முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பழைய கணிப்பொறி பொருட்களில் கிறிஸ்மஸ் குடில்..

 பழைய கணிப்பொறி பொருட்களில் கிறிஸ்மஸ் குடில்.. 

அசத்திய புதுச்சேரி உலகசாதனையாளர்! 

புதுச்சேரி, அரியாங்குப்பம், உப்புகார வீதியில் வசிக்கு
ம்  சுந்தரராசு அவர்கள்  அரசுப்  பள்ளி நுண்கலை ஆசிரியர். இவர் ஆண்டுதோறும் விதவிதமான பொருட்களை கொண்டு தனது வீட்டில் கிறிஸ்துமஸ் குடில் அமைப்பது வழக்கம்.இந்த வருடம் 10 -வது முறையாக வித்தியாசமான முறையில் இன்றைய சூழலுக்கு ஏற்றவாறு டிஜிட்டல் இந்தியாவை போற்றும் வகையில் கம்யூட்டர் மற்றும் பழுதடைந்த கழிவு மின்னணு பொருட்களை கொண்டு கிருஸ்துமஸ் குடில் செய்து உள்ளார்.


சூழலுக்கு ஏற்றவாறு குடில்

இந்து மதத்தினை பின்பற்றி வரும் நோணாங்குப்பம் மேல் நிலைப்பள்ளியில் நுண்கலை ஆசிரியர்,  ஒவ்வொரு ஆண்டும் சுற்று சூழலுக்கு ஏற்றவாறு குடில் அமைத்து வருவதை வழக்கமாக கொண்டுள்ளார். 

முந்தைய சாதனைகள்

இதற்கு முன்பு  ஒரு கன செ.மீட்டரில் கிறிஸ்துமஸ் குடில் செய்து அசிஸ்ட் உலக சாதனை படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.அதேபோல் உணவில் காய்கறிகளை அதிகம் சேர்த்து கொள்ள வேண்டும் என்ற விழிப்புணர்வு 

மூலம் காய்கறிகளான கிருஸ்துமஸ் குடில், பிளாஸ்டிக் பயன்பாடு மற்றும் மறு சூழற்சி விழிப்புணர்வு  மூலம் குடி தண்ணீர் பிளாஸ்டிக் பாட்டில்கலால் வடிவமைத்த கிருஸ்துமஸ் குடில், மரம் வளர்போம் என்ற விழிப்புணர்வு மூலம் தேங்காய்களை கொண்டு வடிவமைத்து கிருஸ்துமஸ்குடில், சிறு தானிய உணவு வகைகளை பயன்படுத்த வேண்டும் என்ற விழிப்புணர்வு மூலம் 25 வகையான தானியங்களை கொண்டு வடிவமைத்த கிருஸ்துமஸ்குடில், மாணவர்கள் கற்றல் திறனை வளர்க்க வேண்டும் என்ற விழிப்புணர்வு மூலம் 700 புத்தகங்களை கொண்டு வடிவமைத்து குடில், அனைவரும் துணி பைகளை பயன்படுத்த வேண்டும் என்ற விழிப்புணர்வு மூலம் 1000 துணி பைகளை கொண்டு வடிவமைத்த குடில். தடுப்பூசி போட்டு கெள்ளவேண்டும் என்ற விழிப்புணர்வு மூலம்  மாதிரி கொரோன தடுப்பூசி மருந்து, ஊசிகளை கொண்டு வடிவமைத்து உள்ளார். இது போன்ற விழிப்புணர் செய்ததை பாராட்டி உலகளாவிய மனித அமைதி பல்கலைக்கழகம் சார்பில் சுந்தரராசு அவர்களுக்கு கெளரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டு சிறப்பித்தது.

தொடர்ந்து 10-வது ஆண்டாக...

இதனைத் தொடர்ந்து தற்போது 10-வது ஆண்டாக இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக தனது வீட்டில்  10  வது முறையாக வித்தியாசமான முறையில் கம்ப்யூட்டர் மற்றும் பழுதான மின்னணு கழிவு பொருட்களை கொண்டு இன்றைய சூழலுக்கு ஏற்றவாறு டிஜிட்டல் இந்தியாவை போற்றும் வகையில் கிறிஸ்துமஸ் குடில் அமைத்துள்ளார்.அதில் கம்யூட்டர் மற்றும் பழைய மானிட்டர் டூம் பகுதியை குடில் தொழுவாகவும், ஹார்டு டிஸ்க்கு, கேமிரா பென்ட்ரைவ், டேப், எல்.சி.டி மானிட்டர், லேப்டாப், இன்டர்நெட் மோடம், ஸ்கேனர் மற்றும் மதர் போர்டுகளை கொண்டு சிட்டி பில்டிங், சி.டி.யை கிறிஸ்துமஸ் மரமாக உருவாக்கியுள்ளார்.

ராணுவ தளமாக

பிரிண்டர் மிஷின் ராணுவ தளமாகவும் உருவாக்கப்பட்டு உள்ளது.மற்ற எல்க்ட்ரானிக் கழிவு பொருட்களை கொண்டு குடிலின் மற்ற பகுதிகள் அழகுபடுத்தப்பட்டு உள்ளது.மேலும் கிறிஸ்துமஸ் தாத்தா இன்றைய தலைமுறைக்கு ஏற்றார் போல் கையில் செல்போனுடன், ஹெட்போனில் பாடல் கேட்பது போல் தத்துரூபமாக செய்துள்ளார்.

பொதுமக்களுக்கு கிறிஸ்துமஸ் வாழ்த்து 

இந்தியாவில்  அனைத்தும் டிஜிட்டல் மையமாக திகழும் இந்த சூழலில் அவற்றை கவனமுடன் பயன்படுத்த வேண்டும் என்ற விழிப்புணர்வு மூலம் இந்த கிறிஸ்துமஸ் குடில்  அமைக்கப்பட்டு பொதுமக்களுக்கு கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்த குடிலை  இந்து ,முஸ்லீம் ,கிறிஸ்துவர் என அனைத்து மதத்தை சார்ந்த பொதுமக்களும்   ஆர்வமுடன் பார்த்து நுண்கலை ஆசிரியர் சுந்தரராசு அவர்களையும் அவரது குடும்பத்தினரையும் பாராட்டி செல்கின்றனர்,நாமும் வாழ்த்துவோம்   9843651955.

இந்த லிங்க்கை அழுத்துங்க வீடியோ பாருங்க 

https://youtu.be/-GHzOaFDGfU

(2807) ஓவிய ஆசிரியர் அசத்தல் - YouTube



#DailyNews  #sunamisudarmonthlymagazine

#subeditor #umjwa #palani #umjwa #subeditorsuriya

#dcbworldrecords  #adjudicatorteam  #adjudicator  #dcbnews

#Newtalents #dcbCreativity  #dcbindia  #dcbtalents

 #dcbadjudicator  #dcbnews  #dcbrecords  #Creator  #explore

#dcbinternationalrecordswrrf  #editorsuriya  #adjudicatorsuriya

#dcbworldrecords #dcbwrrf  

                                ஆசிரியர்   மதிப்புறு முனைவர்.  .சூரியா 




கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

“The Largest Fingerprint Portrait of Dr. B.R. Ambedkar A Symbol of Unity”

சேலம் பொறியியல் கல்லூரி மாணவ- மாணவிகளின் அம்பேத்கர் கலைப்படைப்பு அதிகாரப்பூர்வமாக DCB WORLD RECORDS நிறுவனம் உலக சாதனையாக பதிவு. சேலம் 29: சேலம் அரசு பொறியியல் கல்லூரி மாணவ- மாணவிகள் 8,21,547 பெருவிரல் கை ரேகைகளைப் பயன்படுத்தி 48.5 அடி நீளமும் 68 அடி அகலமுமான டாக்டர் பி. ஆர். அம்பேத்கரின் ஒரு பிரமாண்டமான போர்ட்ரேட் (ஓவியம்), வெற்றிகரமாக உருவாக்கி உள்ளனர் . டிசிபி வேர்ல்ட் ரெகார்ட்ஸ்’ நிறுவனம் “The Largest Fingerprint Portrait of Dr. B.R. Ambedkar A Symbol of Unity” என்ற தலைப்பில் உலக சாதனையாக அதிகாரப்பூர்வமாக பதிவு செய்து சான்றிதழ் வழங்கப்பட்டது. டிசிபி வேர்ல்ட் ரெகார்ட்ஸ் நிறுவனத்தின் சார்பில் டாக்டர் ஆ. சூரியா மற்றும் விருந்தினராக டாக்டர்.நட்சத்திரா,அப்துல் ரஹீம், மற்றும் ரகுமான் ஆகியோர் நிகழ்வில் கலந்து கொண்டு சாதனையை நேரடியாக ஆய்வு செய்து, உலக சாதனையின் அனைத்து விதிமுறைகளும் நிறைவேற்றப்பட்டதை உறுதி செய்தனர். இதன் பின்னர், ஒரு சிறப்பு நிகழ்வில் உலக சாதனை சான்றிதழை டாக்டர் ஆ. சூரியா மற்றும் டாக்டர் நட்சத்திரா ஆகியோர் கல்லூரி முதல்வர் டாக்டர் கீதா, பேராசிரியர்.தீபக் குமார் VIB...

பழனி மாணவியின் அசத்தல் ஓவியம்!

பழனி மாணவியின் அசத்தல் ஓவியம்! 🎨✨ திண்டுக்கல் மாவட்டம் பழனியைச் சேர்ந்த ஐந்தாம் வகுப்பு மாணவி அ.உதய நந்தினி, மக்களின் மனம் கவர்ந்த திட்டங்களைத் தொகுத்து, திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும் முன்னாள் முதல் வருமான முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களுக்கு பணிவான மரியாதையாக அக்கருவை வரைந்து வழிகாட்டியுள்ளார். அவர் இதுபோன்ற உழைப்பால் தழுவிய உணர்வை முறைமையாக வெளிப்படுத்தி, "மீண்டும் வெல்வோம், வெற்றி கொள்வோம்" என்று உற்சாகம் ஊட்டியுள்ளார். மேலும் இச்செயல் மக்களுக்கு தலைவர் வழிகாட்டும் முக்கியத்துவத்தையும், படைப்புத் திறமைக்கும் ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும். #பழனி #கலைபோட்டி #பயிற்சி #மாணவர்கள் #பழனி #மாணவிஓவியம் #அசத்தல்கலை #தமிழ்இலக்கு #ArteTamil #ArtistOnInstagram #CreativeTamil #ArtLovers #TamilArtistry #InstaArt #DCBAUDHAYANATHINI #UDHAYANANTHINIPALANI #UDHAYANANTHINIART

7,027 உறுப்பினர்கள் கல்லூரி மைதானத்தில் ஒன்று கூடி பாரம்பரிய குழு நடனம்

  7,027 உறுப்பினர்கள் கல்லூரி மைதானத்தில் ஒன்று  கூடி  பாரம்பரிய குழு நடன வடிவத்தை நிகழ்த்தி சாதனை  புத்தகத்தில் இடம் பிடித்தது. கேரள மாநிலம் , குடும்பஸ்ரீ , குட்டநல்லுார்  அரசு கல்லூரியில் , மெகா திருவாதிரை நடன நிகழ்ச்சியை நடத்தி , உலக சாதனை படைத்துள்ளது . குடும்பஸ்ரீயின் 7,027 உறுப்பினர்கள் கல்லூரி மைதானத்தில் கூடி பாரம்பரிய குழு நடன வடிவத்தை நிகழ்த்தினர் . இந்த நடன வடிவம் பொதுவாக மலையாள மாதமான சிங்கம் மாதத்தில் ஓணம் பண்டிகையின் போதும் , எப்போதாவது தனு மாதத்திலும்   இது நிகழ்த்தப்படுகிறது . இந்நிகழ்ச்சியை வருவாய்த் துறை அமைச்சர் கே . ராஜன் தொடங்கி வைத்து , குடும்பஸ்ரீ மகளிர் மேம்பாட்டிற்கான முன்மாதிரி என்று பாராட்டினார் , உலகின் மிகப்பெரிய மகளிர் நெட்வொர்க் என்ற அந்தஸ்தை எடுத்துரைத்தார் . சுற்றுலாத் துறை , மாவட்ட நிர்வாகம் , மாநகராட்சி ஆகியவை இணைந்து மாவட்ட ஓணம் கொண்டாட்டத்தை நடத்தின .   தற்போது கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெறுவது குறித்து ஏற்பாட்டாளர்கள் ஆலோசித்து வருகின்றனர் ...