முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த பழனி சித்த மருத்துவர்

 உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த பழனி சித்த மருத்துவர்  டிசிபி வேர்ல்ட் ரெகார்ட்ஸ் நிறுவனம் உலக சாதனை சான்றிதழ் வழங்கி கௌரவித்தது... 

முந்தைய விழிப்புணர்வு சாதனைகள் பற்றி ஒரு பார்வை

(அக்டோபர் 15, 2014) உலக சாதனைஅறிவிப்பின்படி, உலகளாவிய கை கழுவும் தினத்தை முன்னிட்டு மத்தியப் பிரதேசத்தின் 51 மாவட்டங்//களில் 13,196 இடங்களில் 1,276,425 குழந்தைகள் கைகளைக் கழுவி புதிய உலக சாதனை.

 4 ஜூலை 2015 அன்று மத்தியப் பிரதேச அரசின் (இந்தியா) பஞ்சாயத்து ராஜ் மற்றும் ஊரக வளர்ச்சித் துறையின் முக்கியத்துவத்தை மேம்படுத்துவதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு நிகழ்வில் பெரும்பாலான மக்கள் தங்கள் கைகளை பல இடங்களில் கழுவி ஒரு புதிய உலக சாதனையை. 
 

 2020 அக்டோபர் 1 ல் 24 மணிநேரம் தொடர்ந்து ஆன்லைன் தொற்றுநோய் குறித்து விழிப்புணர்வுப் பாடத்தை எடுத்து உலக சாதனை படைத்துள்ளனர். இதில் 37,545 கலந்து பயணந்துள்ளனர்.  இதை UAE, அபுதாபியில் உள்ள Alef Education (UAE) நிறுவனம் ஏற்பாடு செய்திருந்தது 

2021ஜூன் 19 ல்  தமிழ்நாடு   சென்னையைச் சேர்ந்த பி.ஹரினி (பிறப்பு 21 மே 2007) 18 வயதுக்குட்பட்ட பெண் பிரிவில், 160 சதுர அடியில் கொரன விழிப்புணவு  படத்தை 11 மணி நேரம்  25 நிமிடங்களில்  உருவாக்கி, மிகப்பெரிய காகித மொசைக் (collage)  படத்திற்கான தனிநபர் உலக சாதனை படைத்தார்.இந்த விழிப்புணவு நிகழ்வு விருகம்பாக்கம், சின்மயா வித்யாலயா சீனியர் செகண்டரி பள்ளியில் நடை பெற்றது.

பிப்ரவரி 18, 2021 இந்தியா,ஆந்திரப் பிரதேசம்,விசாகப்பட்டினத்தில் 12


பள்ளிகளைச் சேர்ந்த சுமார் 1,608 மாணவர்கள் கலந்து  இளம் பருவத்தினரின்  சுகாதார விழிப்புணர்வு பாடம் நடத்தி இந்திய மாணவர்களால் உலக சாதனை படைத்தது.ஜூனியர் சேம்பர் இன்டர்நேஷனல் ஏற்பாடு செய்த ஒரு நிகழ்வின் போது, டாக்டர். குழந்தை நல மருத்துவர் கே. ராதாகிருஷ்ணா மற்றும் சைக்காலஜிஸ்ட் சதீஷ் வலிவெட்டி ஆகியோரின் கலந்துகொண்டு உரையாற்றியுள்ளனர். 

திண்டுக்கல் மாவட்டம், பழனி வட்டம், சித்த மருத்துவத்தை இதுவரை 10 மாவட்டத்தில் 1.50.000 பொதுமக்களை நேரடியாக சந்தித்து விழிப்புணர்வு பிரச்சாரம் செய்துள்ளார்.33 வருடத்தில் அனைத்து  மக்களுக்கும் சமூக விழிப்புணர்வை கொண்டு சேர்த்து பழனி  அரசு மருத்துவமனை   சித்த மருத்துவர் டாக்டர். M. மகேந்திரன் அவர்கள் உலக சாதனை படைத்தார்.

சித்த மருத்துவத்தை பிரபலமாக்கியவர்

திண்டுக்கல் மாவட்டம் பழனி வட்டத்தில் நோய் நாடி நோய் முதல் நாடி ஆராயும் பாங்கு கொண்ட அரசு மருத்துவமனையில் சித்தா பிரிவில் தமிழக அரசின் சிறந்த சித்தமருத்துவ விருதுபெற்ற  மாமனிதன் டாக்டர் மகேந்திரன் அவர்கள்   பழனி மற்றும் அதைச்சுற்றியுள்ள பகுதிகளுக்கு   சித்த மருத்துவத்தை பிரபலமாக்கியவர்.

மருத்துவ பணியில்



மருத்துவ பணியில்     மகத்தான பணியை இடைவிடாது மக்களுக்கு கொண்டு செல்ல முனைப்புடன் செயல்படும்  இவர். நோயாளிகளை கவனிக்கும் கனிவு.  எல்லாமே ஆச்சரியம். எல்லா நோய்க்கும் பாரம்பரிய வைத்தியம் உண்டு என்பதை இவர் விவரிப்பது வித்தியாசமாக இருக்கும். டெங்கு வைரல் காய்சல் வந்த போது நிலவேம்பு கசாயத்தை இலவசமாக அரசு மருத்துவமனையில் வைத்தார். இன்றும் எல்லா வார்டுகளிலும் நிலவேம்பு கசாயம் கேன்கள்  இருக்கும். பழனி பகுதியில் டெங்கு பரவாமல் இருந்ததுக்கு இது ஒரு முக்கிய காரணம் எனலாம்.  இப்போது கொரோனாவிற்கு கபசுர பொடி வியாபாரமான போது பழனி அரசு மருத்துவமனையில் கபசுர குடிநீரை இலவசமாகவும், அவசியமாகவும் கட்டாயம் பருக வேண்டும் மக்களிடம் தினமும் எடுத்துரைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தியவர்.. பழனி பகுதியில் இது பரவி விட கூடாது என்று  அனைத்து  கிராமங்களுக்கு   பணிக்கு முன்பும், பின்பும் மக்களுக்கு கபசுர குடிநீர் கொடுத்து பழனியில் கொரோனா பரவாமல் தடுத்திருக்கிறார். பாரம்பரிய வைத்தியம் மீண்டும் அந்த நோய் வராமல் தடுப்பதோடு நமக்கு நோய் எதிர்ப்புச் சக்தி கொடுக்கிறது என்பது இவர் கூற்று. ஆனால் நாம் நோய் அவசரம் காரணமாக ஆங்கில வைத்தியத்தில் நோயை மட்டும் குணப்படுத்தி எதிர்ப்பு சக்தியை இழக்கிறோம். நமது பண்டைய உணவில் மஞ்சள் இஞ்சி பூண்டு சுக்கு எலுமிச்சை மிளகு சீரகம் ஏலக்காய் கிராம்பு இவை இருப்பதால் தான் நோய் எதிர்ப்பு சக்தியோடு  கொரோனாவின் வீரியத்தை கட்டுபடுத்தி இருக்கிறோம். என மக்களுக்கு எளிமையாக புரியவைத்திருக்கிறார் என்பதில் ஐயமில்லை.           

அரசுப் பணியில் ஓய்வு பெறும் சித்த மருத்துவர்

பணி நிறைவு விழா மற்றும் முழுநேர பணி ஏற்பு விழா சிறப்பாக பழனியில் நடை பெற்றது .இதில் மூலிகை கண்காட்சி நடைபெற்றது.அனைவருக்கும் சித்த மருத்துவம் குறித்து புத்தகம் வழங்கியுள்ளனர்.மேலும் மூலிகை செடிகளும் வழங்கப்பட்டுள்ளது.இவர் பனி தொடர்ந்து மக்களுக்கு கொண்டு சேர்க்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் வேண்டுகோளாகவும்,அன்பு கட்டளையாகவும் பார்க்கமுடிந்தக நட்பு வட்டாரங்கள் கூறியுள்ளனர். 

தனி நபர் உலக சாதனை விருது


 சித்த மருத்துவத்தில் இதுவரை 10 மாவட்டத்தில் 1.50.000 பொதுமக்களை நேரடியாக சந்தித்து விழிப்புணர்வு பிரச்சாரம் செய்துள்ளார் என்பதையும், 33 வருடத்தில் அனைத்து  மக்களுக்கும் சமூக விழிப்புணர்வை கொண்டு சேர்த்துள்ளார்  என்பதையும் பாராட்டி பழனி  அரசு மருத்துவமனை அரசுப் பணியில் ஓய்வு பெறும் சித்த மருத்துவர் டாக்டர். M. மகேந்திரன் அவர்களுக்கு  DCB WORLD RECORDS  நிறுவனத்தின் சார்பாக தனி நபர் உலக சாதனை விருது வழங்கி கௌரவித்தது. இந்தவிழாவில் சிறப்பு விருந்தினராக பழனி காவல்துறை துணை கண்காணிப்பாளர் சிவசக்தி அவர்கள் மற்றும் மக்கள் மித்திரன் இணை ஆசிரியர் வி எம் சிவா ஆகிய இருவரின் கரங்களால் தனி நபர் உலக சாதனை விருது வழங்கப்பட்டது. இதற்கு உறுதுணையாக இருந்த மக்கள் மித்திரன் மாநில தலைமை நிருபர் செந்தில்குமார் அவர்கள் அரசு அதிகாரிகள், பொதுமக்கள் மற்றும் ஊடகங்கள், சமூக ஆர்வலர், முக்கிய பிரமுகர்கள் அனைவரும் கலந்து கொண்டு பாராட்டி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 



                                                                             மதிப்புறு முனைவர்  .சூரியாTTC.,R.J.,JMC

                                                                  EDITER &PUBLISHER







கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

5000 வார்த்தைகளால் பிறந்தநாள் வாழ்த்து

5000 வார்த்தைகளால் பிறந்தநாள் வாழ்த்து திண்டுக்கல் மாவட்டம், பழனி வட்டத்தைச் சேர்ந்த ஓவிய ஆசிரியரும், சூப்பர் ஆரட்ஸ் நிறுவனருமான சூப்பர் சின்னப்பா அவர்கள் தர்மம் வெல்லும்  எனும் வார்த்தைகளால் ஓவியம் வரைந்து அசத்தல்.. இன்று  பிறந்தநாள் விழா காணும் தேசிய திராவிட முற்போக்கு கழகத்தின் கட்சியின் தலைவர், நடிகருமான கேப்டன் விஜயகாந்த் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு 10 அடி நீளமும் 10 அடி அகலமும்  கொண்ட பதாகையில் தொடர்ந்து 5 மணி நேரம் தர்மம் வெல்லும் என்ற வார்த்தையை பயன்படுத்தி அவரின் படத்தினை வரைந்து விரைவில் பூரண நலம் பெற ஓவியக் கலைஞராக வாழ்த்து தெரிவித்துள்ளார்.          ஓவியத்தில் இது போன்ற முயற்சி முதன்மையானது. எனவும் இதற்கு முன்பு விழிப்புணர்வு ஓவியங்கள் வரைந்திருந்தாலும் அவற்றில் இது மிகவும் கடினமானதாகவும் இருந்தது எனவும் கூறியுள்ளார் இந்த ஓவியம் நிச்சயம் குணப்படுத்தும் எனவும் நம்பிக்கை தெரிவித்துள்ளார் நாமும் நம்பிக்கையோடு வாழ்த்துவோம்5000 வார்த்தைகளால் பிறந்தநாள் வாழ்த்து திண்டுக்கல் மாவட்டம் பழனி வட்டத்தைச் சேர்ந்த ஓவிய ஆசிரியரும் சூப்பர் ஆரட்ஸ் நிறுவன வருமான சூப்பர் சின்னப்பா அவர்கள்

சதுரங்கத்தில் சாதனை சுபஸ்ரீ

  சதுரங்கத்தில் சாதனை சாதாரண கிராமத்தில் மண் வாசனையோடு களம் காண தெரியாமல் இன்னும் எத்தனையோ திறமையாளர்கள் தங்களுக்குள் ஒளிந்திருக்கும் தனித் திறமைகளை அடையாளம் காட்ட முடியாமல் மறைத்துக் கொண்டு வாழ்ந்து வருகின்றனர் . ஆனால்   அமரபூண்டியை சேர்ந்த மாற்றத்திற்கான மாற்றுத்திறனாளி , தன்னம்பிக்கை நாயகன் முருகானந்தம் அவர்கள் அவரது மூத்த மகளான சுபஸ்ரீயை அவரது பயிற்சியால் சுமார் ஐந்து ஆண்டுகளாக செஸ் ( சதுரங்கம் )   பயிற்சி பெற்று சிறந்த விளையாட்டு வீரராக திகழ்ந்து வருகிறார் . திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் குறுவட்ட அளவிலான போட்டியில் கலந்து கொண்டு மாவட்ட அளவில் இரண்டாம் பரிசினை   பெற செய்துள்ளார் . ஆம் வாசகர்களே ..... விழிப்புணர்வு போட்டி கடந்த ஜூலை மாதம் சென்னை அடுத்து மாமல்லபுரத்தில் நடைபெற்ற செஸ்   ஒலிம்பியாட் குறித்து விழிப்புணர்வுக்காக தமிழக முழுவதும் பல்வேறு செஸ் போட்டிகள் நடைபெற்றது . அதில் குறிப்பாக ஒட்டன்சத்திரம் வட்டார அளவில் செஸ் போட்டி நடைபெற்றது . இதில் அரசு பள்ளி மாணவ , மாணவிகள் அரசு உதவி

7,027 உறுப்பினர்கள் கல்லூரி மைதானத்தில் ஒன்று கூடி பாரம்பரிய குழு நடனம்

  7,027 உறுப்பினர்கள் கல்லூரி மைதானத்தில் ஒன்று  கூடி  பாரம்பரிய குழு நடன வடிவத்தை நிகழ்த்தி சாதனை  புத்தகத்தில் இடம் பிடித்தது. கேரள மாநிலம் , குடும்பஸ்ரீ , குட்டநல்லுார்  அரசு கல்லூரியில் , மெகா திருவாதிரை நடன நிகழ்ச்சியை நடத்தி , உலக சாதனை படைத்துள்ளது . குடும்பஸ்ரீயின் 7,027 உறுப்பினர்கள் கல்லூரி மைதானத்தில் கூடி பாரம்பரிய குழு நடன வடிவத்தை நிகழ்த்தினர் . இந்த நடன வடிவம் பொதுவாக மலையாள மாதமான சிங்கம் மாதத்தில் ஓணம் பண்டிகையின் போதும் , எப்போதாவது தனு மாதத்திலும்   இது நிகழ்த்தப்படுகிறது . இந்நிகழ்ச்சியை வருவாய்த் துறை அமைச்சர் கே . ராஜன் தொடங்கி வைத்து , குடும்பஸ்ரீ மகளிர் மேம்பாட்டிற்கான முன்மாதிரி என்று பாராட்டினார் , உலகின் மிகப்பெரிய மகளிர் நெட்வொர்க் என்ற அந்தஸ்தை எடுத்துரைத்தார் . சுற்றுலாத் துறை , மாவட்ட நிர்வாகம் , மாநகராட்சி ஆகியவை இணைந்து மாவட்ட ஓணம் கொண்டாட்டத்தை நடத்தின .   தற்போது கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெறுவது குறித்து ஏற்பாட்டாளர்கள் ஆலோசித்து வருகின்றனர் . #DcbTn #DcbTamilCulture #DcbTale