முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பழனியாண்டவர் மகளிர் கலை கல்லூரியில்

 

பழனியாண்டவர் மகளிர் கலை கல்லூரியில்

பழனி அருள்மிகு பழனியாண்டவர் மகளிர் கலைக்கல்லூரியில்  ஆங்கிலத்துறை உயராய்வு மையம் சார்பாக ஒரு நாள் பயிற்சி பட்டறைநடைபெற்றது.


 19.10.2022 அன்று "Positive Psychology as the Way of Life" என்னும் தலைப்பில்மாணவியர்களுக்கு தன்னம்பிக்கை நிகழ்ச்சி  நடைபெற்றது. இதில் பொள்ளாச்சி Youth Corp Training Solutions பயிற்சி மையத்தின் நிறுவனர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். மாணவியர்களுக்கு


 தன்னம்பிக்கை, தற்சாற்பு, தொழில்முனைவு, நேர்மறை எண்ணங்களை வளர்ப்பது, மனதை ஒருநிலை படுத்துதல் தொடர்பாக பல பயிற்சிகள் தரப்பட்டன. நிகழ்ச்சியில் கல்லூரியின் முதல்வர் முனைவர். ந. புவனேஸ்வரி அவர்கள் வரவேற்புரை வழங்கினார். துறைத்தலைவர் மற்றும் பேராசிரியர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

.53வது பேரவை துவக்க விழா

அருள்மிகு பழனியாண்டவர் மகளிர் கலை கல்லூரியில் 21.10.2022 ஆம் நாள் வெள்ளிக்கிழமை 53வது பேரவை துவக்க விழா நடைபெற்றது .கல்லூரி முதல்வர் ந.புவனேஸ்வரி அவர்கள் அனைவரையும் வரவேற்று பேசினார்கள். இணை ஆணையர் திரு.நா.நடராஜன் அவர்கள் மாணவிகள் நல்ல சிந்தனை ,நல்ல ஒழுக்கம் ,தன்னம்பிக்கை ,ஆரோக்கியமான உடல்நிலை ,ஆகியவற்றை உடையவர்களாகத் திகழ வேண்டும் . I.A.S அதிகாரிகளாக வர வேண்டும் என சிறப்புரை ஆற்றினார்கள் .செயலர் திரு.அ.இரா.பிரகாஷ் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார்கள்.தமிழ் துறை தலைவர் சி.வாசுகி நன்றியுரை கூறினார்கள்.மாணவியர் கலை நிகழ்ச்சிகள் நிகழ்த்தினர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

“The Largest Fingerprint Portrait of Dr. B.R. Ambedkar A Symbol of Unity”

சேலம் பொறியியல் கல்லூரி மாணவ- மாணவிகளின் அம்பேத்கர் கலைப்படைப்பு அதிகாரப்பூர்வமாக DCB WORLD RECORDS நிறுவனம் உலக சாதனையாக பதிவு. சேலம் 29: சேலம் அரசு பொறியியல் கல்லூரி மாணவ- மாணவிகள் 8,21,547 பெருவிரல் கை ரேகைகளைப் பயன்படுத்தி 48.5 அடி நீளமும் 68 அடி அகலமுமான டாக்டர் பி. ஆர். அம்பேத்கரின் ஒரு பிரமாண்டமான போர்ட்ரேட் (ஓவியம்), வெற்றிகரமாக உருவாக்கி உள்ளனர் . டிசிபி வேர்ல்ட் ரெகார்ட்ஸ்’ நிறுவனம் “The Largest Fingerprint Portrait of Dr. B.R. Ambedkar A Symbol of Unity” என்ற தலைப்பில் உலக சாதனையாக அதிகாரப்பூர்வமாக பதிவு செய்து சான்றிதழ் வழங்கப்பட்டது. டிசிபி வேர்ல்ட் ரெகார்ட்ஸ் நிறுவனத்தின் சார்பில் டாக்டர் ஆ. சூரியா மற்றும் விருந்தினராக டாக்டர்.நட்சத்திரா,அப்துல் ரஹீம், மற்றும் ரகுமான் ஆகியோர் நிகழ்வில் கலந்து கொண்டு சாதனையை நேரடியாக ஆய்வு செய்து, உலக சாதனையின் அனைத்து விதிமுறைகளும் நிறைவேற்றப்பட்டதை உறுதி செய்தனர். இதன் பின்னர், ஒரு சிறப்பு நிகழ்வில் உலக சாதனை சான்றிதழை டாக்டர் ஆ. சூரியா மற்றும் டாக்டர் நட்சத்திரா ஆகியோர் கல்லூரி முதல்வர் டாக்டர் கீதா, பேராசிரியர்.தீபக் குமார் VIB...

பழனி மாணவியின் அசத்தல் ஓவியம்!

பழனி மாணவியின் அசத்தல் ஓவியம்! 🎨✨ திண்டுக்கல் மாவட்டம் பழனியைச் சேர்ந்த ஐந்தாம் வகுப்பு மாணவி அ.உதய நந்தினி, மக்களின் மனம் கவர்ந்த திட்டங்களைத் தொகுத்து, திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும் முன்னாள் முதல் வருமான முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களுக்கு பணிவான மரியாதையாக அக்கருவை வரைந்து வழிகாட்டியுள்ளார். அவர் இதுபோன்ற உழைப்பால் தழுவிய உணர்வை முறைமையாக வெளிப்படுத்தி, "மீண்டும் வெல்வோம், வெற்றி கொள்வோம்" என்று உற்சாகம் ஊட்டியுள்ளார். மேலும் இச்செயல் மக்களுக்கு தலைவர் வழிகாட்டும் முக்கியத்துவத்தையும், படைப்புத் திறமைக்கும் ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும். #பழனி #கலைபோட்டி #பயிற்சி #மாணவர்கள் #பழனி #மாணவிஓவியம் #அசத்தல்கலை #தமிழ்இலக்கு #ArteTamil #ArtistOnInstagram #CreativeTamil #ArtLovers #TamilArtistry #InstaArt #DCBAUDHAYANATHINI #UDHAYANANTHINIPALANI #UDHAYANANTHINIART

7,027 உறுப்பினர்கள் கல்லூரி மைதானத்தில் ஒன்று கூடி பாரம்பரிய குழு நடனம்

  7,027 உறுப்பினர்கள் கல்லூரி மைதானத்தில் ஒன்று  கூடி  பாரம்பரிய குழு நடன வடிவத்தை நிகழ்த்தி சாதனை  புத்தகத்தில் இடம் பிடித்தது. கேரள மாநிலம் , குடும்பஸ்ரீ , குட்டநல்லுார்  அரசு கல்லூரியில் , மெகா திருவாதிரை நடன நிகழ்ச்சியை நடத்தி , உலக சாதனை படைத்துள்ளது . குடும்பஸ்ரீயின் 7,027 உறுப்பினர்கள் கல்லூரி மைதானத்தில் கூடி பாரம்பரிய குழு நடன வடிவத்தை நிகழ்த்தினர் . இந்த நடன வடிவம் பொதுவாக மலையாள மாதமான சிங்கம் மாதத்தில் ஓணம் பண்டிகையின் போதும் , எப்போதாவது தனு மாதத்திலும்   இது நிகழ்த்தப்படுகிறது . இந்நிகழ்ச்சியை வருவாய்த் துறை அமைச்சர் கே . ராஜன் தொடங்கி வைத்து , குடும்பஸ்ரீ மகளிர் மேம்பாட்டிற்கான முன்மாதிரி என்று பாராட்டினார் , உலகின் மிகப்பெரிய மகளிர் நெட்வொர்க் என்ற அந்தஸ்தை எடுத்துரைத்தார் . சுற்றுலாத் துறை , மாவட்ட நிர்வாகம் , மாநகராட்சி ஆகியவை இணைந்து மாவட்ட ஓணம் கொண்டாட்டத்தை நடத்தின .   தற்போது கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெறுவது குறித்து ஏற்பாட்டாளர்கள் ஆலோசித்து வருகின்றனர் ...