முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஜூன், 2020 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

பழனி ரோட்டரி சங்கம் சார்பாக 43 இன்ச் எல்இடி டிவி

பழனி ரோட்டரி சங்கம் சார்பாக 43 இன்ச் எல்இடி டிவி இன்று (30.06.2020)பழனி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு பழனி ரோட்டரி சங்கம் சார்பாக 43 இன்ச் எல்இடி டிவி 1 முதல் 12ம் வகுப்பு வரை உள்ள பாடத்திட்டத்தை மாணவிகளுக்கு தெளிவாகக் கற்றுத் தர ஏதுவாக வழங்கப்பட்டது. இந்நிகழ்விற்கு பழனி ரோட்டரி சங்கத் தலைவர் ரொட்டேரியன் பிரேம்நாத் தலைமை ஏற்று வழங்கினார். பள்ளியின் முதல்வர் அதனைப் பெற்றுக் கொண்டார் நன்றி தெரிவித்தார். இந்நிகழ்வில் முன்னாள் தலைவர்கள் திரு சேகர்பாபு திரு ஆனந்த்  திரு ரத்தினம் செயலாளர் பழனியப்பன் மற்றும் உறுப்பினர்கள் மற்றும் பள்ளி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.                         இணை ஆசிரியர்                                  ஆ.சூரியா                      சுனாமிசுடர் மாத இதழ்.              அகில உலக பன்முனை                      பத்திரிகையாளர் நலச்சங்க                  திண்டுக்கல் மாவட்ட தலைவர்.                      www.dcbworldrecords.com  #DailyNews    #sunamisudarmonthlymagazine #subeditor   #umjwa   #palani   #umjwa   #subeditorsuriya #dcbworldrecords     #adjudicatorteam    #ad

பழனி ரோட்டரி சங்கத்தின் சார்பாக பழனி அரசு மருத்துவமனைக்கு ரூபாய் 3.5 லட்சம் மதிப்பிலான கொரோனா தடுப்பு உபகரணங்கள்

பழனி ரோட்டரி சங்கத்தின் சார்பாக பழனி அரசு மருத்துவமனைக்கு ரூபாய் 3.5 லட்சம் மதிப்பிலான கொரோனா தடுப்பு உபகரணங்கள் சர்வதேச ரோட்டரி அமைப்பின் கிலோபல் கிரான்ஸ் திட்டத்தின் கீழ் இன்று வழங்கப்பட்டது.  இந்த நிகழ்விற்கு பழனி ரோட்டரி சங்க தலைவர் ரொட்டேரியன். பிரேம்நாத் தலைமை தாங்கினார் முதன்மை விருந்தினராக ரொட்டேரியன் சௌந்தரராஜன் மற்றும் செயலாளர் பழனியப்பன் மற்றும் முன்னாள் தலைவர்கள் திரு செந்தில்குமார்,ஆனந்த் மற்றும் ரோட்டரி உறுப்பினர்கள் மற்றும் அரசு மருத்துவமனையின் ஏனைய மருத்துவர்கள் கலந்து கொண்டனர். அரசு மருத்துவமனையின் முதன்மை மருத்துவ அதிகாரி டாக்டர் உதய குமார்  முன்னிலை வகித்து பழனி ரோட்டரி சங்கத்தின் இந்த உதவிக்கு தனது அரசு மருத்துவர்களுடன்  இணைந்து நன்றியையும் வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.                      இணை ஆசிரியர்                                  ஆ.சூரியா                      சுனாமிசுடர் மாத இதழ்.              அகில உலக பன்முனை                      பத்திரிகையாளர் நலச்சங்க                  திண்டுக்கல் மாவட்ட தலைவர்.                      www.dcbworldrecords.com 

வால்பாறையில் காட்டெருமை தாக்கியதில் இரண்டு தொழிலாளர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதி

வால்பாறையில் காட்டெருமை தாக்கியதில் இரண்டு தொழிலாளர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள பாரி அய்யர்பாடி அப்பர் பாரளை எஸ்டேட் தேயிலைதோட்டப் பகுதியில் எட்டாம் நம்பர் தேயிலைக்காட்டில் இன்று வழக்கம்போல் தோட்டத் தொழிலாளர்கள் தேயிலை தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்துள்ளனர். அப்பொது அருகே உள்ள வனப்பகுதியில் இருந்து காட்டெருமைகள் தோட்டத்திற்குள் புகுந்துள்ளது காட்டெருமைகள் தேயிலை தோட்டத்திற்குள் வருவதைக் கண்ட தோட்டத் தொழிலாளர்கள் ஓட்டம் பிடித்துள்ளனர். இதில் மணிமேகலை வயது 45 மற்றும் வள்ளியம்மாள் வயது 43 ஆகிய இரண்டு தோட்டத் தொழிலாளர்களை காட்டெருமை முட்டி தூக்கி வீசியுள்ளது உடனடியாக அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் காட்டெருமையை சத்தம் போட்டு விரட்டியுள்ளனர் .பின்னர் காயமடைந்த இரு பெண்களையும் வால்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்து அங்கு அவர்களுக்கு முதலுதவி அளிக்கப்பட்டது இதில் வள்ளியம்மாள் வயது 43 என்ற பெண்ணிற்கு தோள்பட்டை யில் பலத்த காயம் ஏற்பட்டதால் மேல்சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார

மகளிர் சுய உதவி குழுக்களுக்கு விழிப்புணர்வு

திண்டுக்கல் மாவட்டம் பழனி வட்டம் அமரபூண்டியில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கொரோனா தொற்று சம்பந்தமாக மகளிர் அமைப்பு ஒருங்கிணைப்பாளர் திருமதி பிரியாராஜன் அவர்கள் முன்னிலையில் மாலை சரியாக 5 மணி அளவில் விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது, இதில் சமூக இடைவெளி கடைபிடிக்கப்பட்டது. மேலும் தொற்று குறித்தும்  பேசப்பட்டது. மகளிர் சுய உதவி குழு தலைவி கலந்து கொண்டனர் சமூக இடைவெளி பின்பற்றுவது முக கவசம் அணிவது, கபசுர குடிநீர் அருந்துவது, நோய் எதிர்ப்பு சக்தி உணவுகள் உட்கொள்வது போன்ற  உடல்நலம் குறித்து உரையாடபட்டது குறிப்பிடத்தக்கது.#sunami sudar.. #சர்வதேச செய்திகள்   #அகில உலக பன்முனை பத்திரிக்கையாளர் நல சங்கம்   #dcbnews   #sunamisudar   #sunamisudarmonthlymagazine   #Adjudicatorsuriya                       இணை ஆசிரியர்                                  ஆ.சூரியா                      சுனாமிசுடர் மாத இதழ்.              அகில உலக பன்முனை                      பத்திரிகையாளர் நலச்சங்க                  திண்டுக்கல் மாவட்ட தலைவர்.                      www.dcbworl

அகில உலக பன்முனை பத்திரிக்கையாளர் நல சங்கம் சார்பில் மரியாதை நிமித்தமாக சந்திப்பு

25.06.2020பழனியில் புதிதாக பதவியேற்றிருக்கும் டிஎஸ்பி சிவா அவர்களை மரியாதை நிமித்தமாக பழனி சுனாமி சுடர் மாத இதழ் குடும்பத்தாரின் சார்பாகவும், அரசு பார்வை தினசரி நாளிதழ், உங்களின் முதல் குரல் தினசரி நாளிதழ், தினவேல் தினசரி நாளிதழ் மற்றும் அகில உலக பன்முனை பத்திரிக்கையாளர் நல சங்கம் சார்பாக கௌரவித்த தருணம். மாவட்ட செய்தியாளர் ஆதிமூலம், பழனி செய்தியாளர் லோகுபாண்டி,சூரியா (சுனாமி சுடர் இணை ஆசிரியர் )ஆகியோர் கலந்து கொண்டனர்.. #சர்வதேச செய்திகள்   #அகில உலக பன்முனை பத்திரிக்கையாளர் நல சங்கம்   #dcbnews   #sunamisudar   #sunamisudarmonthlymagazine   #Adjudicatorsuriya

பல்ஸ் ஆக்சிமீட்டர் மாவட்டம‌ காவல் துறை கண்காணிப்பாளர் திரு.இரா.சக்திவேல் அவர்கள் வழங்கினார்

25.06.2020 திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வருவதால் திண்டுக்கல் மாவட்ட காவலர்களின் பாதுகாப்பிற்காகவும், காவலர்கள் தங்களை சுயபரிசோதனை செய்து நாடித்துடிப்பு மற்றும் நுரையீரலில் உள்ள ஆக்சிஜன் அளவை தெரிந்து கொள்வதற்கும், திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து சட்ட ஒழுங்கு காவல் நிலையம், அனைத்து போக்குவரத்து காவல் நிலையம், அனைத்து மகளிர் காவல் நிலையம், திண்டுக்கல் ஆயுதப்படை மற்றும் அனைத்து காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகம் ஆகியவற்றிற்கு " பல்ஸ் ஆக்சிமீட்டர் " ஒன்று வீதம் மொத்தம் 70 திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.இரா.சக்திவேல் அவர்கள் வழங்கினார்கள். . #சர்வதேச செய்திகள்   #அகில உலக பன்முனை பத்திரிக்கையாளர் நல சங்கம்   #dcbnews   #sunamisudar   #sunamisudarmonthlymagazine   #Adjudicatorsuriya

நல்ல விதைகளை விதைப்போம்

ஜுன் 26,  கரூர் மாவட்டம் விதைகள் அறக்கட்டளை சார்பில் நான்காவது  நாளாக  தண்ணீர்பள்ளி,  சக்தி நகர் பகுதிகளில்  மரக்கன்றுகளை  நடப்பட்டன.       மரக்கன்றுகளை நடும்  நிகழ்வில்  எனது பள்ளி படிப்புக்கால  நண்பன்,  பள்ளி ஆசிரியரான திரு. கார்த்திக் அவர்கள் இன்று முன்னிலையேற்று   மரக்கன்றுகளை நட்டு வைத்தார்..         மரக்கன்றுகளை நட உதவியாக இருந்த விதைகள் அறக்கட்டளை தன்னார்வலர்கள்  மதார்ஷா, நவீன், தினேஷ்குமார்,  தண்டபாணி, வசந்த், ஜீவானந்தம், ராஜ்குமார், இயற்கை ஆர்வலர்கள் &  நல்உள்ளங்களுக்கும் ஆகிய அனைவருக்கும்  ச.சந்துரு நன்றியை தெரிவித்து கொண்டார்.                        இணை ஆசிரியர்                                  ஆ.சூரியா                      சுனாமிசுடர் மாத இதழ்.              அகில உலக பன்முனை                      பத்திரிகையாளர் நலச்சங்க                  திண்டுக்கல் மாவட்ட தலைவர்.                      www.dcbworldrecords.com 

Book published

Dear UMJWA Team, Every month publishing Sunami Sudar Magazine a interesting challenge, Now we are facing great challenge like facing COVID-19 and publishing magazine. We all know from collecting news, content writing, DTP, Designing wrapper, Proof reading, Printing, Distribution, Circulation all section we face hurdles because of Corona Crisis. With great team support we achieved June month edition. So appreciating team effort and Mr. A. Suriya,We went and issued a printed magazine to Late J. Pradeep, elder son Master P. Prajinesh received in presence of family members. Once again thank you team for the great support and hard work.Thanks, Sunami Sudar Management.21/06/2020. #DailyNews    #sunamisudarmonthlymagazine #subeditor   #umjwa   #palani   #umjwa   #subeditorsuriya #dcbworldrecords     #adjudicatorteam    #adjudicator    #dcbnews #Newtalents   #dcbCreativity     #dcbindia     #dcbtalents   #dcbadjudicator     #dcbnews     #dcbrecords    #Creator     #explore #dcbinte

பிறந்தநாள் கொண்டாட்டம்

19/06/2020 இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் எழுச்சிமிகு இளம் தலைவர் திரு ராகுல் காந்தி அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு  பழனி வட்டாரம் பாலசமுத்திரத்தில் மக்களுக்கு இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் குணசேகரன்MBA.,LLB.,அவர்களால் நோய் எதிர்ப்பு சக்தி பானமான கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டது மற்றும் பாலசமுத்திரம் காங்கிரஸ் பேரூர் தலைவர் திரு முருகானந்தம் அவர்களால் காலை உணவாக பொங்கல் மக்கள்  அனைவருக்கும்  வழங்கப்பட்டது . நகர தலைவர் முத்துவிஜயன் நகர துணைத் தலைவர் திரு ஜெயக்குமார் பொதுச் செயலாளர் திரு தேவேந்திரன் மேற்கு வட்டார தலைவர் திரு ராஜேந்திரன்  ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர் .                           இணை ஆசிரியர்                                  ஆ.சூரியா                      சுனாமிசுடர் மாத இதழ்.              அகில உலக பன்முனை                      பத்திரிகையாளர் நலச்சங்க                  திண்டுக்கல் மாவட்ட தலைவர்.                      www.dcbworldrecords.com 

வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி

பழனி சரக காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலக வளாகத்தில் திண்டுக்கல் மாவட்டம் பழனி உட்கோட்ட காவல் துறை சார்பாக கொரோனோ தொற்று காரணமாக மக்கள் பாதுகாப்பு பணியில் தன்னை இணைத்துக் கொண்டு பல்வேறு இன்னல்களை இன்முகத்துடன் நாள்தோறும் சந்தித்து வந்த நிலையில் சென்னை தி.நகர் பகுதியில் தொற்று காரணமாக இரவு பகல் பார்க்காமல் அயராது உழைத்து மக்களை பாதுகாத்து வந்த தி.நகர் காவல் நிலைய ஆய்வாளர் பாலமுரளி எதிர்பாராதவிதமாக  உயிரிழந்துள்ளார். அவரின் நேர்மையான பணிக்கு வீரவணக்கம் செலுத்தும் விதமாக பழனி சரக காவல் துணை கண்காணிப்பாளர் விவேகானந்தன் தலைமையில் 50க்கும் மேற்பட்ட காவலர்கள் உயிரிழந்த பாலமுரளிக்கு செம்மார்ந்த வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது..                          இணை ஆசிரியர்                                  ஆ.சூரியா                      சுனாமிசுடர் மாத இதழ்.              அகில உலக பன்முனை                      பத்திரிகையாளர் நலச்சங்க                  திண்டுக்கல் மாவட்ட தலைவர்.                      www.dcbworldrecords.com 

கற்பக விருட்சம் அறக்கட்டளை மூலம் விதவைப்பெண்களுக்கு கொரோனா நிவாரண உதவி

கற்பக விருட்சம் அறக்கட்டளை  மூலம்  விதவைப்பெண்களுக்கு கொரோனா நிவாரண உதவி    சென்னை கற்பக விருட்சம் அறக்கட்டளையின்  சார்பாக கொரோனா தொற்றுயிர் ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு அத்தியாவசிய பொருட்கள் தமிழகம் முழுவதும் வழங்கப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சிக்கு அருகிலிருக்கும் வெங்கட்நாயக்கன்பட்டியிலிருக்கும் முத்துலட்சுமிஅழகு  அவர்கள்  வெங்கட் நாயக்கன்பட்டி மற்றும் அடைக்கம்பட்டி கிராமத்திலிருக்கும் 30க்கும் மேற்பட்ட ஏழை விதவைப்பெண்களுக்கு உதவிடவேண்டி விண்ணப்பித்தார். அதன்  அடிப்படையில் இன்று  (15.6.2020) காலை 11.30 மணிக்கு  வெங்கட்நாயக்கன்பட்டி கிராமத்தில்  கொரோனா நிவாரணம்(அரிசி/மளிகை/காய்கறிகள்/சுமார் 15 ஆயிரம் மதிப்பில்) வழங்கப்பட்டது.விதவை பெண்களும் மனைவியை இழந்த ஆண்களும் நிவாரணப் பொருட்களை வாங்கி சென்றனர். முடிவில் கிராம மக்கள் சார்பாக திருமதி        முத்துலட்சுமிஅழகு கற்பக விருட்சம் அறக்கட்டளைக்கு நன்றி தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் சமூக இடைவெளி கடைபிடிக்கப்பட்டது.                             இணை ஆசிரிய

மாற்றுத்திறனாளிகளுக்கு

16/06/2020 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூபாய் 1,000 வழங்க தமிழக முதல்வர் உத்தரவு அடையாள அட்டை வைத்துள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு ரூபாய் 1,000 வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். இது தொடர்பாக முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஊரடங்கு ஜூன் 30- ஆம் தேதி வரை அமல்படுத்தப்பட்டுள்ளதால் மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூபாய் 1,000 வழங்கப்படும். ஊரடங்கு காலத்தில் மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதாரம் கருதி நிவாரண நிதி வழங்கப்படுகிறது" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ள நிலையில் வேலை இன்றி பலர் சிரமப்பட்டு வருகின்றனர்.உயிரிழப்பு மிகக் குறைவாகவும் இருந்து வருகிறது. எனவே ஊரடங்கு காலத்தில் மாற்றுத் திறனாளிகளின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு அடையாள அட்டை வைத்துள்ள 13.35 லட்சம் மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.1000 நிவாரணமாக வழங்க உத்தரவிட்டுள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.                          இணை ஆசிரியர்                                  ஆ.சூரியா                      சுனாமிசுடர் மாத இதழ்.  

நெகிழ்ந்த நிகழ்வு,

 கொரோனா காலகட்டத்தில் சமூக விழிப்புணர்வு  மக்களுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக நிவாரண பொருட்களை வழங்கி கொண்டிருக்கும் கஞ்சநாயக்கன்பட்டி சேர்ந்த மாநில ஒருங்கிணைப்பாளர் குணசேகரன் இவரின் சமூக சேவை குறித்து சில நிகழ்வுகள்      இவர் சில நாட்களாகவே கபசுரக் குடிநீர் அத்தியாவசிய பொருட்கள் வழங்குவது டாஸ்மார்க் கடை திறந்த போது மது பிரியர்களுக்கு மாசு மற்றும் விழிப்புணர்வு கொடுத்து விழிப்புணர்வை ஏற்படுத்தி மக்கள் மனதில் இடம் பிடித்தவர் மிகவும் அன்பானவர் உதவும் மனப்பான்மை கொண்டவர் இவர் சமீபத்தில் கஞ்சநாயக்கன்பட்டி யைச் சேர்ந்த சுப்பிரமணி மகள் கற்பகவள்ளி என்பவருக்கு மாற்று அறுவை சிகிச்சைக்கு பழைய கல்லூரி நண்பர்களின் உதவியோடு ரூபாய் 10,000 நன்கொடையாக அளித்தார் மேலும் மாற்றுத்திறனாளிகளுக்கு இசைக்கலைஞர்களுக்கு கணவரை இழந்த விதவைகளுக்கு என கஷ்டப்படுபவர்களுக்கு நேரடியாகச் சென்று பொருட்களை வழங்கினார்                         இதில் நெகிழ்ந்த நிகழ்வு ஒன்றை நம்மோடு பகிர்ந்து கொண்டார் தமிழ்நாடு காங்கிரஸ் மாநில ஒருங்கிணைப்பாளர் குணசேகரன் M.A.,BL., கூ