முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

மே, 2020 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

important details

*பழனியில் காத்திருப்பு போராட்டம்

*பழனியில் காத்திருப்பு போராட்டம்*  ஓட்டுநர், நடத்துனர் மே மாதஊதியம் வழங்க  அரசு கூறியதை ஏற்க மறுத்து கழக அதிகாரிகள் சம்பளப் பிடித்தம் செய்ய வழிவகை செய்ததை கண்டித்தும், முழுமையான சம்பளம் வழங்க கோரியும், பழனி 1 கிளையின் கூட்டுக் குழு சார்பாக அனைத்து தொழிலாளர்கள் தோழர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு கேட்டுக் கொண்டதற்கிணங்க தொழிலாளர்கள் தற்போது பணிமனை முன்பு காத்திருப்பு போராட்டம் நடத்திக் கொண்டுள்ளனர்.LPFசார்பாககிளைச்செயலாளர் நாட்டுத் துரை CITUசார்பாககிளைச் எனசெயலாளர் பாலு AALLF  VCK. கிளைச் செயலாளர் Aமுத்துராஜாமற்றும் போக்குவரத்து தொழிலாளர்களும் கலந்துகொண்டனர்.....                       சிறப்பு செய்தியாளர்                                    ஆ.சூரியா                      சுனாமிசுடர் மாத இதழ்.              அகில உலக பன்முனை                      பத்திரிகையாளர் நலச்சங்க                  திண்டுக்கல் மாவட்ட தலைவர்.                      www.dcbworldrecords.com 

Black drongo அல்லது King crow

Black drongo அல்லது King crow  வெட்டுக்கிளி பற்றி பேசும் போது இவனை பற்றி பேசாமல் இருக்க முடியாது... ஆமாம் இவனின் பிரதான உணவே வெட்டுக்கிளி தான்...  இவர்கள் ஒரு மணி நேரத்திற்கு சுமார் 150 பூச்சிகளை வேட்டையாடி உண்பவர்கள்.   ஒரு நாளைக்கு எவ்வளவு பூச்சிகளை உண்ணுகிறார்கள் என நீங்களே கணக்கிட்டுக் கொள்ளுங்கள்.  வயிறு நிறம்பியபிறகு சாப்பிடும் பூச்சிகளை ஒன்றிரண்டாக அரைத்து வெளியில் கக்கிவிடுகிறார்கள். அப்படி கக்கிய பூச்சிகள் மண்ணிற்கு சிறந்த உரமாக செயல்படுகிறது. இவனை போன்றவர்களின் எண்ணிக்கை குறைய குறைய வெட்டுக்கிளிகளின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே இருக்கும்... அவன் தான் கரிச்சான் குருவி... இவனுக்கு மாட்டுக்காரன், இரெட்டைவால் குருவி, வால் நீண்ட கருங்குருவி என்றெல்லாமும் பெயர்கள் உண்டு. ஆங்கிலத்தில் இவனை Black drongo அல்லது King crow என்றழைப்பார்கள். விஞ்ஞான ரீதியாக இவனுக்களிக்கப் பட்ட பெயர் ‘Decrurus macrocercus என்பதாகும். இவனின் நிறம் பளபளவென மின்னும் கருப்பு நிறம். புறாவை விட சற்று சிறிதான உடல். நீளமான வால் சிறகுகள். அலகுகள் ஆரம்பிக்கும் இடத்தில் மீசை போன்ற ரோமங்கள். இந்த ரோமங்கள் பூச்சிகள் பற

ஓடை புறம்போக்கு ஆக்கிரமிப்பு நடவடிக்கை எடுக்குமா

*ஓடை புறம்போக்கு ஆக்கிரமிப்பு   நடவடிக்கை எடுக்குமா*  திண்டுக்கல் மாவட்டம் பழனி வட்டம் அமரபூண்டி கிராமத்திற்கு உட்பட்ட ஒரு ஏக்கர் என்பது செண்ட் ஓடை புறம்போக்கை மாற்றுத்திறனாளியின் மனைவி தனலட்சுமி என்பவர் உழவடை  செய்வதற்கு பழனி வட்டாட்சியரிடம் பதிவு அஞ்சல் மூலம் 2017 ல் அனுமதி கோரியிருந்தார் விசாரணையில் ஓடை புறம்போக்கு எனவே அனுமதி வழங்க முடியாது என நிராகரிக்கப்பட்ட நிலையில்,பழனி வண்டி வாய்காலைச்  சேர்ந்த பிரசன்னா என்பவர் ஓடை புறம்போக்கை இணைத்து ஆழ்துளை கிணறு குடியிருப்பு போன்றவற்றை அமைத்து அரசு சொத்தை அனுபவிப்பதோடு அரசு சொத்திற்கு குந்தகம் ஏற்படுத்தியுள்ளார்.இது வரை கண்டு காணாமல் அரசு செயல்படுகிறதா? நடவடிக்கை எடுப்பார்களா???என அமரபூண்டியைச் சேர்ந்த  சமூக ஆர்வலர் ரவிச்சந்திரன் கோரிக்கை வைத்துள்ளார். http://annaitamiltv.com/?p=15323                         சிறப்பு செய்தியாளர்                                    ஆ.சூரியா                      சுனாமிசுடர் மாத இதழ்.              அகில உலக பன்முனை                      பத்திரிகையாளர் நலச்சங்க                  த

இசை கலைஞர்களுக்கு செவி சாய்க்குமா????

 இசை கலைஞர்களுக்கு செவி சாய்க்குமா???? இசைக்கலையில் ஒருவித தேக்கம் ஊரிலே ஊரடங்குச் சட்டம், உள்நாட்டு நிலைமை காரணமாகக் கோயில்கள் எல்லாம் கவனிப்பாரற்றுத் திருவிழாக்கள் நிறுத்தப்பட்டதாலும், மேளதாளத்தோடு பகிரங்கமாக எந்த ஒரு நிகழ்ச்சியும் நடத்த முடியாததாலும், தவில் நாதஸ்வர இசைக்கலையில் ஒருவித தேக்கம் ஏற்பட்டிருக்கின்றது. இதைவிட தொழில் நுட்ப வளர்ச்சி காரணமாக நாதஸ்வர இசை பதிவு செய்யப்பட்டதால் பல நிகழ்ச்சிகளில் பதிவு செய்யப்பட்ட நாதஸ்வர இசைத் தட்டுக்களே மங்கல இசைக்காகப் பாவிக்கப்படுகின்றன. இதனால் தவில், நாதஸ்வரக் கலைஞர்களுக்குப் போதிய வருமானம் கடந்த காலங்களில் கிடைக்கவில்லை. இசை என்பது மொழிகளைக்கடந்த ஒரு தெய்வீக உணர்வு, தமிழ் காலாச்சாரத்தில் தனித்துவம் மிக்க இசைக்கருவியாக நாதஸ்வரமும், தவிலும் வகிக்கின்ற பங்கு மிகவும் முக்கியமானது. நாதஸ்வர இசையுடன்தான் அனேகமான தமிழர்களின் முக்கியமான மங்கல, மகிழ்சிகரமான நிகழ்வுகள் நிகழ்கின்றன.  மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் உத்தரவின் பேரில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையின் கீழ் 144 தடைச் சட்டம் 21 நாட்களுக்கு அமுலாகி நடைபெற்றுக் கொண்டிருக்க

மக்கள் சேவையில் சித்தமருத்துவர்

மக்கள் சேவையில் சித்தமருத்துவர் திண்டுக்கல் மாவட்டம் பழனி வட்டத்தில் நோய் நாடி நோய் முதல் நாடி ஆராயும் பாங்கு கொண்ட அரசு மருத்துவமனையில் சித்தா பிரிவில் தமிழக அரசின் சிறந்த சித்தமருத்துவ விருதுபெற்ற  மாமனிதன் டாக்டர் மகேந்திரன் அவர்கள்   பழனி மற்றும் அதைச்சுற்றியுள்ள பகுதிகளுக்கு   சித்த மருத்துவத்தை பிரபலமாக்கியவர். மருத்துவ பணியில் மருத்துவ பணியில்     மகத்தான பணியை இடைவிடாது மக்களுக்கு கொண்டு செல்ல முனைப்புடன் செயல்படும்  இவர். நோயாளிகளை கவனிக்கும் கனிவு.  எல்லாமே ஆச்சரியம். எல்லா நோய்க்கும் பாரம்பரிய வைத்தியம் உண்டு என்பதை இவர் விவரிப்பது வித்தியாசமாக இருக்கும். டெங்கு வைரல் காய்சல் வந்த போது நிலவேம்பு கசாயத்தை இலவசமாக அரசு மருத்துவமனையில் வைத்தார். இன்றும் எல்லா வார்டுகளிலும் நிலவேம்பு கசாயம் கேன்கள்  இருக்கும். பழனி பகுதியில் டெங்கு பரவாமல் இருந்ததுக்கு இது ஒரு முக்கிய காரணம் எனலாம்.  இப்போது கொரோனாவிற்கு கபசுர பொடி வியாபாரமான போது பழனி அரசு மருத்துவமனையில் கபசுர குடிநீரை இலவசமாகவும், அவசியமாகவும் கட்டாயம் பருக வேண்டும் மக்களிடம் தினமும் எடுத்துரைத்து விழிப்பு

இணையவழியில் கோவில் கட்டிடக்கலை பயிற்சி

இணையவழியில் கோவில் கட்டிடக்கலை பயிற்சி ராமநாதபுரம், அருங்காட்சியகத்தின் முக்கியத்துவத்தினை விளக்கும் விதமாக ஆண்டுதோறும் மே மாதம் 18-ந்தேதியன்று சர்வதேச அருங்காட்சியக தினமாக உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதனை 1977-ம் ஆண்டு முதல் சர்வதேச அருங்காட்சியக சங்கம் நடத்துகிறது. சமத்துவத்திற்கான அருங்காட்சியகங்கள் அதன் பன்முகத்தன்மை மற்றும் உள்ளடக்கம் என்பது 2020-ம் ஆண்டிற்கான கருப்பொருளாகும். கொரோனா ஊரடங்கு காரணமாக சர்வதேச அருங்காட்சியக தினத்தை முன்னிட்டு இந்தாண்டு கோவில் கட்டிடக்கலை ஓர் அறிமுகம் என்ற பயிற்சி முகாம் இணையவழியில் நடத்த திட்டமிடப்பட்டது. இதன்படி ராமநாதபுரம் அரசு அருங்காட்சியகமும், ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனமும் இணைந்து வாட்ஸ்-அப் மூலம் 10 நாட்கள் இப்பயிற்சியை நடத்தின. பயிற்சியை ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் ராஜகுரு நடத்தினார். கோவில்களின் தோற்றம், அதன் அமைப்பு, விமானம், கோபுரம் இவற்றின் உறுப்புகள் அவற்றின் வகைகளை பாண்டிய நாடு, சோழநாட்டு கோவில்களின் 300-க்கும் மேற்பட்ட புகைப்படங்களுடன் விளக்கிக்கூறினார். பங்கேற்பு இந்த பயிற்சியில்

தமிழ்வாணன் பிறந்த தினம்

தமிழ்வாணன் பிறந்த தினம் பிரபல இதழியலாளரும், துப்பறியும் நாவல்கள் படைத்தவருமான தமிழ்வாணன் பிறந்த தினம் இன்று (மே 22, 1926). தமிழ்வாணன் தமிழ்நாட்டின் இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள தேவகோட்டையில் வாழ்ந்த லெட்சுமணன் பிச்சையம்மை ஆச்சி தம்பதியருக்கு மகனாக 1926 மே 5-ஆம் நாள் பிறந்தார். பத்திரிகையில் உதவி ஆசிரியராக இராமநாதன் என்பது இவரது இயற்பெயர். பின்னாளில் தமிழ்த்தென்றல் திரு. வி.க. இவருக்கு "தமிழ்வாணன்" எனப் பெயரைச் சூட்டினார். படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு, திருச்சியில் சில காலம் வசித்தார். சாக்பீஸ் கம்பெனியில் வேலை செய்தார். எழுதுவதில் ஆர்வம் இருந்ததால், வல்லிக்கண்ணன் ஆசிரியராக இருந்த ‘கிராம ஊழியன்’ பத்திரிகையில் உதவி ஆசிரியராக சேர்ந்தார். பல எழுத்தாளர்களுடன் பழகும் வாய்ப்புக் கிடைத்தது. சில மாதங்களில் கிராம ஊழியன் ஆசிரியராய் பதவி உயர்வு பெற்றார். அதன் பின்னர் சென்னை வந்த தமிழ்வாணன் "சக்தி" என்ற மாத இதழை வெளியிட்டு வந்த வை.கோவிந்தன் தொடங்கிய "அணில்" என்ற குழந்தைகளுக்கான புதிய வார இதழில் ஆசிரியராகப் பொறுப்பேற்றார். "த

சாதனையாரின் விழிப்புணர்வு ஓவியம்

சாதனையா ள ரின் விழிப்புணர்வு ஓவியம்  - யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் 29.04.2020 நமக்கு ஒரு இன்பம் கிடைத்தால், அது நமக்கு மட்டும் வேண்டும் என்று நினைப்போம். ஆனால், பெரியவர்கள் அப்படி நினைக்க மாட்டார்கள். அவர்கள் பெற்ற இன்பத்தை இந்த உலகமும் பெற்று இன்புற வேண்டும் என்று நினைப்பார்கள். அதை போலவே ஓவியர்.முனைவர்ஜெயக்குமார்  ஓவியத்தின் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளார்.         இந்த ஓவியத்தை முகக் கவசம் அனைவரும் அனிந்து,தூய்மையான காற்றை சுவாசித்து கொரான எனும் தொற்றிலிருந்து முழுமையாக விடுபட விழிப்புணர்வோடு வீட்டிலிருப்போம்,விலகியிருப்போம், என சார்கோல் பென்சில் ஓவியம் வரைந்து விழிப்புணர்வு ஏற்படுத்துகிறார்.இந்த ஓவியங்களை பள்ளி கல்லூரிகளுக்கு கண்காட்சி நடத்த திட்டமிடப்பட்டுள்ளார்.                          சிறப்பு செய்தியாளர்                                    ஆ.சூரியா                      சுனாமிசுடர் மாத இதழ்.              அகில உலக பன்முனை                      பத்திரிகையாளர் நலச்சங்க                  திண்டுக்கல் மாவட்ட தலைவர்.                      www.dcbworldrecords.com 

சுமார் 3 வயது பிராணி மீட்பு

தேதி : 17.5.2020 இடம் : திண்டுக்கல் மாவட்டம், பழனி.            பழனியில் ஜவஹர் நகர் பெட்ரோல் பங்க் முன்பு அடையாளம் தெரியாத பால் வாகனம் ஒன்று சுமார் 3 வயது பிராணி ஒன்றின் மீது வேகமாக மோதி சென்றது. சம்பவ இடத்தில் அந்த பிராணியின் தலையில் (hole) ஆழமான காயம் ஏற்பட்டு அதே இடத்தில் சுருண்டு விழுந்தது. பெட்ரோல் பங்க்கில் வேலை செய்யும் தீபக் என்பவர் சரியாக 4.30p.m மணிக்கு (SKGSG) விலங்குகள் மற்றும் பறவைகள் நல பாதுகாப்பு அலுவலர்களுக்குத் தகவல் தெரிவித்தார். திரு. K. முத்துசாமி ஓவியர் HAWO - AWBI மற்றும் திரு. M. பார்த்த சாரதி HAWO - AWBI அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அந்த பிராணியை மீட்டு அரசு கால்நடை மருத்துவமனைக்கு மாலை 5.00 மணியளவில் எடுத்து சென்றனர். அங்கு பிராணிக்கு உரிய சிகிச்சையை உயர்திரு டாக்டர். செந்தில்குமார் அளித்தார். இப்பிராணி ( SKGSG ) விலங்குகள் பராமரிப்பு பகுதிக்கு எடுத்து செல்லப்பட்டது. பிராணியானது நன்கு குணமடைந்த பிறகு அதே பகுதியில் விடப்படும் என்பதை இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறோம். இப்படிக்கு, மத்திய அரசு (AWBI ), (SKGSG) விலங்குகள் மற்று

ஒத்துழைப்பு அளிக்க வேண்டுகிறோம்

ஒத்துழைப்பு அளிக்க வேண்டுகிறோம்    பழனி ஒன்றியம் அமரபூண்டி பஞ்சாயத்து சார்பில் கஞ்சநாயக்கன்பட்டி,பள்ளிகூடத்தான்வலசு,ரூக்குவார்பட்டி,அமரபூண்டி ஆகிய கிராமங்களுக்குள் கடந்த இருதினங்களில் கொரான தடுப்பு நடவடிக்கையாக கிருமி நாசினி தெளித்து பாதுகாப்பு அளித்து வரும் ஊராட்சி மன்றத்தலைவர் R.மனோகரன், துணைத்தலைவர் திரு கண்டிமுத்து  வார்டு உறுப்பினர் திரு.முத்துகுமார் அவர்களுக்கும், துப்புரவு பணியாளர்களுக்கும்  ஊர் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் சார்பாக நன்றி. தொடர்ந்து பொதுமக்கள் ஒத்துழைப்பு தருமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொண்டார்.                        சிறப்பு செய்தியாளர்                                    ஆ.சூரியா                      சுனாமிசுடர் மாத இதழ்.              அகில உலக பன்முனை                      பத்திரிகையாளர் நலச்சங்க                  திண்டுக்கல் மாவட்ட தலைவர்.             http://www.dcbworldrecords.com/

குளத்து நீர் திருட்டு நடவடிக்கை எடுப்பார்களா??

குளத்து நீர் திருட்டு நடவடிக்கை எடுப்பார்களா??                              22.04.2020 அமரபூண்டி   காளியப்பன்  மகன் தங்கராஜ் என்பவர் அமரபூண்டி பஞ்சாயத்து அலுவலகம் அருகே சர்வே எண் 285 நீர்தேக்க குளம்  உள்ளது.மழைகாலத்தில் நீர் தேக்கி வைத்து, குளத்தின் நடுவே அமைத்து மின் மோட்டார் மூலம் பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.  இந்நிலையில் குளத்தில் உள்ள நீரை நீண்ட நாட்களாக   வருவாய்த்துறையிடமோ, ஊராட்சிமன்றத்திடமோ எந்த அனுமதியும் பெறாமல் சட்டவிரோதமாக விவசாயத்திற்கு நீர் பாய்ச்ச  மததுக்கடியில் குழாய் அமைத்து மண்ணை போட்டு மூடி மக்களுக்கு கிடைக்கும் குடிநீரை திருடி சுயநலத்திற்காக பயன்படுத்தியுள்ளார். அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா என சமூக ஆர்வலர்கள்  கோரிக்கை வைத்துள்ளனர்.         சார் ஆட்சியர் திருமதி.உமா அவர்களும்,காவல்துறை ஆய்வாளர் திருமதி. முத்துலட்சுமி அவர்களும், கிராம நிர்வாக அலுவலர் திருமதி.சந்திரகலா அவர்களும் நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளனர்.                        சிறப்பு செய்தியாளர்                                    ஆ.சூரியா                      சுனாம

தூய்மை பணியாளர்களுக்கு உதவி

* தூய்மை பணியாளர்களுக்கு உதவி * 29.04.2020 திண்டுக்கல் மாவட்டம் பழனி வட்டம், அமரபூண்டி பஞ்சாயத்தில்,  கொரான  நோய் தொற்று ஏற்படாமல் இருக்க இரவு பகல் பாராது அயராது உழைத்து தூய்மை பணிகளை சிறப்பாக செய்து இதுவரை பாதுகாத்து வந்த தூய்மை பணியாளர்களுக்கு பழனி ஒன்றியம், * அமரபூண்டி பஞ்சாயத்து  சார்பாக சுமார் 30 பேருக்கு 1500 மதிப்பிலான அரிசி பருப்பு சர்க்கரை இதர பொருட்களை ஊராட்சி வளர்ச்சி அலுவலர் திரு.நாகராஜன்  BDO., பஞ்சாயத்து  தலைவர் திரு. ஆர்.மனோகரன், துணைத் தலைவர் திரு.கண்டிமுத்து ,  ஊராட்சி செயலர் திருமதி ஆர். சாந்தி மற்றும் திரு.காளிமுத்து EX தலைவர், திரு.சேனாதிபதி,திரு.சிவா Ex ஒன்றிய கவுன்சிலர், திரு.தங்கராஜ்,திரு.சுப்பிரமணி (கிழக்கு தோட்டம்), செல்வமணி, சந்திரன்,வடக்கு தோட்டம் திரு.சுப்பிரமணி,திரு.தங்கதுரை அ.இ.அ.தி.மு.க., முக்கிய உறுப்பினர்கள் மற்றும் வார்டு உறுப்பினர்கள் * ஆகியோர் கலந்துகொண்டு தூய்மைப் பணியாளர்களுக்கு  பொருள்கள் வழங்கினர்.இந்த நிகழ்ச்சியில் சமூக இடைவெளி கடைபிடிக்க பட்டது.நெகிழி பயன்படுத்தவில்லை .                        சிறப்பு செய்தியாளர்       

நேர்மறை எண்ண அலைகளை

நேர்மறை எண்ண அலைகளை பிரபஞ்சம் முழுவதும் நன்றியுடன் பரவ விடுவோம். ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் வருகின்ற கொரோனா நச்சுயிர் குறித்துத் திரும்பத் திரும்ப எதிர்மறை எண்ணங்களையே பிரபஞ்ச வான்காந்த களத்தில் (Universal Magnetic Field) அழுத்தமாக பதிவு செய்தால் கொரோனா நச்சுயிர் இன்னும் வலுப்பெறும். அச்சத்தாலும், கவலை உணர்ச்சியாலும் நாம் நோயெதிர்ப்பு ஆற்றலை இழக்கும் வாய்ப்பும் உள்ளது. எனவே, நேர்மறையான எண்ண அலைகளை வான்காந்தக் களத்தில் பதிவுசெய்வோம். நலம் பெறுவோம். கொரோனா செய்தியை படித்தாலோ, கேட்டாலோ கீழ்கண்ட நன்றி அலையை பரவ விடுவோம். 1. நான் நலமாக இருக்கிறேன் - இறைவா உனக்கு நன்றி. 2. என் குடும்பம் நலமாக இருக்கிறது - இறைவா உனக்கு நன்றி. 3. நான் சார்ந்திருக்கும் சமுதாயம் நலமாக இருக்கிறது - இறைவா உனக்கு நன்றி. 4. என் தமிழ்நாடு மாநிலம் நலமாக இருக்கிறது - இறைவா உனக்கு நன்றி. 5. என் இந்திய தேசம் நலமாக இருக்கிறது - இறைவா உனக்கு நன்றி. 6. நான் வாழும் இந்த வையகம் நலமாக இருக்கிறது - இறைவா உனக்கு நன்றி. 7. வாழ்க வையகம்! வாழ்க வையகம்!! வாழ்க வளமுடன்!!! - இறைவா உனக்கு நன்றி! நன்றி!! நன்றி!!!. கட

கலக்கும் காவல்துறை

*பழனியை கலக்கும் காவல்துறை*  கொரான  நோய் தொற்றிலிருந்து பாதுகாத்தலில்  மருத்துவ துறையோடு முக்கிய பங்கினை காவல்துறையும் பெற்றுள்ளது. அந்தவகையில் பழனியை சேர்ந்த துணை *கண்காணிப்பாளர் திரு விவேகானந்தன் அவர்கள்* பணியின் பற்றி சிறப்பாக சொல்லிட முடியும் இரவு பகல் பாராது சக காவல்துறை அதிகாரிகளான பழனி சரக காவல்துறை ஆய்வாளர் திரு.செந்தில்குமார் மற்றும் பழனி சரக துணை ஆய்வாளர் ரஞ்சித் குமார் அவர்களுகளையும், சமூக ஆர்வலர்கள் கந்தவிலாஸ் N.செல்வகுமார், பழனி அரிமா சங்கம் DR.விமல்குமார்,ரவிச்சந்திரன், Er.A.M.தங்கம் (நண்பர்கள் காவல்  திண்டுக்கல் ஒருங்கிணைப்பாளர்),வணிகர் சங்க பேரமைப்பு ஹக்கீம் ராஜா,சுரேஷ் Ex.M.C., காப்பான் அறக்கட்டளை   போன்ற  சமூக ஆர்வலர்களை இணைத்துக்கொண்டு தொடர்ந்து இன்றுவரை சலைக்காமல் பணியாற்றி வருவது நாம் அனைவரும் அறிந்ததே பழனி பஸ் நிலையத்தில் ரோட்டோரத்தில் தங்கியிருந்த அனைவரையும் பாதுகாப்பாக தங்க வைத்தது முதல் பேரிடர் காலத்தில் கனி வாகப்பேசுவது முதல் நிவாரண பொருட்கள் வழங்குதல் வரை ஒவ்வொன்றையும் ஆய்வு செய்து சிறப்பாக தலைமை ஏற்று பணியாற்றிய செயல்கள் அனைத்துமே பார

கபசுர குடிநீர் விழிப்புணர்வு 2

இன்று 18.04.2020காலை சின்னக்கலையம்புத்தூர் விவேகானந்த நகர் 1- வது வார்டில் நோய் எதிர்ப்பு சக்திக்கு கப சுர குடிநீர் வழங்கப்பட்டது . இந்த நிகழ்வில் அரசு சித்த மருத்துவர் மகேந்திரன்  தினகுரல் நிருபர் பரமராஜ்  1-வது வார்டு உறுப்பினர் முத்துராஜ் மற்றும் சமூக ஆர்வலர்கள் கணேசன் தங்கமலை அசோக்  தீபக் தினேஷ் பாஸ்கரன்  காளீஸ்வரன் சுரேஷ் ஆகியோர் கலந்துகொண்டனர். ----------------------------------------------------------------------- 18.04.2020 வெளிநாடு சென்று திரும்பி வீட்டில் தனிமைபடுத்தப்பட்டிருக்கும் நபருக்கு நோய் எதிர்ப்பு சக்திக்காக அவர்கள் வீட்டிற்கே சென்று கபசுர பொடி (Powder)  வழங்கப்பட்டது . ___________________________________________ இன்று 19.04.2020 காலை 7 .30 மணியளவில் புது ஆயக்குடி பெரிய பள்ளிவாசல் அருகில் சித்தா பிரிவு பழனி  மற்றும் மூங்கில்  பவுண்டேஷன் மக்கள் ஹெல்த்செண்டர் இணைந்து நோய் எதிப்பு சக்திக்காக சமூக இடைவெளி பின்பற்றி கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.  இதில் அரசு சித்தமருத்துவர் மகேந்திரன்  மூங்கில் பவுண்டேஷன் ரியாஸ் உசேன் முகமது