முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

விவேகானந்தா வித்யாலயாவில் வித்தியாசமான திருவிழா

 விவேகானந்தா வித்யாலயாவில்

வித்தியாசமான கலை திருவிழா 

பழனி சூப்பர் ஆர்ட்ஸ் அகாடமியும்,பழனி வர்ஷா சித்தா கிளினிக்கும் இணைந்து வழங்கிய ஆர்வமுள்ளவர்கள் அனைவரும் பங்கு பெற்ற மாநில அளவிலான ஓவியப்போட்டி மற்றும் ஓவியக்கண்காட்சி, ஒவியங்கள் விற்பனை நிகழ்வு பழனியில் உள்ள விவேகானந்தா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது .

12.11.2022 சரியாக 7.00 மணிக்குள் நுழைவுசீட்டுடன் , வரிசையாக நின்று அமைதியாக பிராத்தனை அறைக்கு சென்றனர்.அங்கு அரைமணி  நேர பிராத்தனைக்கு பிறகு உடற்பயிற்சியினை செய்து காண்பித்து போட்டியில் கலந்து கொள்ள வந்தவர்களையும் செய்ய சொல்லி போட்டியினை தொடங்கி அனைவருக்குள்ளும் இருக்கும்  தன்னம்பிக்கையினை வளரச்செய்தது.

 நிகழ்ச்சி தொடக்கம் 


 நிகழ்ச்சியில் சூப்பர் ஆர்ட்ஸ் அகாடமியின் நிறுவனர் சின்னப்பாஅவர்கள் 
 வரவேற்புரை வழங்க, பள்ளியின் தலைமையாசிரியர் திரு. காசி ஆறுமுகம் அவர்கள் முன்னிலை வகிக்க, இந்நிகழ்வின் சிறப்பு விருந்தினராக  சித்த மருத்துவர் மகேந்திரன் அவர்கள்  பங்கேற்று கலந்து கொண்ட மாணவர்கள் அனைவருக்கும் மஞ்சப்பை மற்றும் ஆரோக்கிய கையேடையும் வழங்கினார். இந்நிகழ்வில் கே.ஜி முதல் கல்லூரி மாணவ,  மாணவிகளும்,இல்லத்தரசிகளும், ஓவியவேலை பார்ப்பவர்களும்,கலந்து கொண்டு தனது எண்ணங்களுக்கு உயிர் தந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.ஓவியப்போட்டி காலை 9.00 மணிமுதல் 11.30 மணி வரை நடைபெற்றது.வெளி மாவட்டங்களில் இருந்து சுமார் 70  மாணவ,  மாணவிகளும் ,நமது மாவட்டத்தில் 46  மாணவ,  மாணவிகளும் கலந்து கொண்டனர் .பழனியில் விற்பனை கண்காட்சி நடைபெற்றது  இதுவே முதல் முறையாகும்.  

இரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவன் 

       இதில் குறிப்பிடும்படியாக மதுரை திரு மங்கலத்தை சேர்ந்த இரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவன் ஹர்ஷன் என்பவர்ஓவியப்போட்டியிலும்,ஓவியக்கண்காட்சி மற்றும் விற்பனையிலும் பங்குபெற்று தனது படைப்புக்களை நல்ல விலைக்கு விற்று சென்றுள்ளார்.  மேலும் அதிகப்படியான கல்லூரி மாணவிகள்  கலந்துகொண்டு ஓவியத்தை வணிகமாக்கும் கலையினையும் நன்கு கற்று கொண்டனர்.கலந்து கொண்ட அனைவருக்கும்  பங்கேற்பு சான்றிதழ்கள் தனது புகைப் படத்துடன் இருந்தததால் பங்கேற்பவர்களை மகிழ்ச்சியுறச்செய்தது.இப்போட்டியில் முன்னரே முன் பதிவு செய்த மாணவர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.ஆதலால் நேர்மையாக நடைபெற்றது. 

 சூப்பர் ஆர்ட்ஸ் அகாடமியின் நிறுவனர் சின்னப்பாபேசுகையில் 

நான் படிக்கும் போதெல்லாம் இந்த மாதிரி வாய்ப்புக்களெல்லாம் கிடைக்கவில்லை.அது எல்லோருக்கும் கிடைக்க வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில் இதனை செய்தோம்.எனவும் மாணவர்களின் ஆர்வத்தினை பார்க்கும்போது இன்னமும் உழைத்திருக்கலாமோ என்று எண்ணம் தோன்றுகிறது . இதன் விளம்பரங்களை இணைய தளத்தில் மட்டுமே சென்றுள்ளதால் நிறைய மாவட்டங்களுக்கு தெரியவில்லை.வரும் காலங்களில் இதற்கு விடை சொல்லுகிற மாதிரி நிச்சயம் இருக்கும். 





















இந்த மாதிரி தனித்திறமை இருக்கும் மாணவர்கள் யார் இருந்தாலும், என்னை தொடர் புக்கொள்ளலாம். ஆரோக்கியமான நாட்டினை உருவாக்கி அதில் நல்ல மனித நேயமிக்க மனிதர்களை உருவாக்கும் பணியினை நிச்சயம் சூப்பர் ஆர்ட்ஸ் அகாடமி நிறைவேற்றும்.என்று தன்னம்பிக்கையாக பேசியது அனைவரிடமும் உற்சாகம் தெரிந்தது, நன்றியுரை சமூக ஆர்வலர் திரு ஜெகன் எனபவர் கூறினார். தொடர்புக்கு 94435 57423

 #dcbworldrecords  #adjudicatorteam  #adjudicator  #dcbnews

#Newtalents #dcbCreativity  #dcbindia  #dcbtalents

 #dcbadjudicator  #dcbnews  #dcbrecords  #Creator  #explore

#dcbinternationalrecordswrrf  #editorsuriya  #adjudicatorsuriya

#dcbworldrecords #dcbwrrf  

                            

                                                                                                               மதிப்புறு முனைவர்  .சூரியா

                                                                 9442338099


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

“The Largest Fingerprint Portrait of Dr. B.R. Ambedkar A Symbol of Unity”

சேலம் பொறியியல் கல்லூரி மாணவ- மாணவிகளின் அம்பேத்கர் கலைப்படைப்பு அதிகாரப்பூர்வமாக DCB WORLD RECORDS நிறுவனம் உலக சாதனையாக பதிவு. சேலம் 29: சேலம் அரசு பொறியியல் கல்லூரி மாணவ- மாணவிகள் 8,21,547 பெருவிரல் கை ரேகைகளைப் பயன்படுத்தி 48.5 அடி நீளமும் 68 அடி அகலமுமான டாக்டர் பி. ஆர். அம்பேத்கரின் ஒரு பிரமாண்டமான போர்ட்ரேட் (ஓவியம்), வெற்றிகரமாக உருவாக்கி உள்ளனர் . டிசிபி வேர்ல்ட் ரெகார்ட்ஸ்’ நிறுவனம் “The Largest Fingerprint Portrait of Dr. B.R. Ambedkar A Symbol of Unity” என்ற தலைப்பில் உலக சாதனையாக அதிகாரப்பூர்வமாக பதிவு செய்து சான்றிதழ் வழங்கப்பட்டது. டிசிபி வேர்ல்ட் ரெகார்ட்ஸ் நிறுவனத்தின் சார்பில் டாக்டர் ஆ. சூரியா மற்றும் விருந்தினராக டாக்டர்.நட்சத்திரா,அப்துல் ரஹீம், மற்றும் ரகுமான் ஆகியோர் நிகழ்வில் கலந்து கொண்டு சாதனையை நேரடியாக ஆய்வு செய்து, உலக சாதனையின் அனைத்து விதிமுறைகளும் நிறைவேற்றப்பட்டதை உறுதி செய்தனர். இதன் பின்னர், ஒரு சிறப்பு நிகழ்வில் உலக சாதனை சான்றிதழை டாக்டர் ஆ. சூரியா மற்றும் டாக்டர் நட்சத்திரா ஆகியோர் கல்லூரி முதல்வர் டாக்டர் கீதா, பேராசிரியர்.தீபக் குமார் VIB...

பழனி மாணவியின் அசத்தல் ஓவியம்!

பழனி மாணவியின் அசத்தல் ஓவியம்! 🎨✨ திண்டுக்கல் மாவட்டம் பழனியைச் சேர்ந்த ஐந்தாம் வகுப்பு மாணவி அ.உதய நந்தினி, மக்களின் மனம் கவர்ந்த திட்டங்களைத் தொகுத்து, திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும் முன்னாள் முதல் வருமான முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களுக்கு பணிவான மரியாதையாக அக்கருவை வரைந்து வழிகாட்டியுள்ளார். அவர் இதுபோன்ற உழைப்பால் தழுவிய உணர்வை முறைமையாக வெளிப்படுத்தி, "மீண்டும் வெல்வோம், வெற்றி கொள்வோம்" என்று உற்சாகம் ஊட்டியுள்ளார். மேலும் இச்செயல் மக்களுக்கு தலைவர் வழிகாட்டும் முக்கியத்துவத்தையும், படைப்புத் திறமைக்கும் ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும். #பழனி #கலைபோட்டி #பயிற்சி #மாணவர்கள் #பழனி #மாணவிஓவியம் #அசத்தல்கலை #தமிழ்இலக்கு #ArteTamil #ArtistOnInstagram #CreativeTamil #ArtLovers #TamilArtistry #InstaArt #DCBAUDHAYANATHINI #UDHAYANANTHINIPALANI #UDHAYANANTHINIART

7,027 உறுப்பினர்கள் கல்லூரி மைதானத்தில் ஒன்று கூடி பாரம்பரிய குழு நடனம்

  7,027 உறுப்பினர்கள் கல்லூரி மைதானத்தில் ஒன்று  கூடி  பாரம்பரிய குழு நடன வடிவத்தை நிகழ்த்தி சாதனை  புத்தகத்தில் இடம் பிடித்தது. கேரள மாநிலம் , குடும்பஸ்ரீ , குட்டநல்லுார்  அரசு கல்லூரியில் , மெகா திருவாதிரை நடன நிகழ்ச்சியை நடத்தி , உலக சாதனை படைத்துள்ளது . குடும்பஸ்ரீயின் 7,027 உறுப்பினர்கள் கல்லூரி மைதானத்தில் கூடி பாரம்பரிய குழு நடன வடிவத்தை நிகழ்த்தினர் . இந்த நடன வடிவம் பொதுவாக மலையாள மாதமான சிங்கம் மாதத்தில் ஓணம் பண்டிகையின் போதும் , எப்போதாவது தனு மாதத்திலும்   இது நிகழ்த்தப்படுகிறது . இந்நிகழ்ச்சியை வருவாய்த் துறை அமைச்சர் கே . ராஜன் தொடங்கி வைத்து , குடும்பஸ்ரீ மகளிர் மேம்பாட்டிற்கான முன்மாதிரி என்று பாராட்டினார் , உலகின் மிகப்பெரிய மகளிர் நெட்வொர்க் என்ற அந்தஸ்தை எடுத்துரைத்தார் . சுற்றுலாத் துறை , மாவட்ட நிர்வாகம் , மாநகராட்சி ஆகியவை இணைந்து மாவட்ட ஓணம் கொண்டாட்டத்தை நடத்தின .   தற்போது கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெறுவது குறித்து ஏற்பாட்டாளர்கள் ஆலோசித்து வருகின்றனர் ...