முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

டிசம்பர், 2022 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

பழைய கணிப்பொறி பொருட்களில் கிறிஸ்மஸ் குடில்..

 பழைய கணிப்பொறி பொருட்களில் கிறிஸ்மஸ் குடில்..  அசத்திய புதுச்சேரி உலக சாதனை யாளர்!  புதுச்சேரி, அரியாங்குப்பம், உப்புகார வீதியில் வசிக்கு ம்  சுந்தரராசு அவர்கள்  அரசுப்  பள்ளி நுண்கலை ஆசிரியர். இவர் ஆண்டுதோறும் விதவிதமான பொருட்களை கொண்டு தனது வீட்டில் கிறிஸ்துமஸ் குடில் அமைப்பது வழக்கம்.இந்த வருடம் 10 -வது முறையாக வித்தியாசமான முறையில் இன்றைய சூழலுக்கு ஏற்றவாறு டிஜிட்டல் இந்தியாவை போற்றும் வகையில் கம்யூட்டர் மற்றும் பழுதடைந்த கழிவு மின்னணு பொருட்களை கொண்டு கிருஸ்துமஸ் குடில் செய்து உள்ளார். சூழலுக்கு ஏற்றவாறு குடில் இந்து மதத்தினை பின்பற்றி வரும் நோணாங்குப்பம் மேல் நிலைப்பள்ளியில் நுண்கலை ஆசிரியர்,  ஒவ்வொரு ஆண்டும் சுற்று சூழலுக்கு ஏற்றவாறு குடில் அமைத்து வருவதை வழக்கமாக கொண்டுள்ளார்.  முந்தைய சாதனைகள் இதற்கு முன்பு  ஒரு கன செ.மீட்டரில் கிறிஸ்துமஸ் குடில் செய்து அசிஸ்ட் உலக சாதனை படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.அதேபோல் உணவில் காய்கறிகளை அதிகம் சேர்த்து கொள்ள வேண்டும் என்ற விழிப்புணர்வு  மூலம் காய்கறிகளான கிருஸ்துமஸ் குடில், பிளாஸ்டிக் பயன்பாடு மற்றும் மறு சூழற்சி விழிப்புணர்வு 

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம்

புத்தகம் உங்கள் நண்பன்  இன்று தலை குனிந்து என்னை படித்தால் நாளை தலை நிமிர்ந்து வாழ வைப்பேன்- புத்தகம்.  இந்த வாசகத்தை நாம் அனைவரும் அறிந்து இருப்போம். பொது அறிவு,வரலாறு, தொழில்நுட்பம்,  கலை, மொழி, புராணம் என அனைத்து வகையான தகவல்களையும் புத்தகங்கள் வழியாக தெரிந்து கொள்ள,  வாழ்வை நல்வழியில் கொண்டு செல்வதற்கு புத்தகம் ஒரு சிறந்த நண்பனாக திகழ்கிறது. எனவே, இன்றைய தலைமுறையினரிடம் புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை நாம் சிறுவயதில் இருந்தே கற்றுக்கொடுக்க வேண்டும். இதனால் அறிவு விருத்தி அடையும். நமக்கு தேவையான, பயனுள்ள புத்தகங்களை தேர்ந்தெடுத்து படிக்க வேண்டியது முக்கியம். ‘இன்றைய மாணவ செல்வங்கள்  நாளைய தலைவர்கள்’ என்று கூறுவார்கள். அன்றைய தலைவர்கள் அதிகமான புத்தகங்களை வாசிப்பதன் மூலமாக வாழ்வில் உயர்ந்ததை யாராலும் மறுக்க முடியாது. எனவே பாடப்புத்தகங்கள், செல்போன்களை கடந்து புத்தகங்களை வாசிக்க பள்ளிக்கூடங்கள், கல்லூரிகளில் மாணவர்களை ஊக்கப்படுத்த வேண்டும். அந்த வகையில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர் சங்கம் தொடந்து இந்த பணியை நிகழ்த்தி  வருகிறது  தமிழ்நாடு முற்போக்கு  எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம்

விவேகானந்தா வித்யாலயாவில் வித்தியாசமான திருவிழா

 விவேகானந்தா வித்யாலயா வில் வித்தியாசமான கலை திருவிழா  பழனி சூப்பர் ஆர்ட்ஸ் அகாடமியும்,பழனி வர்ஷா சித்தா கிளினிக்கும் இணைந்து வழங்கிய ஆர்வமுள்ளவர்கள் அனைவரும் பங்கு பெற்ற மாநில அளவிலான ஓவியப்போட்டி மற்றும் ஓவியக்கண்காட்சி, ஒவியங்கள் விற்பனை நிகழ்வு பழனியில் உள்ள விவேகானந்தா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது . தன்னம்பிக்கை வளர்க்க   12.11.2022 சரியாக 7.00 மணிக்குள் நுழைவுசீட்டுடன் , வரிசையாக நின்று அமைதியாக பிராத்தனை அறைக்கு சென்றனர்.அங்கு அரைமணி  நேர பிராத்தனைக்கு பிறகு உடற்பயிற்சியினை செய்து காண்பித்து போட்டியில் கலந்து கொள்ள வந்தவர்களையும் செய்ய சொல்லி போட்டியினை தொடங்கி அனைவருக்குள்ளும் இருக்கும்  தன்னம்பிக்கையினை வளரச்செய்தது.  நிகழ்ச்சி தொடக்கம்   நிகழ்ச்சியில் சூப்பர் ஆர்ட்ஸ் அகாடமியின் நிறுவனர் சின்னப்பாஅவர்கள்   வரவேற்புரை வழங்க, பள்ளியின் தலைமையாசிரியர் திரு. காசி ஆறுமுகம் அவர்கள் முன்னிலை வகிக்க, இந்நிகழ்வின் சிறப்பு விருந்தினராக  சித்த மருத்துவர் மகேந்திரன் அவர்கள்   பங்கேற்று கலந்து கொண்ட மாணவர்கள் அனைவருக்கும் மஞ்சப்பை மற்றும் ஆரோக்கிய கையேடையும்

தங்க மாளிகையில் துவக்க விழா

தங்க மாளிகையில் துவக்க விழா திண்டுக்கல் மாவட்டம், பழனி வட்டம் நவரத்னா தங்க மாளிகை ஆறாம் ஆண்டு துவக்க விழா கோலகலமாக கொண்டாடப்பட்டது. நவரத்னா தங்க மாளிகையில் ஆறாம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு மெர்சி பவுண்டேஷன் நிறுவனர்தன்னம்பிக்கை பேச்சாளர்  திருமதி. மெர்சி செந்தில்குமார் அவர்கள் கலந்து கொண்டு சாதனையாளர்களுக்கு சான்றிதழும் பரிசு கோப்பையும் வழங்கி கௌரவிக்கப்பட்டு,ஊக்கபடுத்தினா ர் என்பது குறிப்பிடத்தக்கது. அபினவ் பிரத்யூஸ் குட்டி ராமானுஜம் என்று பழனிக்கு பெருமை சேர்த்துக் கொண்டிருக்கும் சாதனையாளர் பழனி அக்ஷயா அகாடமி பள்ளியில் மூன்றாம் வகுப்பு பயின்று வருகிறார் இவரது பெற்றோர்கள் இருவருமே கணிதவியல் பட்டதாரி பணியாற்றி வருகின்றனர்   அபார திறமைகளோடு வலம் வந்து கொண்டிருக்கும் இவர் பிரபல தொலைக்காட்சிகளிலும் இடம்பெற்று இன்று பள்ளி மற்றும் கலை நிகழ்ச்சிகளுக்கு சிறப்பு விருந்தினராக பங்கு பெற்று அவருடைய திறமைகளை வெளிப்படுத்திக் கொண்டு இருக்கிறார். மேலும் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த இவர்  விரைவில் கின்னஸ் உலக சாதனையும் நிகழ்த்த உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவருடைய மூத்த சகோதரர் விபுல்