முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கண்ணில் பட்ட முத்தான மூன்று படைப்பு

 கண்ணில் பட்ட முத்தான மூன்று படைப்பு

 தமிழக முன்னாள் முதல்வர் நூறாவது ஆண்டு பிறந்தநாள் கொண்டாட்டம்

முன்னாள் முதல்வர்  முத்தமிழ் அறிஞர் பன்முகத் திறமை கொண்ட எழுத்தாளர், பத்திரிக்கையாளர், மற்றும் சட்டமன்ற உறுப்பினர், ,அமைச்சர் ,முதலமைச்சர்  என்று போற்றும் பன்முக திறமை கொண்ட முன்னாள் முதல்வர் கலைஞரின் காவியங்கள் ஆயிரம் இருந்தாலும், கடை கோடி மனிதன் வரை கொண்டாட துடிக்கும் கலைஞர்களின் ஒவ்வொரு படைப்பும் ஒவ்வொரு சிறப்பை பெறும் என்பதில் எந்த ஒரு ஐயமும் இல்லை என்பதற்கு இந்த படைப்புகளும் முயற்சிகளும் பேசிக்கொண்டே இருக்கும் அப்படிப்பட்ட மூன்று படைப்புகளையும் உங்கள் பார்வைக்கு

கொல்லாஜ் ஓவியம் 

            இரண்டாயிரத்திருக்கும் மேற்பட்ட  தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் உருவப்படத்தை கொண்டு முன்னாள் முதல்வர்  ஓவியத்தை வரைந்த.........


                             திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள சத்திரப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் பகுதி நேர ஓவிய ஆசிரியராக பணிபுரிந்து கொண்டிருக்கும் ஓவிய ஆசிரியர் அன்புச்செல்வன். இவர் கடந்த 2013 ஆம் ஆண்டு உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்து, பல்வேறு மாணவர்களையம்  உருவாக்கி அவர்களையும் உலக சாதனை புத்தகத்தில்  இடம் பிடிக்க வைத்து திண்டுக்கல் மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துக்கொண்டிருக்கிறார்.

                       


   முன்னாள் முதல்வர்  கலைஞர் கருணாநிதியின் நூறாவது பிறந்தநாளை முன்னிட்டு வித்தியமான முறையில் தமிழக முதல்வர் மு .க .ஸ்டாலின் உருவப்படத்தை நகலெடுத்து அதனை கொல்லாஜ் வடிவில் உருவாக்கி  பார்வைக்கு வைத்திருந்தார் .இந்த படமானது சுமார் 4 அடி உயரமும் ,3 அடி அகலம் கொண்டது .

     உயிர் எழுத்துக்கள் கொண்டு ஓவியம்                        

எழுத்தே  கலைஞர் உரையாடும் சொத்தே  என தூரிகை பயன்படுத்தாமல் தமிழ் உயிர் எழுத்துக்களின் வடிவங்களை கொண்டு மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் கலைஞர் அவர்களின் உருவத்தை வரைந்து அசத்தியுள்ளார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே சிவனார்தாங்கள் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பகுதி நேர ஓவிய ஆசிரியராக பணிபுரியும்  மணலூர்பேட்டையைச் சேர்ந்த மதிப்புறு முனைவர்.செல்வம். இவர் தமிழக முன்னாள் முதல்வர் 100வது பிறந்த நாளை முன்னிட்டு வாழ்த்து கூறும் விதமாகவும் , எழுத்தாற்றலை போற்றும் விதமாக உயிர் எழுத்துக்களைக்  கொண்டு படம் வரைந்து அசத்தியுள்ளார்.


நூறாவது பிறந்தநாள் பரிசாக பகுதி நேர ஓவிய ஆசிரியர்களை நிரந்தரம் செய்ய வேண்டியும்  10 நிமிடங்களில் முன்னாள் முதல்வர் கலைஞர் அவர்களின் ஓவியத்தை  வரைந்து அசத்தியுள்ளார். இதனை கண்டு பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும், கலைஞர்களும் வாழ்த்திச் சென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


100 ரூபாய் நாணயம் போல் கற்பனையில் வடிவம் செய்து அசத்திய ஐடி இளைஞர்


ஓசூர் சின்ன இலசகிரி பகுதியைச் சார்ந்த ஐடி நிறுவன ஊழியர் லூகாஸ் இவர் பெங்களூரில் வேலை பார்த்து வருகிறார் திருக்குறள் மற்றும் தமிழ் மீது பற்றுள்ள இவர் ஏற்கனவே ஐஸ் குச்சியில் தனித்தனியே 1330 திருக்குறள் எழுதி சாதனை படைத்துள்ளார்.இதனை அடித்து வள்ளலார் 200 வது பிறந்த நாளை முன்னிட்டு 5000 காகிதங்களால் அவரது உருவங்களை வரைந்தும் சாதனை படைத்துள்ளார். இந்நிலையில் மறைந்த முன்னாள் தமிழக முதல்வரும் பன்முக திறமை கொண்ட கலைஞரின் உருவத்தை பத்தாயிரம் காகித துண்டுகள் மூலம் 100 ரூபாய் நாணயம் போல் வடிவமைத்து அசத்தியுள்ளார் இந்த மொசைகாட் சுமார் இரண்டு மாதங்களில் நேரம் கிடைக்கும் போதெல்லாம் செய்து முடித்துள்ளேன் எனவும் கூறியுள்ளார்.

      ஓவியத்திலும் காவியம் படைக்கும் இவர்களைப் போன்ற ஒவ்வொரு கோரிக்கைகளும் நிறைவேறும் என நம்புகிறோம்

#DCBNewtalents

 #dcbCreativity  

#Dcbindia  

#DcbTalents

#dcbinternationalrecordswrrf

#adjudicatorsuriya

#dcbworldrecords

#dcbwrrf

             ஆசிரியர்   மதிப்புறு முனைவர்.  .சூரியா 94423 38099

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

“The Largest Fingerprint Portrait of Dr. B.R. Ambedkar A Symbol of Unity”

சேலம் பொறியியல் கல்லூரி மாணவ- மாணவிகளின் அம்பேத்கர் கலைப்படைப்பு அதிகாரப்பூர்வமாக DCB WORLD RECORDS நிறுவனம் உலக சாதனையாக பதிவு. சேலம் 29: சேலம் அரசு பொறியியல் கல்லூரி மாணவ- மாணவிகள் 8,21,547 பெருவிரல் கை ரேகைகளைப் பயன்படுத்தி 48.5 அடி நீளமும் 68 அடி அகலமுமான டாக்டர் பி. ஆர். அம்பேத்கரின் ஒரு பிரமாண்டமான போர்ட்ரேட் (ஓவியம்), வெற்றிகரமாக உருவாக்கி உள்ளனர் . டிசிபி வேர்ல்ட் ரெகார்ட்ஸ்’ நிறுவனம் “The Largest Fingerprint Portrait of Dr. B.R. Ambedkar A Symbol of Unity” என்ற தலைப்பில் உலக சாதனையாக அதிகாரப்பூர்வமாக பதிவு செய்து சான்றிதழ் வழங்கப்பட்டது. டிசிபி வேர்ல்ட் ரெகார்ட்ஸ் நிறுவனத்தின் சார்பில் டாக்டர் ஆ. சூரியா மற்றும் விருந்தினராக டாக்டர்.நட்சத்திரா,அப்துல் ரஹீம், மற்றும் ரகுமான் ஆகியோர் நிகழ்வில் கலந்து கொண்டு சாதனையை நேரடியாக ஆய்வு செய்து, உலக சாதனையின் அனைத்து விதிமுறைகளும் நிறைவேற்றப்பட்டதை உறுதி செய்தனர். இதன் பின்னர், ஒரு சிறப்பு நிகழ்வில் உலக சாதனை சான்றிதழை டாக்டர் ஆ. சூரியா மற்றும் டாக்டர் நட்சத்திரா ஆகியோர் கல்லூரி முதல்வர் டாக்டர் கீதா, பேராசிரியர்.தீபக் குமார் VIB...

பழனி மாணவியின் அசத்தல் ஓவியம்!

பழனி மாணவியின் அசத்தல் ஓவியம்! 🎨✨ திண்டுக்கல் மாவட்டம் பழனியைச் சேர்ந்த ஐந்தாம் வகுப்பு மாணவி அ.உதய நந்தினி, மக்களின் மனம் கவர்ந்த திட்டங்களைத் தொகுத்து, திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும் முன்னாள் முதல் வருமான முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களுக்கு பணிவான மரியாதையாக அக்கருவை வரைந்து வழிகாட்டியுள்ளார். அவர் இதுபோன்ற உழைப்பால் தழுவிய உணர்வை முறைமையாக வெளிப்படுத்தி, "மீண்டும் வெல்வோம், வெற்றி கொள்வோம்" என்று உற்சாகம் ஊட்டியுள்ளார். மேலும் இச்செயல் மக்களுக்கு தலைவர் வழிகாட்டும் முக்கியத்துவத்தையும், படைப்புத் திறமைக்கும் ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும். #பழனி #கலைபோட்டி #பயிற்சி #மாணவர்கள் #பழனி #மாணவிஓவியம் #அசத்தல்கலை #தமிழ்இலக்கு #ArteTamil #ArtistOnInstagram #CreativeTamil #ArtLovers #TamilArtistry #InstaArt #DCBAUDHAYANATHINI #UDHAYANANTHINIPALANI #UDHAYANANTHINIART

7,027 உறுப்பினர்கள் கல்லூரி மைதானத்தில் ஒன்று கூடி பாரம்பரிய குழு நடனம்

  7,027 உறுப்பினர்கள் கல்லூரி மைதானத்தில் ஒன்று  கூடி  பாரம்பரிய குழு நடன வடிவத்தை நிகழ்த்தி சாதனை  புத்தகத்தில் இடம் பிடித்தது. கேரள மாநிலம் , குடும்பஸ்ரீ , குட்டநல்லுார்  அரசு கல்லூரியில் , மெகா திருவாதிரை நடன நிகழ்ச்சியை நடத்தி , உலக சாதனை படைத்துள்ளது . குடும்பஸ்ரீயின் 7,027 உறுப்பினர்கள் கல்லூரி மைதானத்தில் கூடி பாரம்பரிய குழு நடன வடிவத்தை நிகழ்த்தினர் . இந்த நடன வடிவம் பொதுவாக மலையாள மாதமான சிங்கம் மாதத்தில் ஓணம் பண்டிகையின் போதும் , எப்போதாவது தனு மாதத்திலும்   இது நிகழ்த்தப்படுகிறது . இந்நிகழ்ச்சியை வருவாய்த் துறை அமைச்சர் கே . ராஜன் தொடங்கி வைத்து , குடும்பஸ்ரீ மகளிர் மேம்பாட்டிற்கான முன்மாதிரி என்று பாராட்டினார் , உலகின் மிகப்பெரிய மகளிர் நெட்வொர்க் என்ற அந்தஸ்தை எடுத்துரைத்தார் . சுற்றுலாத் துறை , மாவட்ட நிர்வாகம் , மாநகராட்சி ஆகியவை இணைந்து மாவட்ட ஓணம் கொண்டாட்டத்தை நடத்தின .   தற்போது கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெறுவது குறித்து ஏற்பாட்டாளர்கள் ஆலோசித்து வருகின்றனர் ...