முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தக்காளி மகேந்திரனின் தாராளமனசு

கொரோனாவின் கோரத்தாண்டவத்தால் பொருளாதாரமின்றி தவித்த மக்களுக்கு நாம் அரிசி மற்றும் காய்கறிகளை வழங்கி வந்தோம். அந்த சமயத்தில் நாம் சந்தித்த ஓர் சேவை மனமுள்ள அற்புதமான மனிதர் தக்காளி மொத்த வியாபாரி மகேஸ்வரன், மக்குளுக்கு தேவையான அத்தியாவசிய பொருளான தக்காளி மற்றும் வெங்காயத்தை மொத்தமாக வாங்குவதர்க்காக கோயம்பேடு மார்க்கெட் சென்றோம். மொத்தமாக விற்பனை செய்யும் வியாபாரியாக சந்தித்தோம் அவரிடம் பேசினோம் நாம் செய்யும் ஔசேவைகளை விளக்கினோம். அப்பொழுது அவர் கூறியது எனக்கும் நிறைய செய்ய வேண்டும் என்ற ஆசை இருக்கிறது ஆனால் பொருளாதாரம் நம்மையும் துன்பத்திற்கு ஆளாக்குகிறது என்று கூறினார். நிறைய பேசினோம் வியாபாரத்தின் இடையே, முதல் வியாபாரம் முடிந்து பல்லாயிரக்கணக்கான ரூபாய்க்கு காய்கறிகள் வாங்கி அதை நாம் சேவையாக செய்ததை வீடியோ மற்றும் புகைபடமாக அனுப்பினேன். அதை பார்த்த அவர் அன்று முதல் நாம் அவரிடம் வாங்கும் எடுக்கும் விலைக்கே பொருட்களை கொடுத்து உதவினார். அதுமட்டுமல்லாது இன்று வரை அவரிடம் கடனே பல ஆயிரங்கள் உள்ளது. அதை எல்லாம் அவர் பொருட்டப்படுத்தாமல் கேட்கும் போதெல்லாம் காய்கறிகளை அனுப்பி வைப்பார். எப்படியும் உதவலாம் இப்படியும் உதவலாம் நம் சக்திக்கு ஏற்றார் போல.சிறந்து விளங்கும் இவரது செயல் பாராட்டுக்குரியது.
               சுனாமி சுடர் ஆலோசகர்
                   தமிழ்
                          இணை ஆசிரியர்
                                 ஆ.சூரியா 
                    சுனாமிசுடர் மாத இதழ்.
             அகில உலக பன்முனை                      பத்திரிகையாளர் நலச்சங்க                  திண்டுக்கல் மாவட்ட தலைவர். 
                    www.dcbworldrecords.com

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

5000 வார்த்தைகளால் பிறந்தநாள் வாழ்த்து

5000 வார்த்தைகளால் பிறந்தநாள் வாழ்த்து திண்டுக்கல் மாவட்டம், பழனி வட்டத்தைச் சேர்ந்த ஓவிய ஆசிரியரும், சூப்பர் ஆரட்ஸ் நிறுவனருமான சூப்பர் சின்னப்பா அவர்கள் தர்மம் வெல்லும்  எனும் வார்த்தைகளால் ஓவியம் வரைந்து அசத்தல்.. இன்று  பிறந்தநாள் விழா காணும் தேசிய திராவிட முற்போக்கு கழகத்தின் கட்சியின் தலைவர், நடிகருமான கேப்டன் விஜயகாந்த் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு 10 அடி நீளமும் 10 அடி அகலமும்  கொண்ட பதாகையில் தொடர்ந்து 5 மணி நேரம் தர்மம் வெல்லும் என்ற வார்த்தையை பயன்படுத்தி அவரின் படத்தினை வரைந்து விரைவில் பூரண நலம் பெற ஓவியக் கலைஞராக வாழ்த்து தெரிவித்துள்ளார்.          ஓவியத்தில் இது போன்ற முயற்சி முதன்மையானது. எனவும் இதற்கு முன்பு விழிப்புணர்வு ஓவியங்கள் வரைந்திருந்தாலும் அவற்றில் இது மிகவும் கடினமானதாகவும் இருந்தது எனவும் கூறியுள்ளார் இந்த ஓவியம் நிச்சயம் குணப்படுத்தும் எனவும் நம்பிக்கை தெரிவித்துள்ளார் நாமும் நம்பிக்கையோடு வாழ்த்துவோம்5000 வார்த்தைகளால் பிறந்தநாள் வாழ்த்து திண்டுக்கல் மாவட்டம் பழனி வட்டத்தைச் சேர்ந்த ஓவிய ஆசிரியரும் சூப்பர் ஆரட்ஸ் நிறுவன வருமான சூப்பர் சின்னப்பா அவர்கள்

சதுரங்கத்தில் சாதனை சுபஸ்ரீ

  சதுரங்கத்தில் சாதனை சாதாரண கிராமத்தில் மண் வாசனையோடு களம் காண தெரியாமல் இன்னும் எத்தனையோ திறமையாளர்கள் தங்களுக்குள் ஒளிந்திருக்கும் தனித் திறமைகளை அடையாளம் காட்ட முடியாமல் மறைத்துக் கொண்டு வாழ்ந்து வருகின்றனர் . ஆனால்   அமரபூண்டியை சேர்ந்த மாற்றத்திற்கான மாற்றுத்திறனாளி , தன்னம்பிக்கை நாயகன் முருகானந்தம் அவர்கள் அவரது மூத்த மகளான சுபஸ்ரீயை அவரது பயிற்சியால் சுமார் ஐந்து ஆண்டுகளாக செஸ் ( சதுரங்கம் )   பயிற்சி பெற்று சிறந்த விளையாட்டு வீரராக திகழ்ந்து வருகிறார் . திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் குறுவட்ட அளவிலான போட்டியில் கலந்து கொண்டு மாவட்ட அளவில் இரண்டாம் பரிசினை   பெற செய்துள்ளார் . ஆம் வாசகர்களே ..... விழிப்புணர்வு போட்டி கடந்த ஜூலை மாதம் சென்னை அடுத்து மாமல்லபுரத்தில் நடைபெற்ற செஸ்   ஒலிம்பியாட் குறித்து விழிப்புணர்வுக்காக தமிழக முழுவதும் பல்வேறு செஸ் போட்டிகள் நடைபெற்றது . அதில் குறிப்பாக ஒட்டன்சத்திரம் வட்டார அளவில் செஸ் போட்டி நடைபெற்றது . இதில் அரசு பள்ளி மாணவ , மாணவிகள் அரசு உதவி

7,027 உறுப்பினர்கள் கல்லூரி மைதானத்தில் ஒன்று கூடி பாரம்பரிய குழு நடனம்

  7,027 உறுப்பினர்கள் கல்லூரி மைதானத்தில் ஒன்று  கூடி  பாரம்பரிய குழு நடன வடிவத்தை நிகழ்த்தி சாதனை  புத்தகத்தில் இடம் பிடித்தது. கேரள மாநிலம் , குடும்பஸ்ரீ , குட்டநல்லுார்  அரசு கல்லூரியில் , மெகா திருவாதிரை நடன நிகழ்ச்சியை நடத்தி , உலக சாதனை படைத்துள்ளது . குடும்பஸ்ரீயின் 7,027 உறுப்பினர்கள் கல்லூரி மைதானத்தில் கூடி பாரம்பரிய குழு நடன வடிவத்தை நிகழ்த்தினர் . இந்த நடன வடிவம் பொதுவாக மலையாள மாதமான சிங்கம் மாதத்தில் ஓணம் பண்டிகையின் போதும் , எப்போதாவது தனு மாதத்திலும்   இது நிகழ்த்தப்படுகிறது . இந்நிகழ்ச்சியை வருவாய்த் துறை அமைச்சர் கே . ராஜன் தொடங்கி வைத்து , குடும்பஸ்ரீ மகளிர் மேம்பாட்டிற்கான முன்மாதிரி என்று பாராட்டினார் , உலகின் மிகப்பெரிய மகளிர் நெட்வொர்க் என்ற அந்தஸ்தை எடுத்துரைத்தார் . சுற்றுலாத் துறை , மாவட்ட நிர்வாகம் , மாநகராட்சி ஆகியவை இணைந்து மாவட்ட ஓணம் கொண்டாட்டத்தை நடத்தின .   தற்போது கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெறுவது குறித்து ஏற்பாட்டாளர்கள் ஆலோசித்து வருகின்றனர் . #DcbTn #DcbTamilCulture #DcbTale