முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த விவசாயி சாதனை

மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த விவசாயி சாதனை மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவர், குப்பையில் தூக்கியெறியப்படும் குளூக்கோஸ் பாட்டில்களை விவசாயத்திற்குப் பயன்படுத்திச் சாதித்துள்ளார். நீரின்றி வாடும் பயிர்களை எப்படி காற்றப்போகிறோம் என்ற கவலையில் இருந்த விவசாயி பாரியா, வேளாண் நிபுணர்கள் உதவியுடன் சாதித்துள்ளார். வறட்சியால் வாடும் தானியப் பயிர்களைக் காப்பாற்ற சொட்டு நீர்ப்பாசனத்திற்கு குளூக்கோஸ் பாட்டில்களைப் பயன்படுத்தலாம் என்று நேஷனல் அக்ரிகல்ச்சுரல் இன்னோவேஷன் புராஜெக்ட் அமைப்பைச் சேர்ந்த வேளாண் விஞ்ஞானிகள், ஆலோசனை தெரிவித்தனர். இந்தப் புதுமையான சொட்டுநீர்ப் பாசனம் மூலம் ஒரு ஹெக்டேருக்கு விவசாயி பாரியா, 15,200 ரூபாய் லாபம் பார்த்திருக்கிறார். பயிர்களைக் காப்பாற்றியதோடு மட்டுமல்ல, நீரையும் வீணடிக்காமல் பயன்படுத்தி நீர் மேலாண்மை செய்திருக்கிறார். மத்தியப்பிரதேச மாநிலத்தில் பழங்குடி மக்கள் நிறைந்த ஜாப்பூவா மாவட்டத்தில் தானியங்களையும் காய்கறிகளையும் போதிய நீரில்லாமல் விவசாயம் செய்ய முடியாத சூழல். இதனையடுத்து, ரமேஷ் பாரியா போன்ற விவசாயிகள் புதுமையான நீர்ப்பாசன முறைகளுக்கு மாறியதால் வ...

விதை பந்து

விதை பந்து ₹ 4 லட்சம் மதிப்புள்ள விதை விதைப்பு இயந்திரம்... ₹ 32 ஆயிரம் விலையில் உருவாக்கி சாதித்த கோவில்பட்டி பொறியியல் பட்டதாரி... சந்தையில் தற்போது ₹ 4 லட்சம் மதிப்புள்ள விதை விதைப்பு இயந்திரத்தை 32 ஆயிரம் ரூபாய்க்கு உருவாக்கி சாதித்துள்ளார் கோவில்பட்டி பொறியியல் பட்டதாரி.. என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில் ஏன் கையேந்த வேண்டும் வெளிநாட்டில் என்று மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் ஒரு திரைப்படத்தில் பாடுவார். விவசாயிகளை மனதில் வைத்து அவர் அன்று பாடியது பாடலாக இருந்தாலும், அது தான் உண்மை நிலை என்று உணரும் காலம் வெகு தொலைவில் இல்லை. இன்றைய நவீன உலகத்தில் விவசாயத்தினை நாம் மறந்தாலும், நமக்கு உணவு அளித்து வருவது விவசாயிகள் தான் என்றால் மிகையாகது.  விவசாயத்தில் போதிய லாபம் இல்லை, போதிய ஆள்கள் இல்லை என்ற குறைகள் ஒரு புறம் இருந்தாலும், நவீன காலத்தில் நவீன இயந்திரங்களுடன் விவசாயத்தினை மேற்கொள்ள புத்தம் புதிய கண்டுபிடிப்புகள் வந்து கொண்டு தான் இருக்கிறது.  அந்த வகையில் 4 லட்ச ரூபாய்க்கு விற்பனையாகும் விதை விதைப்பு இயந்திரத்தினை வெறும் 32 ஆயிரம் ரூபாய்க்கு விவசாயிகளுக்கு கொடுக்கும் ...

அமைதி என்பதை புரிந்து கொள்வோம்.

அமைதி என்பதை புரிந்து கொள்வோம். அனைத்தும் அமையப் பெற்று எந்தவித தொந்தரவு இல்லாத ஒரு சூழலில் வாழ்வது ஒன்றும் அமைதி அல்ல. அது ஒரு வாழ்க்கையும் அல்ல. ஓசையில்லாத ஓர் இடத்தில் உட்கார்ந்து யோசிப்பதல்ல. “புறச் சூழல்களால் பாதிக்கப்படாமல் இருப்பதுதான் உண்மையான அமைதி ”  ஆயிரம் துன்பத்திற்கு நடுவே,“நிச்சயம் ஒரு நாள் விடியும்” என்று விடா முயற்சியுடன் தினசரி உழைத்துக் கொண்டு வருகிறார்களே, அவர்களிடம் இருப்பதுதான் அமைதி. எத்தனையோ தொல்லைகள் யார் தந்தாலும், “எனக்கு நேரும் மான, அவமானத்தை  விட,' நான் எட்ட வேண்டிய இலக்கே எனக்கு பெரிது” என்று எதையும் பொருட்படுத்தாது கடந்து போய்க் கொண்டு இருக்கிறார்களே, அவர்கள் உள்ளத்தில் உள்ளதுதான் உண்மையான அமைதி. சீனாவில், *அமைதி* என்ற தலைப்பில் ஓவியப்போட்டி நடத்தப்பட்டது. அமைதியான நதி, ஆளரவம் இல்லாத பூங்கா, சலனமில்லாத குளம், சந்தடியில்லாத சாலை என்று பல்வேறு ஓவியங்கள் போட்டிக்கு வந்து இருந்தன.  ஆனால் போட்டியை அறிவித்த அரசன், இடி மின்னல், புயல், கடுமையான மழை, மரங்களின் பேயாட்டம், கடலின் சீற்றம், காட்டு விலங்குகளின் கூக்குரல், தலை தெறிக்க ஓடும் மக்கள் காணப்படு...

கபசுர குடிநீர் விழிப்புணர்வு

கபசுர குடிநீர் விழிப்புணர்வு  பழநியை 16.05.2020 அடுத்த ஆண்டியநாயக்கன்  வலசு பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சாமித்துரை தலைமையில் கபசுரக்குடிநீரை அரசு டாக்டர் மகேந்திரன் பொதுமக்களுக்கு வழங்கினார்.உடன் சமூக ஆர்வலர் ஹலோடெய்லர் நடராஜன்.மற்றும் தமிழ்புலிகள் கட்சியினர் செல்லமுத்து.இரணியன்.சுரேஷ், ஒண்டி வீரன் கலந்து கொண்டனர். பொதுமக்கள்  அனைவரும்  சமூக இடைவெளி விட்டு கடை பிடித்தனர். ---‐------------------------------------------------------------------- பழநியை அடுத்த பெரிச்சிபாளையத்தில்  உள்ள பொதுமக்களுக்கு முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சாமித்துரை தமையில் கபசுரக்குடிநீரைஅரசு டாக்டர் மகேந்திரன் பொதுமக்களுக்கு வழங்கினார்.உடன் சமூக ஆர்வலர் ஹலோடெய்லர் நடராஜன்.மற்றும் தமிழ்புலிகள் கட்சியினர்செல்லமுத்து.இரணியன்.சுரேஷ். ஒண்டி வீரன் கலந்து கொண்டனர். பொதுமக்கள்  அனைவரும்  சமூக இடைவெளி விட்டு கடை பிடித்தனர். #DailyNews   #sunamisudarmonthlymagazine #subeditor #umjwa #palani #umjwa #subeditorsuriya #dcb...

பழனி அரசு சித்தமருத்துவரின் மகத்துவம்

 பழனி  அரசு சித்தமருத்துவரின் மகத்துவம்  கொரானா ஊரடங்கு காலகட்டத்தில் ஒவ்வொரு பகுதிகளாக சென்று மக்களுக்கு விழிப்புணவு ஏற்படுத்தியது மட்டுமில்லாது மக்களுக்கு தன்னம்பிக்கையை   வளர்த்திய அரசு சித்த  மருத்துவர் இதுவரை சுத்துப்பட்டி கிராமங்களுக்கு சென்று சித்தா குறித்து சிறப்புரை ஆற்றியுள்ளார் . கோம்பைப்பட்டி இன்று 12.05.2020 காலை 8 மணியளவில்  கோம்பைப்பட்டி பட்டாளம்மன் கோயில் அருகில் நோய் எதிர்ப்பு சக்திக்காக கப மற்றும் நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டது.  இந்த நிகழ்வில் அரசு சித்தமருத்துவர் மகேந்திரன்  ஹலோ டெய்லர் மூர்த்தி முனியப்பன் சின்னத்தம்பி கருப்புச்சாமி  முருகன் ஆகியோர் கலந்துகொண்டனர்.  கணக்கன்பட்டி   இன்று 12.05.2020 காலை மதுரைவீரன் கோயில்தெருவில் நோய்எதிர்ப்பு சக்திக்கு கப மற்றும் நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டது.இந்த நிகழ்வில் அரசு சித்தமருத்துவர் மகேந்திரன்  ஹலோ டெய்லர்  தர்மராஜ் இரணியன் காளிதாஸ் மூர்த்தி ஆகியோர்  கலந்துகொண்டனர். புது ஆயக்குடி இன்று புது ஆயக்குடி 8 வது வார்டு...

தலைமுடியை தானமாக வழங்கிய பழனி செய்தியாளர்

  தலைமுடியை தானமாக வழங்கிய பழனி செய்தியாளர்    பழனியை சேர்ந்த சத்யம் டி .வி நிருபர்  கார்த்திக்கேயன் அவர்கள்   இரண்டரை வருடங்களாக வளர்த்திவந்த முடியினை திருச்சி மாற்றுவோம் மாறுவோம் தொண்டு நிறுவனத்திற்கு வழங்கியுள்ளார். புற்றுநோயாளிகளுக்கு பல்வேறு வகைகளில் உதவ முடியும். அதில் ஒன்றுதான் தலைமுடி தானம். புற்றுநோய்க்கு சிகிச்சை எடுக்கும்போது, முடி உதிர்வது இயல்பாக இருக்கும். குறிப்பாக, கதிர்வீச்சு சிகிச்சை அளிக்கும்போது முடி அதிகமாகவே உதிர்ந்துவிடும். அப்போது அந்த நோயாளிகள் சமூகத்திலுள்ளோரை சந்திக்க தயங்குவார்கள்.இதனால் மன உளைச்சல் அதிகரிக்கிறது.  இதனை கையாள எண்ணி, தலைமுடியை கொண்டு "விக்" செய்து கொடுத்தால் இந்தப் பிரச்சனையில் இருந்து எளிதாக வெளியே வரலாம். என எண்ணி பல தொண்டு நிறுவனங்கள் விழிப்புணர்வு ஏற்படுத்துவதும்,தனமாக வழங்கக்கூடிய முடிகளை மொத்தமாக சேகரித்து விக் தயாரிக்கும் நிறுவனத்திற்கு அனுப்பி வைப்பது வழக்கம்.  அந்த வகையில்  பழனியை சேர்ந்த சத்யம் டி .வி நிருபர்  கார்த்திக்கேயன் அவர்கள்  இரண்டரை வருடங்களாக வளர்த்திவந்த முடியினை திருச்சி...