஆசிரியர்
                                 ஆ.சூரியா 
                    சுனாமிசுடர் மாத இதழ்.
             அகில உலக பன்முனை                      பத்திரிகையாளர் நலச்சங்க                  திண்டுக்கல் மாவட்ட தலைவர். 
                    www.dcbworldrecords.com

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

“The Largest Fingerprint Portrait of Dr. B.R. Ambedkar A Symbol of Unity”

சேலம் பொறியியல் கல்லூரி மாணவ- மாணவிகளின் அம்பேத்கர் கலைப்படைப்பு அதிகாரப்பூர்வமாக DCB WORLD RECORDS நிறுவனம் உலக சாதனையாக பதிவு. சேலம் 29: சேலம் அரசு பொறியியல் கல்லூரி மாணவ- மாணவிகள் 8,21,547 பெருவிரல் கை ரேகைகளைப் பயன்படுத்தி 48.5 அடி நீளமும் 68 அடி அகலமுமான டாக்டர் பி. ஆர். அம்பேத்கரின் ஒரு பிரமாண்டமான போர்ட்ரேட் (ஓவியம்), வெற்றிகரமாக உருவாக்கி உள்ளனர் . டிசிபி வேர்ல்ட் ரெகார்ட்ஸ்’ நிறுவனம் “The Largest Fingerprint Portrait of Dr. B.R. Ambedkar A Symbol of Unity” என்ற தலைப்பில் உலக சாதனையாக அதிகாரப்பூர்வமாக பதிவு செய்து சான்றிதழ் வழங்கப்பட்டது. டிசிபி வேர்ல்ட் ரெகார்ட்ஸ் நிறுவனத்தின் சார்பில் டாக்டர் ஆ. சூரியா மற்றும் விருந்தினராக டாக்டர்.நட்சத்திரா,அப்துல் ரஹீம், மற்றும் ரகுமான் ஆகியோர் நிகழ்வில் கலந்து கொண்டு சாதனையை நேரடியாக ஆய்வு செய்து, உலக சாதனையின் அனைத்து விதிமுறைகளும் நிறைவேற்றப்பட்டதை உறுதி செய்தனர். இதன் பின்னர், ஒரு சிறப்பு நிகழ்வில் உலக சாதனை சான்றிதழை டாக்டர் ஆ. சூரியா மற்றும் டாக்டர் நட்சத்திரா ஆகியோர் கல்லூரி முதல்வர் டாக்டர் கீதா, பேராசிரியர்.தீபக் குமார் VIB...

பழனி மாணவியின் அசத்தல் ஓவியம்!

பழனி மாணவியின் அசத்தல் ஓவியம்! 🎨✨ திண்டுக்கல் மாவட்டம் பழனியைச் சேர்ந்த ஐந்தாம் வகுப்பு மாணவி அ.உதய நந்தினி, மக்களின் மனம் கவர்ந்த திட்டங்களைத் தொகுத்து, திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும் முன்னாள் முதல் வருமான முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களுக்கு பணிவான மரியாதையாக அக்கருவை வரைந்து வழிகாட்டியுள்ளார். அவர் இதுபோன்ற உழைப்பால் தழுவிய உணர்வை முறைமையாக வெளிப்படுத்தி, "மீண்டும் வெல்வோம், வெற்றி கொள்வோம்" என்று உற்சாகம் ஊட்டியுள்ளார். மேலும் இச்செயல் மக்களுக்கு தலைவர் வழிகாட்டும் முக்கியத்துவத்தையும், படைப்புத் திறமைக்கும் ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும். #பழனி #கலைபோட்டி #பயிற்சி #மாணவர்கள் #பழனி #மாணவிஓவியம் #அசத்தல்கலை #தமிழ்இலக்கு #ArteTamil #ArtistOnInstagram #CreativeTamil #ArtLovers #TamilArtistry #InstaArt #DCBAUDHAYANATHINI #UDHAYANANTHINIPALANI #UDHAYANANTHINIART

7,027 உறுப்பினர்கள் கல்லூரி மைதானத்தில் ஒன்று கூடி பாரம்பரிய குழு நடனம்

  7,027 உறுப்பினர்கள் கல்லூரி மைதானத்தில் ஒன்று  கூடி  பாரம்பரிய குழு நடன வடிவத்தை நிகழ்த்தி சாதனை  புத்தகத்தில் இடம் பிடித்தது. கேரள மாநிலம் , குடும்பஸ்ரீ , குட்டநல்லுார்  அரசு கல்லூரியில் , மெகா திருவாதிரை நடன நிகழ்ச்சியை நடத்தி , உலக சாதனை படைத்துள்ளது . குடும்பஸ்ரீயின் 7,027 உறுப்பினர்கள் கல்லூரி மைதானத்தில் கூடி பாரம்பரிய குழு நடன வடிவத்தை நிகழ்த்தினர் . இந்த நடன வடிவம் பொதுவாக மலையாள மாதமான சிங்கம் மாதத்தில் ஓணம் பண்டிகையின் போதும் , எப்போதாவது தனு மாதத்திலும்   இது நிகழ்த்தப்படுகிறது . இந்நிகழ்ச்சியை வருவாய்த் துறை அமைச்சர் கே . ராஜன் தொடங்கி வைத்து , குடும்பஸ்ரீ மகளிர் மேம்பாட்டிற்கான முன்மாதிரி என்று பாராட்டினார் , உலகின் மிகப்பெரிய மகளிர் நெட்வொர்க் என்ற அந்தஸ்தை எடுத்துரைத்தார் . சுற்றுலாத் துறை , மாவட்ட நிர்வாகம் , மாநகராட்சி ஆகியவை இணைந்து மாவட்ட ஓணம் கொண்டாட்டத்தை நடத்தின .   தற்போது கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெறுவது குறித்து ஏற்பாட்டாளர்கள் ஆலோசித்து வருகின்றனர் ...