முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பழனியில் 1000 க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்ட கலைத்திருவிழா-2022

 1000 க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்ட கலைத்திருவிழா-2022

பழனி என்றாலே பஞ்சாமிர்தம் தான் நினைவுக்கு வரும் அதை  மலை வாழைப்பழம், பேரிச்சம்பழம், கரும்பு சர்க்கரை, குங்குமப்பூ, நெய், கல்கண்டு, பச்சை கற்பூரம் போன்ற கலவைகளை கொண்டு சேர்க்கப்படும் அற்புதமான சுவை கொண்ட பஞ்சாமிர்தமே பழனியின் தனித்துவம்.அதை போல  தான் கல்வி,தொழில் ,கலை,ஆன்மிகம் போன்ற கலை சூழ்ந்த கலவைகளை கொண்ட பழனியில் பல தனித்திறமைகளில் தடம் பதிக்க தகுந்த வாய்ப்பும் தளங்களும் கிடைவில்லை என்பதை அறிந்து இந்த கலைத்திருவிழா 2022 நிகழ்வு நடை பெற்றது.



கலைத்திருவிழா 2022 

கடந்த  அக்டோபர் மாதம்  15ம் தேதி பழநி லயன்ஸ் க்ளப், பழநி முருகன் ஈவண்ட் மேனேஜ்மெண்ட், பழநி சித்தனாதன் குழுமம் இணைந்து நடத்திய கலைதிருவிழா 2022 என்ற பழநி பள்ளிகள் அளவிலான  11 திறன் போட்டிகள் அங்காள ஈஸ்வரி திருமண மண்டபத்தில் மிக பிரமாண்டமாக  நடைபெற்றது. பழநியில் இவ்வளவு பிரமாண்டமான   திறமைக்கான போட்டிகள் நடைபெற்றது  இதுவே முதல் முறை என கலைத்திருவிழா நிர்வாக தரப்பில் கூறியுள்ளனர்.

1000 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள்

இதில் சுமார் 30க்கும் மேற்பட்ட    அரசுப் பள்ளி  , தனியார் பள்ளி , தனியார் உதவி பெறும் பள்ளிகளிலிருந்து 1000 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள்  ஆர்வமுடன் தனித்திறமையை வெளிப்படுத்த கலந்து கொண்டனர். சரியாக  காலை 8.30 மணிக்கு மாணவ மாணவிகளின்  அணிவகுப்புடன் துவங்கிய நிகழ்ச்சி சுமார் பத்து மணி நேரம் இசை,நடனம் ,பேச்சுப்போட்டி,கையெழுத்து போட்டி,ஓவியம்,ஹை கூ கவிதை,ஆடை அலங்கார அணிவகுப்பு,கழிவுகளிலிருந்து கலை,பூக்கோலம் ,மௌன நாடகம் ,குறும்பட போட்டி ,என 11 போட்டிகளில் தனிநபர் குழு என 25 பிரிவுகளில் நடைபெற்றது . இந்த போட்டிகள் அனைத்தும் விறு விறுப்பாகவும், சுவாரசியமாகவும்  நடை பெற்றது, மாலை 6 மணிக்கு பரிசளிப்புடன் நிறைவு பெற்றது. 

இதில் கலந்து கொண்ட அனைவருக்கும் சான்றிதழ்களும் , வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பதக்கங்களுடன், வெற்றி சான்றிதழ்  வழங்கப்பட்டது. 

பரிசை தட்டி சென்ற பள்ளிகள் 

கலந்து கொண்ட அனைத்து போட்டிகளிலும் பெரும்பான்மையான  வெற்றிகளை  பெற்று ஒட்டுமொத்த வெற்றியாளருக்கான  முதல் பரிசு  சங்கர் பொன்னர் மேல் நிலைபள்ளியும், இரண்டாம் பரிசு  அருள்மிகு பழனியாண்டவர் மெட்ரிக் மேல் நிலைபள்ளியும், மூன்றாம் பரிசு  நெய்காரபட்டி கிரசண்ட் மெட்ரிக் மேல் நிலைபள்ளியும், பாரத் பப்ளிக் பள்ளியும் பகிர்ந்து கொண்டனர்.


சிறப்பு விருந்தினர்கள் 

இதில் சிறப்பு விருந்தினர்களாக  சித்தனாதன் N.விஜய குமார் தலைமை தாங்கி  துவக்கி வைத்தார்.  பழநி மக்கள் ஆதீனம் சீர்வளர்சீர் சிவானந்த புலிப்பாணி பாத்திர சுவாமிகள்,  நெய்காரபட்டி PRG வேலப்பநாயுடு பள்ளி செயலாளர் கிரிநாத் இராமச்சந்திரன், சித்தமருத்துவர் மகேந்திரன், P.P.N.மருத்துவமனை டாக்டர்.விமல் குமார்,ஐஸ்வர்யா கருத்தரித்தல் மையம் செந்தாமரை செல்வி மருத்துவர்,  ஸ்ரீ பழநி ஆண்டவர் ஸ்டீல்ஸ் உரிமையாளர்,பழநி MI மொபைல்ஸ் & ஆரஞ்சு மொபைல்ஸ் உரிமையாளர் பாலமுரளி கிருஷ்ணா,கவுரா எலக்ட்ரிக் பைக் உரிமையாளர், தாமரை எலக்ட்ரானிக்ஸ் உரிமையாளர்,  ஸ்ரீ தெய்வீக விலாஸ் ஸ்பெசல் பஞ்சாமிர்தம் உரிமையாளர் v. தர்மலிங்கம்,விவேகானந்தா மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர் காசி விஸ்வநாதன்,  பழநி ஸ்ரீ மயூரா டிஜிட்டல் கலர் லேப் உரிமையாளர் மற்றும் பழனி அரிமா சங்க உறுப்பினர்கள் அனைவரும் கலந்துகொண்டனர் அனைத்துதுறை சார்ந்த முக்கிய பிரமுகர்களும்  கலந்து கொண்டனர் .

ஒருங்கிணைப்பு 

நிகழ்ச்சியை கீஸ் ஆஃப் மியூசிக் இசை பயிற்சி பள்ளி,V Talk ஆங்கில அகாடமி, லில்லி புட்ஸ் மழலையர் பள்ளி, சூப்பர் ஆர்ட்ஸ் ஓவிய பள்ளி, K பிலிம்ஸ் ஸ்டுடியோ, பீனிக்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப், 

சேவகன் சிலம்பாட்டஅறக்கட்டளை, SSS நடன பள்ளி,  சத்தியம் IPS அறக்கட்டளை ஆகியோர் ஒருங்கிணைத்துள்ளனர். 


இது குறித்து பேசிய பழநி முருகன் ஈவண்ட் மேனேஜ்மெண்ட் DR.பொன் கவியரசு கூறுகையில்:

 

சென்னை கோவை மதுரை போன்ற பெரு ந கரங்களோடு ஒப்பிடும் போது நமது மாணவ மாணவிகளுக்கு சரிவர வாய்ப்பு  கிடைப்பது இல்லை எனவும் அவர்களுக்கு முறையான வாய்ப்புகளை ஏற்படுத்திக்கொடுக்கவும்,அவர்களின் தனித்திறமைகளை அடையாளம் கட்டவும்  இந்த  கலைத்திருவிழா தொடங்கியதாவும் ,இனி ஆண்டுதோறும் நிகழ்ச்சி நடத்ததுவதாகவும்,இந்த கலைத்திருவிழாவிற்கு ஒத்துழைப்பு அளித்த நண்பர்களுக்கும்,நிகழ்ச்சிக்கு வழங்கிய உபயதாரர்களுக்கும்,பெற்றோர்களுக்கும் ,ஆசிரியபெருமக்களுக்கும் ,ஊடக உறவுகளுக்கும் ,பள்ளி மற்றும் கலை நிறுவனங்களுக்கும் நன்றிகூறியுள்ளார்.

          இதில் கலந்து கொண்டவர்கள் இந்த நிகழ்வானது மிக பிரமாண்டமாகவும்,நடத்தப்பட்ட நிகழ்ச்சிகள் பார்க்கும் போது இப்படி ஒரு வாய்ப்பு எங்களுக்கும் கிடைத்திருந்தால் ஆசைபட்டத்துறையில் நாங்களும் கால்பதித்திருப்போம்.இருந்த போதிலும் நாங்களும் முழு ஒத்துழைப்போடு இதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்துவோம் என பார்க்க முடிந்தது.ஆம் நண்பர்களே உறவுகளே வாய்ப்புக்காக நாமும் முயற்சித்து கொண்டே இருப்போம் இதுபோன்ற வாய்ப்புகளில் திறமையை வெளிப்படுத்துவோம்.  


           ஆசிரியர்   மதிப்புறு முனைவர் .சூரியா TTC.,R.J.,JMC.,
                                            9 44 2 33 80 99



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

5000 வார்த்தைகளால் பிறந்தநாள் வாழ்த்து

5000 வார்த்தைகளால் பிறந்தநாள் வாழ்த்து திண்டுக்கல் மாவட்டம், பழனி வட்டத்தைச் சேர்ந்த ஓவிய ஆசிரியரும், சூப்பர் ஆரட்ஸ் நிறுவனருமான சூப்பர் சின்னப்பா அவர்கள் தர்மம் வெல்லும்  எனும் வார்த்தைகளால் ஓவியம் வரைந்து அசத்தல்.. இன்று  பிறந்தநாள் விழா காணும் தேசிய திராவிட முற்போக்கு கழகத்தின் கட்சியின் தலைவர், நடிகருமான கேப்டன் விஜயகாந்த் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு 10 அடி நீளமும் 10 அடி அகலமும்  கொண்ட பதாகையில் தொடர்ந்து 5 மணி நேரம் தர்மம் வெல்லும் என்ற வார்த்தையை பயன்படுத்தி அவரின் படத்தினை வரைந்து விரைவில் பூரண நலம் பெற ஓவியக் கலைஞராக வாழ்த்து தெரிவித்துள்ளார்.          ஓவியத்தில் இது போன்ற முயற்சி முதன்மையானது. எனவும் இதற்கு முன்பு விழிப்புணர்வு ஓவியங்கள் வரைந்திருந்தாலும் அவற்றில் இது மிகவும் கடினமானதாகவும் இருந்தது எனவும் கூறியுள்ளார் இந்த ஓவியம் நிச்சயம் குணப்படுத்தும் எனவும் நம்பிக்கை தெரிவித்துள்ளார் நாமும் நம்பிக்கையோடு வாழ்த்துவோம்5000 வார்த்தைகளால் பிறந்தநாள் வாழ்த்து திண்டுக்கல் மாவட்டம் பழனி வட்டத்தைச் சேர்ந்த ஓவிய ஆசிரியரும் சூப்பர் ஆரட்ஸ் நிறுவன வருமான சூப்பர் சின்னப்பா அவர்கள்

சதுரங்கத்தில் சாதனை சுபஸ்ரீ

  சதுரங்கத்தில் சாதனை சாதாரண கிராமத்தில் மண் வாசனையோடு களம் காண தெரியாமல் இன்னும் எத்தனையோ திறமையாளர்கள் தங்களுக்குள் ஒளிந்திருக்கும் தனித் திறமைகளை அடையாளம் காட்ட முடியாமல் மறைத்துக் கொண்டு வாழ்ந்து வருகின்றனர் . ஆனால்   அமரபூண்டியை சேர்ந்த மாற்றத்திற்கான மாற்றுத்திறனாளி , தன்னம்பிக்கை நாயகன் முருகானந்தம் அவர்கள் அவரது மூத்த மகளான சுபஸ்ரீயை அவரது பயிற்சியால் சுமார் ஐந்து ஆண்டுகளாக செஸ் ( சதுரங்கம் )   பயிற்சி பெற்று சிறந்த விளையாட்டு வீரராக திகழ்ந்து வருகிறார் . திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் குறுவட்ட அளவிலான போட்டியில் கலந்து கொண்டு மாவட்ட அளவில் இரண்டாம் பரிசினை   பெற செய்துள்ளார் . ஆம் வாசகர்களே ..... விழிப்புணர்வு போட்டி கடந்த ஜூலை மாதம் சென்னை அடுத்து மாமல்லபுரத்தில் நடைபெற்ற செஸ்   ஒலிம்பியாட் குறித்து விழிப்புணர்வுக்காக தமிழக முழுவதும் பல்வேறு செஸ் போட்டிகள் நடைபெற்றது . அதில் குறிப்பாக ஒட்டன்சத்திரம் வட்டார அளவில் செஸ் போட்டி நடைபெற்றது . இதில் அரசு பள்ளி மாணவ , மாணவிகள் அரசு உதவி

7,027 உறுப்பினர்கள் கல்லூரி மைதானத்தில் ஒன்று கூடி பாரம்பரிய குழு நடனம்

  7,027 உறுப்பினர்கள் கல்லூரி மைதானத்தில் ஒன்று  கூடி  பாரம்பரிய குழு நடன வடிவத்தை நிகழ்த்தி சாதனை  புத்தகத்தில் இடம் பிடித்தது. கேரள மாநிலம் , குடும்பஸ்ரீ , குட்டநல்லுார்  அரசு கல்லூரியில் , மெகா திருவாதிரை நடன நிகழ்ச்சியை நடத்தி , உலக சாதனை படைத்துள்ளது . குடும்பஸ்ரீயின் 7,027 உறுப்பினர்கள் கல்லூரி மைதானத்தில் கூடி பாரம்பரிய குழு நடன வடிவத்தை நிகழ்த்தினர் . இந்த நடன வடிவம் பொதுவாக மலையாள மாதமான சிங்கம் மாதத்தில் ஓணம் பண்டிகையின் போதும் , எப்போதாவது தனு மாதத்திலும்   இது நிகழ்த்தப்படுகிறது . இந்நிகழ்ச்சியை வருவாய்த் துறை அமைச்சர் கே . ராஜன் தொடங்கி வைத்து , குடும்பஸ்ரீ மகளிர் மேம்பாட்டிற்கான முன்மாதிரி என்று பாராட்டினார் , உலகின் மிகப்பெரிய மகளிர் நெட்வொர்க் என்ற அந்தஸ்தை எடுத்துரைத்தார் . சுற்றுலாத் துறை , மாவட்ட நிர்வாகம் , மாநகராட்சி ஆகியவை இணைந்து மாவட்ட ஓணம் கொண்டாட்டத்தை நடத்தின .   தற்போது கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெறுவது குறித்து ஏற்பாட்டாளர்கள் ஆலோசித்து வருகின்றனர் . #DcbTn #DcbTamilCulture #DcbTale