முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தடக(ளை )ளத்தை தகர்த்து தடம் பதித்த சேவை


 


 தடக(ளை )ளத்தை தகர்த்து தடம் பதித்த சேவை 

ஒன்றை இழந்தால்தான் ஒன்றை பெறமுடியம் என்பதற்க்கு ஒரு உதாரணம் ஆம் ஒரு தடகள வீராங்கனை பள்ளியில் மாநில அளவில் பரிசு வென்று விளையாட்டு என்றால் மிகவும் பிடிக்கும் என ஆசைகளை மறந்து  விளையாட்டுக்காக பயிற்சியில் ஈடுபட்டால் சமூக சேவை செய்ய நேரம் கிடைக்காது என்பதால் விளையாட்டை ஒதுக்கிவிட்டு முழுநேர சமூகப் பணியில் இறங்கி  முழுநேர சமூகசேவகியாக மாறிய,  இயந்திரமயமான இன்றைய நவீன  யுகத்திலும் சில  ஈர மனதுக்காரர்கள் சமூக சேவையில் ஈடுபடுகின்றனர். 

ஏழையின் சிரிப்பில் இறைவனை காணலாம்

       ஏழையின் சிரிப்பில் இறைவனை காணலாம் என் அறிஞர் அண்ணா கூறியதைப்போல தன்னால் பெறமுடியாத ஒன்றை செய்தார்.உதவி பெற்றவர்கள் அடையும் மகிழ்ச்சியை பார்க்கும் பொழுது நமக்கு கிடைக்கும் மகிழ்ச்சி இருக்கிறதே எவ்வளவு பணம் செலவு  செய்தாலும்  பெறமுடியாது என்பதை உணர்ந்த சமூக சேவகி 

செல்வி .சந்திரலேகா பற்றி இந்த கட்டுரையில் பார்ப்போம்............. 

எழுமலை கிராமத்தில் 

            மதுரை மாவட்டம்  உசிலம்பட்டிக்கு அருகில் உள்ள எழுமலை கிராமத்தில் மு.செல்வராஜன் ,செ.பசுபதி தம்பதியின் மகள் சந்திரலேகா, இவரது குடும்பத்தில் முதல் பட்டதாரி.படிக்காத பெற்றோரின் கனவான உயரிய சிந்தனையே உலகளவில் சிறந்து விளங்க வேண்டும் என்பதே,இதனால் கல்வியோடு, சேவையும் பெற்றோரின் கனவுகளை நிறைவேற்றவும்  மதுரை மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரியில் MSW படித்து வருகிறார் .

மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரியில்

இளம் கலை சமூகப் பணி பட்டம்  முடித்து தற்பொழுது MSW -Master of Social Work படித்துக்கொண்டே பொழுது போக்காக சமூகப் பணி  தொடர்ந்து  செய்து வருகிறார். சமூகப் பணி என்றால் என்னவென்றே தெரியாமல் தான் இந்த படிப்பை தேர்வு செய்த இவர் . சேர்ந்த பின்னரே ஆதரவற்றவர்கள் அனைவரும் அனாதைகள் அல்ல சொந்தங்களால் கைவிடப்பட்டவர்கள் என அறிந்து . அவர்களுக்கு  முடிந்த உதவியை செய்ய வேண்டும் என விடுமுறை நாட்களில் பஸ் மற்றும் ரயில் நிலையங்களில் இருக்கும் ஆதரவற்றோருக்கு உணவு ,உடை ,மருந்து போன்றவற்றை வழங்குவதோடு மட்டுமில்லாமல் இயற்கை  குறித்து,நீர் நிலைகுறித்து,பெண்கள் சிசு கொலை குறித்து,பெண்கள் பாலியல் வன்கொடுமை,ரத்த தான முகாம்களுக்கு செல்தல் போன்ற சேவைகளை முழுமனதோடு செய்து இளைய தலைமுறைக்கு முன்னுதாரமாக திகழ்கிறார்.இது மட்டுமின்றி சமூக சிந்தனைகளை கவிதைகள்  மூலம் கொண்டுசேர்க்கிறார் என்பதில் ஐயமில்லை.

இயற்கை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு:

      இதுவரை சுமார்  5300 நாட்டு மரங்களை நடவு செய்துள்ளார். (நாட்டு மரங்களில் குறிப்பிடத்தக்கவை வேம்பு, வாகை,புளிய மரம்,புங்கன், பூவரசு, நாட்டு வாகை,ஆலமரம் போன்ற மரங்களாகும். எண்ணற்ற மரங்கள்  இருக்க, இவற்றை மட்டும் ஏன்  குறிப்பிட்டுச் சொல்வதென்றால் இதுபோன்ற மரங்கள் கோடை வெப்பத்தை தாங்கி, குறைந்த அளவு நீரை எடுத்துக்கொண்டு வளர்வதோடு, நல்ல நிழல் தந்து சுற்றுப்புறத்தைக் குளுமையாக்குகின்றன.) 

டாக்டர் சு.வெங்கடேஸ்வரன் கல்லூரி முதல்வர் அவர்களுடன்

             நாட்டு மரங்கள் என்பவை நம் மண்ணிற்கு ஏற்ற மரங்களாகும். அதாவது, நம் ஊரின் பருவ  நிலைக்கு ஏற்ப வறட்சியைத் தாங்கி வளரக்கூடியவை. நீங்கள் பொதுவாகக் கோடைகாலங்களில் மரங்களைப் பார்க்கும்போது வேம்பு, புங்கன் போன்ற மரங்கள் மட்டும் பசுமையான இலைகளுடன் தளைத்து இருப்பதையும் பார்க்கமுடியும்.மேலும்  2500 பனை விதைகள் விதைப் பந்தங்களை நீர் நிலைகளுக்கு அருகில் நடவு செய்துள்ளார். 


பெண் சிசு கொலை தடுப்பதற்காக

   உசிலம்பட்டியில் அதிகம் பெண் சிசு கொலை நடப்பதை தடுப்பதற்காக  கிராம மக்களிடம் அதிக விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.பாமர மக்களுக்கு  வீதி நாடகம் மூலம் பல விழிப்புணர்வுகளை காவல்துறையினர் உதவியுடன் வழங்கி வருவதோடு  பல சமூக ஆர்வலர்களை உருவாக்க வேண்டும் மற்றும் ஆதரவற்ற முதியோர்கள் இல்லாத சமுகத்தை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு களப்பணி செய்துவருகிறார்.

இவர் பெற்ற விருதுகள் :

    இதுவரை இவரது சேவை மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளதாகவும்  இதனை பாராட்டி பல அமைப்புக்கள் விருது வழங்கி  ஊக்க படுத்தியுள்ளது.விருது என்பது ஒரு விதை என சுமார் 39 விருதுகளை பெற்றுள்ளார் என்பது குறிப்பித்ததக்கது. குறிப்பாக சேவைகளை பாராட்டி திருச்சி தமிழ் பண்பாட்டு கழகத்தில் தங்கப்பதக்கம் மற்றும் விருது வழங்கியுள்ளனர்.


 சமூக சேவகி செல்வி.சந்திரலேகா கூறிய போது 

எனது கல்லூரி செலவிற்காக மாதம் ஒரு குறிப்பிட்ட தொகையை அப்பா வழங்குவார் அதில் என் செலவு போக மீதம் உள்ள பணத்தில் இவர்களுக்கு உதவுகிறேன். என் நண்பர்களும் அவர்களால் முடிந்த உதவிகளை செய்கிறார்கள் கல்லூரி பேராசிரியர் முதல் மாணவர்கள் வரை உறுதுணையாக இருக்கிறார்கள்.

நான் ஒரு தடகள வீராங்கனை பள்ளியில் மாநில அளவில் பரிசு வென்றுள்ளேன் விளையாட்டு என்றால் எனக்கு மிகவும் பிடிக்கும் ஆனால் விளையாட்டுக்காக பயிற்சியில் ஈடுபட்டால் சமூக சேவை செய்ய நேரம் கிடைக்காது என்பதால் விளையாட்டை ஒதுக்கிவிட்டு முழுநேர சமூகப் பணியில் இறங்கி விட்டேன் சேவை செய்யும்போது மன நிம்மதியும் இனம் புரியாத மகிழ்ச்சியும் கிடைக்கிறது. ஆதரவற்றோருக்கான இல்லம் தொடங்கி என்னால் முடிந்தவரை சேவை செய்ய வேண்டும் என்பதே என் எதிர்கால லட்சியம். ஒருபுறம் படித்தாலும் மறுபுறம் இல்லம் தொடங்குவதற்கான பணியை செய்து கொண்டு தான் இருப்பேன். இதற்காக நிறைய பேரிடம் நிதி திரட்ட உள்ளேன் என்றார்.

                                                                                                                                                                 இவர்களை போன்ற சமூக ஆர்வலர்களை  நாமும் ஊக்கப்படுத்திக்கொண்டே இருக்கவேண்டும்.சமூகத்தின் தூண்களாய் கரம் கோர்ப்போம் .......


                                                      மதிப்புறு முனைவர் ஆ.சூரியா TTC.,R.J.,CC.,UMJ 

                                                                                 EDITOR &PUBLISHER-94 42 33 80 99


#DailyNew        #sunamisudarmonthlymagazine

#subeditor #umjwa#palani#umjwa #subeditorsuriya

#dcbworldrecords  #adjudicatorteam  #adjudicator  #dcbnews

#Newtalents #dcbCreativity  #dcbindia  #dcbtalents

 #dcbadjudicator  #dcbnews  #dcbrecords  #Creator  #explore

#dcbinternationalrecordswrrf  #editorsuriya  #adjudicatorsuriya

#dcbworldrecords #dcbwrrf



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

5000 வார்த்தைகளால் பிறந்தநாள் வாழ்த்து

5000 வார்த்தைகளால் பிறந்தநாள் வாழ்த்து திண்டுக்கல் மாவட்டம், பழனி வட்டத்தைச் சேர்ந்த ஓவிய ஆசிரியரும், சூப்பர் ஆரட்ஸ் நிறுவனருமான சூப்பர் சின்னப்பா அவர்கள் தர்மம் வெல்லும்  எனும் வார்த்தைகளால் ஓவியம் வரைந்து அசத்தல்.. இன்று  பிறந்தநாள் விழா காணும் தேசிய திராவிட முற்போக்கு கழகத்தின் கட்சியின் தலைவர், நடிகருமான கேப்டன் விஜயகாந்த் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு 10 அடி நீளமும் 10 அடி அகலமும்  கொண்ட பதாகையில் தொடர்ந்து 5 மணி நேரம் தர்மம் வெல்லும் என்ற வார்த்தையை பயன்படுத்தி அவரின் படத்தினை வரைந்து விரைவில் பூரண நலம் பெற ஓவியக் கலைஞராக வாழ்த்து தெரிவித்துள்ளார்.          ஓவியத்தில் இது போன்ற முயற்சி முதன்மையானது. எனவும் இதற்கு முன்பு விழிப்புணர்வு ஓவியங்கள் வரைந்திருந்தாலும் அவற்றில் இது மிகவும் கடினமானதாகவும் இருந்தது எனவும் கூறியுள்ளார் இந்த ஓவியம் நிச்சயம் குணப்படுத்தும் எனவும் நம்பிக்கை தெரிவித்துள்ளார் நாமும் நம்பிக்கையோடு வாழ்த்துவோம்5000 வார்த்தைகளால் பிறந்தநாள் வாழ்த்து திண்டுக்கல் மாவட்டம் பழனி வட்டத்தைச் சேர்ந்த ஓவிய ஆசிரியரும் சூப்பர் ஆரட்ஸ் நிறுவன வருமான சூப்பர் சின்னப்பா அவர்கள்

சதுரங்கத்தில் சாதனை சுபஸ்ரீ

  சதுரங்கத்தில் சாதனை சாதாரண கிராமத்தில் மண் வாசனையோடு களம் காண தெரியாமல் இன்னும் எத்தனையோ திறமையாளர்கள் தங்களுக்குள் ஒளிந்திருக்கும் தனித் திறமைகளை அடையாளம் காட்ட முடியாமல் மறைத்துக் கொண்டு வாழ்ந்து வருகின்றனர் . ஆனால்   அமரபூண்டியை சேர்ந்த மாற்றத்திற்கான மாற்றுத்திறனாளி , தன்னம்பிக்கை நாயகன் முருகானந்தம் அவர்கள் அவரது மூத்த மகளான சுபஸ்ரீயை அவரது பயிற்சியால் சுமார் ஐந்து ஆண்டுகளாக செஸ் ( சதுரங்கம் )   பயிற்சி பெற்று சிறந்த விளையாட்டு வீரராக திகழ்ந்து வருகிறார் . திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் குறுவட்ட அளவிலான போட்டியில் கலந்து கொண்டு மாவட்ட அளவில் இரண்டாம் பரிசினை   பெற செய்துள்ளார் . ஆம் வாசகர்களே ..... விழிப்புணர்வு போட்டி கடந்த ஜூலை மாதம் சென்னை அடுத்து மாமல்லபுரத்தில் நடைபெற்ற செஸ்   ஒலிம்பியாட் குறித்து விழிப்புணர்வுக்காக தமிழக முழுவதும் பல்வேறு செஸ் போட்டிகள் நடைபெற்றது . அதில் குறிப்பாக ஒட்டன்சத்திரம் வட்டார அளவில் செஸ் போட்டி நடைபெற்றது . இதில் அரசு பள்ளி மாணவ , மாணவிகள் அரசு உதவி

7,027 உறுப்பினர்கள் கல்லூரி மைதானத்தில் ஒன்று கூடி பாரம்பரிய குழு நடனம்

  7,027 உறுப்பினர்கள் கல்லூரி மைதானத்தில் ஒன்று  கூடி  பாரம்பரிய குழு நடன வடிவத்தை நிகழ்த்தி சாதனை  புத்தகத்தில் இடம் பிடித்தது. கேரள மாநிலம் , குடும்பஸ்ரீ , குட்டநல்லுார்  அரசு கல்லூரியில் , மெகா திருவாதிரை நடன நிகழ்ச்சியை நடத்தி , உலக சாதனை படைத்துள்ளது . குடும்பஸ்ரீயின் 7,027 உறுப்பினர்கள் கல்லூரி மைதானத்தில் கூடி பாரம்பரிய குழு நடன வடிவத்தை நிகழ்த்தினர் . இந்த நடன வடிவம் பொதுவாக மலையாள மாதமான சிங்கம் மாதத்தில் ஓணம் பண்டிகையின் போதும் , எப்போதாவது தனு மாதத்திலும்   இது நிகழ்த்தப்படுகிறது . இந்நிகழ்ச்சியை வருவாய்த் துறை அமைச்சர் கே . ராஜன் தொடங்கி வைத்து , குடும்பஸ்ரீ மகளிர் மேம்பாட்டிற்கான முன்மாதிரி என்று பாராட்டினார் , உலகின் மிகப்பெரிய மகளிர் நெட்வொர்க் என்ற அந்தஸ்தை எடுத்துரைத்தார் . சுற்றுலாத் துறை , மாவட்ட நிர்வாகம் , மாநகராட்சி ஆகியவை இணைந்து மாவட்ட ஓணம் கொண்டாட்டத்தை நடத்தின .   தற்போது கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெறுவது குறித்து ஏற்பாட்டாளர்கள் ஆலோசித்து வருகின்றனர் . #DcbTn #DcbTamilCulture #DcbTale