முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தேசியக்கொடி வடிவத்தில் கின்னஸ் உலக சாதனை

 
 சுதந்திர தினம் நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டது .அதில் சில சாதனை பதிவுகளாகவும் நடைபெற்றது.நம்மலாம் சிறிய ஓவியம் வரைய கஷ்டப்படுவோம் ஆனால் சிலர் அசார்த்தியமாக வரைவது பிரம்மிப்பளிக்கும் அந்தவகையில் கண்ணில் பட்ட சில கலைசார்ந்த சிந்தனை கொண்ட  சில சுதந்திரவிழாவை பற்றி உங்கள் பார்வைக்கு

கூகுள் டூடுல்

கூகுள் டூடுல்  முக்கியமான  தினங்களில்  அதை கொண்டாடும் வகையில் கலை படைப்பை வெளிப்படுத்தும் 

 அந்த வகையில்

இந்தியா 75 வயதில்  சுதந்திர தினத்தன்று  : கூகுள் டூடுல் 2022 சுதந்திர தினத்தை கேரள கலைஞரின் படைப்புகளுடன் கொண்டாடியது.நீதியால் உருவாக்கப்பட்ட  படத்தில்  ஒரு குடும்பத்தினர் சுதந்திரமாக, பட்டம் செய்து அதனை வானில் பறக்கவிடுவது போன்று அமைக்கப்பட்டுள்ளது. இது நாம் அடைந்துள்ள உயரங்களின் அடையாளமாக கருது வதாக விளக்கப்பட்டுள்ளது. இது ஒரு GIF அனிமேஷன் ஆகும். இதை தொட்டவுடன் அதிக பட்டங்கள் பறக்கும் .....

உயரும் பட்டாம்பூச்சிகளால் பிரகாசமாக  இருக்கும் பரந்த வானத்தின் விரிவு நாம் அடைந்த பெரிய உயரங்களின் வண்ணமயமான அடையாளமாகும்." நீதியை கூகுள் மேற்கோள் காட்டியுள்ளது.

தேசியக்கொடி வடிவத்தில் நின்று சண்டிகர் பல்கலைக்கழக மாணவர்கள் கின்னஸ் உலக சாதனை!

பஞ்சாப் மாநிலம் மொகாலியில் அமைந்துள்ள சண்டிகர் பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றிணைந்து கின்னஸ் உலக சாதனை முயற்சியாக தேசியக்கொடி வடிவத்தில் சாதனை படைக்க 5,885 பேர் ஒருங்கிணைந்து நின்று வடிவமைத்துள்ளனர்.

மாணவர்கள் அனைவரும் காவி நிறம் , வெள்ளை நிறம் , பச்சை நிறம் மற்றும் கருநீலம் நிறம் என தனித்தனியே ஆடைகளை அணிந்து கொண்டு தேசியக்கொடி உருவம் வரையப்பட்ட மைதானத்தில் மூவர்ணக் கொடி வடிவத்தில் ஒருங்கிணைந்து நின்று இந்த கின்னஸ் சாதனையை படைத்துள்ளனர். .இந்த புகைப்படங்களை மத்திய மந்திரி மீனாட்சி லேகி அவர்கள் சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். சண்டிகர் கிரிக்கெட் மைதானத்தில் இந்த உலக சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது. இந்த சாதனை முயற்சிக்கு என்ஐடி அறக்கட்டளை நிறுவனம்  உறுதுணையாக கைகோர்த்துள்ளது.




"இந்தப் பதிவுக்கான தலைப்பு 'அசையும் தேசியக் கொடியின் மிகப்பெரிய மனித உருவம்'. பல ஆண்டுகளுக்கு முன்பு ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இதுபோன்ற ஒரு சாதனை படைக்கப்பட்டது. இன்று, 5,885 பேர் பங்கேற்பதன் மூலம் அந்த சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது" என்று கின்னஸ் உலக சாதனையின் அதிகாரப்பூர்வ நடுவர் ஸ்வப்னில் தங்கரிக்கர் கூறினார்.


கேரள ஓவியர் டாவின்சி சுரேஷ் இவர் பல சாதனைகளுக்கு சொந்தக்காரர்,

75 வது ஆண்டு விழா முன்னிட்டு திருவனந்தபுரம் பாங்கோடு கொளச்சல் மைதானத்தில் நடைபெற்ற கொண்டாட்டத்தின்  போது 350 அடி நீளமும் 200 அடி அகலமும்   கொண்ட அளவில் வரைந்து நின்ற ஓவியத்தை 50 அடி அளவில் எடுத்த படம்.இவர் பல சாதனைகளுக்கு சொந்தக்காரர்(கேரள ஓவியர் டாவின்சி சுரேஷ் ) சுதந்திரத்தின் 75 வது ஆண்டு விழாவை முன்னிட்டு ஆளுநரிடம் இருந்து விருது பெறும் வாய்ப்பு கிடைத்தது.

படத்தை வெற்றி பெற துணை நின்ற அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள் என அவரது வலைத்தளத்தில்மகிழ்ச்சியை பகிர்ந்துள்ளார்.

ஓசூர் விஜய் வித்யாலயா மெட்ரிக் பள்ளியில் 

வேலூர் மாவட்டம், குடியாத்தம் வட்டம் ,எர்த்தாங்கல் கிராமத்தில் வசித்து வரும் M. சீனிவாசன் BFA.TTC.B.lit  அவர்கள்   கலைவளர்மணி விருது பெற்று,நுண் கலை  கல்லூரில் இளங்கலை பட்டம் பெற்று   ஓவிய ஆசிரியராக பணிசெய்து வருகிறார்.ஓசூர் விஜய் வித்யாலயா மெட்ரிக் பள்ளியில் பகுதி நேர ஓவிய ஆசிரியராக பணி செய்து வருகிறார்.

75 வது சுதந்திர தினத்தை கௌரவிக்கும் விதமாக பள்ளி விளையாட்டு மைதானத்தில்   மிக பிரம்மாண்டமாக இந்திய வரைப்படத்தை   கோலப்பொடியில் மூவண்ணக்கொடி வண்ணமிட்டு வரைந்து 75 சுதந்திர தினத்தில் 75 தேச தலைவர்கள், தியாகிகள் அவர்களின் முகம் மாஸ்க் மாணவ மாணவிகள்  அணிந்து சிறப்பாக அணிவகுத்து தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தி சுதந்திரதினம் சிறப்பாக நடைபெற்றது ..

 75 தேச தலைவர்கள்தியாகிகள்

 1. மகாத்மா காந்தி 2. மகாகவி பாரதியார்3. சுந்தரலிங்கம்

4. ... சிதம்பரனார்

5. சுப்பிரமணிய சிவா6. புலித்தேவர்

7. கொடிகாத்த குமரன்

8. தி.சே.சௌ.ராஜன்

9. கோவை சுப்பிரம ணியம் என்ற சுப்ரி10. நீலகண்ட பிரம்மச்சாரி

11. நேதாஜி  12. சர்தார் வல்லபாய் படேல்  13. கோபால கிருஷ்ண கோகலே 14. நேரு

15. பாலகங்காதர திலகர்16. பகத்சிங்

17. அண்ணல் அம்பேத்கர்

18. S. சத்தியமூர்த்தி19. தாதாபாய் நௌரோஜி20. கர்த்தார் சிங்

21. கான் அப்துல் கப்பார்கான்22. வேலு நாச்சியார்23. அத்ருதி லட்சுமிபாய்

24. அக்கம்மரி செரியன் 25.R. சிவபோகம்26. சரோஜினி நாயுடு 

27. துர்காபாய் தேஷ்முக் 28. நீரா ஆர்யா

29. T.S.சௌந்தரம்30. லீலா ராம்குமார் 31. கடலூர் அஞ்சலம்மாள்

32. மீரா தத்தா குப்தா33. கமலா நேரு34. ராணி லட்சுமிபாய்

35. அன்னி பெசன்ட்36.;சுசேதா கிருபளானி 37. சரஸ்வதி ராஜாமணி

38. ஜானகி அம்மா39.பேகம் அசரத் மகால்40. மஞ்சு பாசினி41. கல்பனா தத்தா

42.லீலா ராய்43. கஸ்தூரிபாய் காந்தி44. லீலாவதி45. கமலாதாஸ் குப்தா

46. ஜல்காரி பாய் 47. தில்லையாடி வள்ளியம்மை 48. மீனாதாஸ்

49. சுனிதி சௌத்ரி50. ஜானகி ஆதி நாகப்பன்51. சத்தியவதி தேவி

52. கனகலதா53. போகேஸ்வரி புகநாநி54. பரபதி கிரி55. விஜயலட்சுமி பண்டித்

56. கிட்டூர் ராணி சென்னம்மா 57. கனகலதா பரூவா58. மகாதேவ தேசாய்

59. மங்கள் பாண்டே 60. மதன் மோகன் மாளவியா 61. மது லிமாயி

62. பெரோஸ் காந்தி63. பி.சுந்தரய்யா64. பக்ருதீன் தியாய்ஜி65. நானா சாகிப்66. சூரியா சென்67. உதம் சிங் 68. கேசவ பலிராம் ஹெட்கேவர்

69. K. கிருஷ்ணமூர்த்தி70. பக்ருதீன் தியாப்ஜி 71. ராம்தாஸ் காந்தி

72. செண்பகராமன் பிள்ளை 73. பிபின் சந்திர பால் 

74. ஜீவராஜ் மேத்தா 75.மாதங்கினி ஹஸ்ரா

தூத்துக்குடி மாவட்டம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி சார்பில்1,500  மாணவிகள்

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அஞ்சல் துறை மற்றும்  அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி சார்பில்   1,500  மாணவிகள் தேசியக்கொடியோடு 75வது சுதந்திர தின  போற்றும் வகையில் 75 எண் வடிவத்தில் அமர்ந்து பாரத பிரதமருக்கு கடிதம் எழுதும் நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சியில் அரசு மகளிர் பள்ளி தலைமையாசிரியர் ரூத்ரத்தினகுமாரி தலைமையிலும் இந்திய அஞ்சல் துறையின் உதவி கோட்ட கண்காணிப்பாளர் வசந்தி தேவி முன்னிலையிலும்  தலைமை அஞ்சல் அலுவலர் ரெஜினா,ஆகியோர் கலந்துகொண்டனர்

 

அஞ்சல் துறை அதிகாரிகள் 75வது சுதந்திர தின சிறப்பையும் ,மத்திய அரசின் திட்டங்கள் குறித்து மாணவிகளுக்கு எடுத்துரைத்தனர்.

 

நிகழ்ச்சி முடிவில் பாரதப் பிரதமருக்கு 1500 மாணவிகள் எழுதிய அஞ்சல் அட்டைகளை  அஞ்சல் துறையின் உதவி கோட்ட கண்காணிப்பாளர் வசந்தா சிந்து தேவிடம் ஒப்படைத்தனர். நிகழ்ச்சி ஏற்பாட்டினை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் அமல புஷ்பம் செய்திருந்தனர்.அஞ்சல் வணிக வளர்ச்சி அலுவலர் சங்கரேஸ்வரி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்.


அசோகச் சக்கரம் (Ashoka Chakra) 24 ஆரங்களைக் கொண்ட சக்கர வடிவ சின்னமாகும்

அசோக சக்கரத்தின் 24 ஆரங்களின் பொருள்:

1.அன்பு,

2.பொறுமை,

3.பெருந்தன்மை,

4.விசுவாசம்,

5.தன்னலமின்மை,

6.சுய தியாகம்,

7.நேர்மை,

8.கருணை,

9.பணிவு,

10அனுதாபம்,

11.தார்மீக மதிப்புகள்,

12.கடவுளிடம் பயம்,

13.நம்பிக்கை,

14.எதிர்பார்ப்பு,

15.ஆன்மீகம்,

16.பச்சாத்தாபம்,

17.கருணை,

18.நீதி,

19.உண்மை,

20.சுய கட்டுப்பாடு,

21.மென்மை,

22.அமைதி,

23.நன்மை,

24.தைரியம்

இவ்வளவு பெருமை மிகுந்த நம் தேசத்தை போற்றுவோம்.. 


#DailyNews  #sunamisudarmonthlymagazine

#subeditor #umjwa #palani #umjwa #subeditorsuriya

#dcbworldrecords  #adjudicatorteam  #adjudicator  #dcbnews

#Newtalents #dcbCreativity  #dcbindia  #dcbtalents

 #dcbadjudicator  #dcbnews  #dcbrecords  #Creator  #explore

#dcbinternationalrecordswrrf  #editorsuriya  #adjudicatorsuriya

#dcbworldrecords #dcbwrrf  

சுனாமி சுடர் மாத இதழ்  இணை ஆசிரியர்   மதிப்புறு முனைவர் .சூரியா


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

5000 வார்த்தைகளால் பிறந்தநாள் வாழ்த்து

5000 வார்த்தைகளால் பிறந்தநாள் வாழ்த்து திண்டுக்கல் மாவட்டம், பழனி வட்டத்தைச் சேர்ந்த ஓவிய ஆசிரியரும், சூப்பர் ஆரட்ஸ் நிறுவனருமான சூப்பர் சின்னப்பா அவர்கள் தர்மம் வெல்லும்  எனும் வார்த்தைகளால் ஓவியம் வரைந்து அசத்தல்.. இன்று  பிறந்தநாள் விழா காணும் தேசிய திராவிட முற்போக்கு கழகத்தின் கட்சியின் தலைவர், நடிகருமான கேப்டன் விஜயகாந்த் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு 10 அடி நீளமும் 10 அடி அகலமும்  கொண்ட பதாகையில் தொடர்ந்து 5 மணி நேரம் தர்மம் வெல்லும் என்ற வார்த்தையை பயன்படுத்தி அவரின் படத்தினை வரைந்து விரைவில் பூரண நலம் பெற ஓவியக் கலைஞராக வாழ்த்து தெரிவித்துள்ளார்.          ஓவியத்தில் இது போன்ற முயற்சி முதன்மையானது. எனவும் இதற்கு முன்பு விழிப்புணர்வு ஓவியங்கள் வரைந்திருந்தாலும் அவற்றில் இது மிகவும் கடினமானதாகவும் இருந்தது எனவும் கூறியுள்ளார் இந்த ஓவியம் நிச்சயம் குணப்படுத்தும் எனவும் நம்பிக்கை தெரிவித்துள்ளார் நாமும் நம்பிக்கையோடு வாழ்த்துவோம்5000 வார்த்தைகளால் பிறந்தநாள் வாழ்த்து திண்டுக்கல் மாவட்டம் பழனி வட்டத்தைச் சேர்ந்த ஓவிய ஆசிரியரும் சூப்பர் ஆரட்ஸ் நிறுவன வருமான சூப்பர் சின்னப்பா அவர்கள்

சதுரங்கத்தில் சாதனை சுபஸ்ரீ

  சதுரங்கத்தில் சாதனை சாதாரண கிராமத்தில் மண் வாசனையோடு களம் காண தெரியாமல் இன்னும் எத்தனையோ திறமையாளர்கள் தங்களுக்குள் ஒளிந்திருக்கும் தனித் திறமைகளை அடையாளம் காட்ட முடியாமல் மறைத்துக் கொண்டு வாழ்ந்து வருகின்றனர் . ஆனால்   அமரபூண்டியை சேர்ந்த மாற்றத்திற்கான மாற்றுத்திறனாளி , தன்னம்பிக்கை நாயகன் முருகானந்தம் அவர்கள் அவரது மூத்த மகளான சுபஸ்ரீயை அவரது பயிற்சியால் சுமார் ஐந்து ஆண்டுகளாக செஸ் ( சதுரங்கம் )   பயிற்சி பெற்று சிறந்த விளையாட்டு வீரராக திகழ்ந்து வருகிறார் . திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் குறுவட்ட அளவிலான போட்டியில் கலந்து கொண்டு மாவட்ட அளவில் இரண்டாம் பரிசினை   பெற செய்துள்ளார் . ஆம் வாசகர்களே ..... விழிப்புணர்வு போட்டி கடந்த ஜூலை மாதம் சென்னை அடுத்து மாமல்லபுரத்தில் நடைபெற்ற செஸ்   ஒலிம்பியாட் குறித்து விழிப்புணர்வுக்காக தமிழக முழுவதும் பல்வேறு செஸ் போட்டிகள் நடைபெற்றது . அதில் குறிப்பாக ஒட்டன்சத்திரம் வட்டார அளவில் செஸ் போட்டி நடைபெற்றது . இதில் அரசு பள்ளி மாணவ , மாணவிகள் அரசு உதவி

7,027 உறுப்பினர்கள் கல்லூரி மைதானத்தில் ஒன்று கூடி பாரம்பரிய குழு நடனம்

  7,027 உறுப்பினர்கள் கல்லூரி மைதானத்தில் ஒன்று  கூடி  பாரம்பரிய குழு நடன வடிவத்தை நிகழ்த்தி சாதனை  புத்தகத்தில் இடம் பிடித்தது. கேரள மாநிலம் , குடும்பஸ்ரீ , குட்டநல்லுார்  அரசு கல்லூரியில் , மெகா திருவாதிரை நடன நிகழ்ச்சியை நடத்தி , உலக சாதனை படைத்துள்ளது . குடும்பஸ்ரீயின் 7,027 உறுப்பினர்கள் கல்லூரி மைதானத்தில் கூடி பாரம்பரிய குழு நடன வடிவத்தை நிகழ்த்தினர் . இந்த நடன வடிவம் பொதுவாக மலையாள மாதமான சிங்கம் மாதத்தில் ஓணம் பண்டிகையின் போதும் , எப்போதாவது தனு மாதத்திலும்   இது நிகழ்த்தப்படுகிறது . இந்நிகழ்ச்சியை வருவாய்த் துறை அமைச்சர் கே . ராஜன் தொடங்கி வைத்து , குடும்பஸ்ரீ மகளிர் மேம்பாட்டிற்கான முன்மாதிரி என்று பாராட்டினார் , உலகின் மிகப்பெரிய மகளிர் நெட்வொர்க் என்ற அந்தஸ்தை எடுத்துரைத்தார் . சுற்றுலாத் துறை , மாவட்ட நிர்வாகம் , மாநகராட்சி ஆகியவை இணைந்து மாவட்ட ஓணம் கொண்டாட்டத்தை நடத்தின .   தற்போது கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெறுவது குறித்து ஏற்பாட்டாளர்கள் ஆலோசித்து வருகின்றனர் . #DcbTn #DcbTamilCulture #DcbTale